தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு முன்னாடி சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார் இருக்கா? சிவகுமார் கேட்ட கேள்வி.. நாசர் சொன்ன சம்பவம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யாவிற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்த நடிகர் சிக்ஸ் பேக் வைத்திருந்தான் என்று பேசி இருக்கிறார். அதேபோல சூர்யா பற்றி நடிகர் நாசர் சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. சூர்யாவின் திரைப்படத்தை அதிகமானோர் இணையத்தில் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிகா வருத்தம்
இது குறித்து நடிகை ஜோதிகா கூட தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். தன்னுடைய கணவர் திரைப்படத்தை சிலர் வேண்டுமென்றே குறை சொல்கிறார்கள் என்று வேதனையோடு பேசி இருந்தார். இதனால் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காக பலர் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
சூர்யா பற்றி சிவகுமார் பேட்டி
இதில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டு பேசியிருந்தனர். அப்போது நடிகர் சூர்யாவின் சார்பில் அவருடைய தந்தை நடிகர் சிவகுமார் பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது என்னுடைய மகன் நேருக்கு நேர் திரைப்படத்தில் வந்த அவள் வருவாளா என்ற பாடலில் நடிக்கும் போது அவருடைய கண்களுக்கு ஒரு ஷாட் வைத்திருந்தது. அந்த கண்களை பார்த்ததும் தயாரிப்பாளர் இவருடைய கண்களுக்கு தமிழ்நாட்டு பெண்கள் தூக்கத்தை தொலைக்கப் போகிறார்கள் அந்த அளவிற்கு அவருடைய கண்ணில் ஒரு பவர் இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

சிவகுமார் கேட்ட கேள்வி
சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. அவரை சினிமாவில் ஒரு ஆளாக மாற்றியது மணிரத்னம், வசந்த் போன்றவர் தான். அவர்களுக்கு பாதம் பணிந்து நன்றி சொல்கிறேன் என்று மேடையிலேயே தொட்டு கும்பிட்டு இருந்தார். பிறகு அவர் பேசிக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் சூர்யாவிற்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார் இருக்கா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இணையத்தில் பலரும் கமெண்ட்டுகள் குவித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் கருத்துக்கள்
சூர்யாவுக்கு முன்பே நடிகர் சரத்குமார், அர்ஜுன், விக்ரம் போன்றோர் எல்லாம் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள் அது சிவகுமாருக்கு தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்கள். அதோடு சிலர் எல்லா அப்பாவுக்கும் தன்னுடைய மகன் ஸ்பெஷல் தான் ஆனால் அடுத்தவர்களை சிவக்குமார் இப்படி மட்டம் தட்ட கூடாது என்று அட்வைஸ் கொடுக்கிறார்கள். அதுபோல அதே மேடையில் நாசர் சூர்யா பற்றி பேசியிருக்கிறார்.

நாசர் பேச்சு
நான் எத்தனையோ திரைப்பட விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக நினைக்கிறேன். சூர்யாவை அவருடைய முதல் படத்திலிருந்து பார்த்திருக்கிறேன் முதலில் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான மனிதர். எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்வதற்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிற நடிகர்.
நாசர் நெகிழ்ச்சி
இந்த படத்துல கூட அவர்கிட்ட டூப் வச்சிக்க கூடாதா என்று நான் கோபப்பட்டேன். அவர் அந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து இருக்கிறார். என்னால முடியாத போது மட்டும் தான் நான் டூப் வச்சு இருப்பேன்னு சொன்னாரு. இந்த படம் சூட்டிங் போது சூர்யாவுக்கு தலையில் அடிபட்டுடுச்சு ஆனால் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துட்டு மீண்டும் படப்பிடிப்பு வந்துட்டாரு. சூர்யா அவருடைய குடும்பத்துக்கு மட்டும் சொந்தம் கிடையாது, நீ நல்ல நடிகரின் பெயர் எடுத்த போது எங்களுக்கு சொந்தம் ஆகிவிட்டாய் என்று அந்த மேடையில் சூர்யா பற்றி நாசர் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications