தமிழா தமிழாவில் இருந்து இதனால் தான் வெளிவந்தேன்.. முதல்முறை ரகசியங்களை உடைத்த கரு. பழனியப்பன்
சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த இயக்குனர் கரு பழனியப்பன் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
அவர் விலகும் போது சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம், கசக்குமெனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவது இனிதானது என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தான் எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
இந்த வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் படத்தில் மூலம் திரையுலகில் கரு. பழனியப்பன் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தான் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.
அது மட்டும் இலலாமல் அதற்குப் பிறகு சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் என சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். அதோடு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சியில் இவர் தொகுப்பளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் சாயல் என்று பலர் கூறி வந்தாலும் அதை கரு பழனியப்பன் ஆமாம் உண்மைதான் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பா இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என்று பதிவு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு அந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
அதை பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுப்பு வழங்கி வருகிறார் இந்த நிலையில் கரு பழனியப்பன் பேட்டி ஒன்றில் தான் எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அதில் எனக்கும் சேனல் தரப்பினருக்கும் ஒரு இடத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டு இருக்க முடியாது.
அந்த இடத்தில் அங்கே சமனான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகினேன் என்று கரு பழனியப்பன் கூறி இருக்கிறார். அதோடு நான் இப்போதும் தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நிகழ்ச்சி நல்லபடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதைய ஜெனரேஷன் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். அதனாலேயே நான் சமூக வலைத்தளத்தை முழுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் இயக்குனர் கரு. பழனியப்பன் பேசியிருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications