பிறந்ததில் இருந்து சொந்த வீடு, இப்போ வாடகை வீடு! வாழ்க்கை மாறும்! இந்த படம் என் கதை! நெகிழ்ந்த ரவி மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி பல வருடங்கள் கழித்து இணைந்து நடித்த 3BHK திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ரவி மோகன் கலந்து கொண்டார். அப்போது தான் இதுவரைக்கும் பிறந்ததிலிருந்து சொந்த வீட்டிலேயே வசித்து வந்தேன் ஆனால் இப்போதுதான் முதல்முறையாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கை மாறும் ஆனால் இந்த திரைப்படம் என்னுடைய கதையை போலவே இருக்கிறது என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

அருண் விஷ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 பிஎச்கே (3BHK ) திரைப்படம் வரும் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு பெற்றோராக நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள். அதுபோல யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

Sarathkumar Devayani Ravi Mohan

3BHK பட ட்ரெய்லர்

இந்த படத்தின் கதை ஆனது சென்னையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்காக ஒரு குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளும், அதில் ஏற்படும் சோதனைகளும் தனிப்பட்ட பிரச்சனைகளையும் கதைக்களமாக கொண்டுள்ளது. சமீப காலமாகவே சாமானிய மக்களின் அடிப்படை பிரச்சினையைப் பற்றிய படங்கள்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில் இந்த படத்தின் டீசரில் கூட "இது ஒரு ராஜா கதை அல்ல, இது நம்ம குடும்பத்தை பற்றிய கதை" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரவி மோகன் பேட்டி

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரவி மோகனும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். ரவி மோகன் சமீப காலமாக அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு மத்தியில் இன்று இந்த நிகழ்ச்சியில் சிங்கிளாக கலந்து கொண்டார். அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ரவி மோகன் பேசும்போது "நான் என்னுடைய லைப்பில் வாடகை வீட்டில் வசித்தது இல்ல. சொந்த வீட்டில்தான் பிறந்ததிலிருந்து இருந்தேன். ஆனால் இப்போ வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அதனால் இந்த படத்தோடு என்னால் நிறைய ரிலேட் பண்ண முடிந்தது.

வாழ்க்கை மாறும்

கூடிய சீக்கிரம் வாழ்க்கை மாறும் இந்த படம் பார்த்து ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருந்துச்சு. என் வாழ்க்கையை ரியலைஸ் பண்ற மாதிரி இருந்துச்சு. என் வாழ்க்கையில் நான் நிறைய விஷயங்களை கடக்க போறேன்னு எனக்கு தோணுச்சு. நல்ல படியாக ஒரு அனுபவத்தை ஒரு படம் கொடுத்தாலே போதும். அந்த மாதிரி அனுபவத்தை இந்த படம் கொடுத்திருக்கு" என்று அந்த நிகழ்ச்சியில் ரவி மோகன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+