சுருட்டை முடி கழுத்தில் ஆட.. ஏங்க வைக்கும் பார்வையால்.. சுண்டி இழுக்கும் ரம்யா பாண்டியன்
சென்னை: சோசியல் மீடியாக்களை ஆக்கிரமிக்கும் செலிபிரிட்டி களில் முக்கிய பங்கு தனக்கும் உண்டு என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருபவர் நம் ரம்யா பாண்டியன்.
தற்போது கால் மேல் கால் வைத்து சுருட்டை முடியுடன் சொக்க வைக்கும் பார்வையில் கன்னத்தில் கையை வைத்து அவர் கொடுத்துள்ள போஸ் கிறங்கடிக்கிறது.
இந்த போஸில் எதைப் பார்த்து எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

பார்வையில் மயக்கம்
கன்னத்திலும் மார்பிலும் மாறிமாறி கைவைத்து அவர் பார்க்கும், ஆளை மயக்கும் பார்வையில் இணையவாசிகளின் கண் ஒரு நிமிடம் இமைக்காமல் நின்று தான் போனது போல. சில நாட்களாக யோகா உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை வசீகரித்தார்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தன் உடல்கட்டு மூலம் ரசிகர்களை மயக்கிய ரம்யா பாண்டியன் இந்த போட்டோக்களில் தன் பார்வையின் மூலமே ரசிகர்களை மயங்க வைத்து வருகிறார். கருப்பு நிற உடை துக்கத்துக்கு மட்டுமில்ல தூக்கலுக்கும் தான் என்று புது ரூட்டை போட்டுள்ளார் ரம்யா பாண்டியன். தலையை சாய்த்து இவர் கொடுத்துள்ள போட்டோ ஆங்கிளை தலையை சாய்த்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கு பிடித்துவிடும் போல ரசிகர்களுக்கு.

சொக்கிய ரசிகர்கள்
ரம்யா பாண்டியனிடம் ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் போட்டோ கோணங்கள் இல்லாமல் தன் கண்களை தாண்டி ரசிகர்களின் தேடல் வேறு எங்கும் செல்லாமல் தன் கண்களால போதை ஏற்றி மட்டையாகி விடுகிறார். உதட்டின் மேல் இவர் விரலை வைத்து பார்க்கும் ஸ்டைலில் சொக்கிய ரசிகர்கள் தங்கள் விரலை தாங்களே கடித்து விடுவார்கள் போல.

இரண்டு குணமும்
அவர் கண்களில் காட்டிய ஏக்கத்தைப் பார்த்து இங்கு நிறைய பேர் தூக்கத்தை தொலைத்து விடுவார்கள் போல. பாதி நிழலும் பாதி வெயிலும் ஆக இருக்க இவர் எடுத்து அப்லோட் செய்துள்ள போட்டோ வால் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் தனக்கும் இரண்டு குணங்களும் உள்ளது என்று சொல்லாமல் சொல்ல வருகிறாரோ.

கவிஞர்களாகும் ரசிகர்கள்
கதாநாயகிகள் கண்ணைப் பற்றி கவிதைகள் பாடல்களை எழுதும் கவிஞர்கள் இந்தப் போஸ்டரில் இவரைப் பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு கவர்ச்சிகரமான கண்ணை பற்றிய பாடல் கண்டிப்பாக கிடைத்துவிடும். "ரம்யா போட்டோவை பார்த்தாலே போதும் தேவை இல்லை RUM யா " என்று ரசிகர்கள் கதறி வருகின்றனர்












Click it and Unblock the Notifications