ஜீ தமிழில் அறிமுகமாகும் ரக்ஷா..இந்த ஜோடி மாயன் தேவி போல இருக்குமா??ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை: கம்பேக் கொடுத்தால் நம்ம தேவியைப் போல கொடுக்க வேண்டுமென்று ரக்ஷாவின் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது ஜீ தமிழில் புது சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த செய்தி தான் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தேவியை காணாது இருந்த ரசிகர்களுக்கு இந்த சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தாக்கம் அதிகம்தான்
என்னதான் ஒரு சீரியல் முடிவடைந்து விட்டாலும் அந்த சீரியல் முடிவடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி எல்லா சீரியல்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து விடுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில சீரியல்கள்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பகுதி பலதரப்பட்ட ரசிகர்களின் மனதையும் கவர்ந்து இழுத்து இருந்தது. இளைஞர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரைக்கும் இந்த சீரியல் நன்றாகவே பிடித்திருந்தற்கு காரணம் அந்த சீரியலில் பல கேரக்டர்கள் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்தாலும் அதில் மாயன் தேவி ஜோடியும், மாறன் தாமரை ஜோடியும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது.

மறக்க முடியாத கேரக்டர்
இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். எப்படியும் மீண்டும் இந்த சீரியலை தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதில் 2வது பாகத்தை எடுத்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் இதில் ஹீரோயினாக ரக்ஷா, ரேஷ்மி இருவரும்தான் தேவி தாமரையாக வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவருமே இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்களுக்கு ஷாக் தான். அதனாலே அதிகமாக சமூக வலைத்தளத்தில் இவர்கள் இருவரைப் பற்றியும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் பாசத்தை பார்த்த இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கொரோனா காலகட்டத்தில் சூட்டிங் எல்லாம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். மீண்டும் சூட்டிங் ஆரம்பிக்கும் போது ஊரடங்கு காரணமாக இவர்களால் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை இதனால் இந்த சீரியலை முடித்துவிட்டனர். ஆனால் இவர்கள் இல்லாத சீரியலை ரசிகர்கள் ஆரம்பத்தில் வெறுத்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல வழக்கம்போல நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாம் பாகத்துக்கும் ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு பிறகு அந்த சீரியலின் தாமரை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ரேஷ்மி மட்டும் ராஜபார்வை என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் தேவி வந்தாச்சு
தாமரை வந்துவிட்டார் தேவியை காணவில்லையே என தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சி தரும் செய்தியை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இவர் ஜீ தமிழில் புதியதாக நடிக்கும் சீரியலின் ப்ரோமோ காட்சிகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கமெணட் மழைகளை பொழிந்து வருகிறார்கள். இவர் நடிக்கும் சீரியலுக்கு அன்பே சிவம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவருக்கு ஜோடியாக சிவா மனசுல சக்தி சீரியலின் கதாநாயகன் நடிக்கிறார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் அழகான காதலை பற்றிய இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்று ஜீதமிழ் வெளியிட்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications