ரசிகர்களின் சந்தேகத்தை பிரியங்காவிடம் கேட்ட ராஜு... சிரித்தபடியே பதில் சொன்ன பிரியங்கா
சென்னை: பிரியங்கா மற்றும் நிரூப் நடந்து கொள்வதைப் பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருப்பதை ராஜு பிரியங்காவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.
ராஜூவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ராஜுவின் கேள்விக்கு பிரியங்கா தனக்கே உரிய சிரிப்போடு பதில் கூறியது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இப்போ எல்லாம் மாறிப்போச்சி
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை தற்போது போட்டியாளர்கள் யாருக்கும் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இதில் பிரியங்கா மற்றும் நிரூப் வேற லெவலில் பர்ஃபாமன்ஸ் பண்ணி வருகின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் நண்பர்களாகவும், ஒன்றுக்கு ஒன்று ஆறுதலாகவும் கூட்டு சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தற்போது நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நிரூப்க்கு அதிகரிக்கும் ஆதரவு
அபிஷேக் இந்த சீசனில் இருந்த வரைக்கும் அவர் தான் அதிகமான ப்ரமோக்களில் இடம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவருடைய வேலையை நிரூப் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நிரூப்தான் இந்த சீசனில் சரியாக விளையாடுகிறார் என்று அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

பிரியங்காவின் புகழ் அதிகரிப்பு
ஒரு புறம் நிரூப் புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ரசிகர்கள், மற்றொரு பக்கம் பிரியங்காவின் செயலை உச்சுக்கொட்டி பாராட்டி வருகின்றனர். இவர் அனைவரிடமும் பாரபட்சமில்லாமல் தற்போது நடந்து கொள்வது பலரையும் கவர்ந்திருக்கிறதுய எந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலும் அதை ஜாலியாக மாற்றி விடுவதும் இவருடைய கேஷுவலான கேரக்டராக இருப்பதால் இவர் இருக்குமிடம் ஜாலியாக மாறி விடுகிறது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

ராஜுவின் கேள்வி
ஆனால் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் தற்போது எப்போதுமே முட்டி மோதிக்கொண்டு இருப்பதால் இவர்களுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பார்த்து ரசிகர்கள் இது உண்மையில் இவர்கள் இப்படி மாறிவிட்டார்களா?? அல்லது கண்டெண்ட்டுக்காக செய்கிறார்களா என்று புலம்பி வருகின்றனர். அதே கேள்வியைத்தான் ராஜூ நேற்றைய எபிசோட்டில் பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரியங்கா நான் நானாக தான் இருக்கிறேன். ஆனால் நிரூப் சரியாக இப்போது விளையாடுகிறான். யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறான். கொஞ்சம் என்னிடம் அதிகமாக பிரச்சனைகள் ஏற்படுத்துகிறான் அவ்வளவுதான் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications