சாகறதுக்கு முன்னாடியே நடிகர் மாரிமுத்து சுடுகாட்டில் செய்த செயல்.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே விக்னேஷ்
சென்னை: நடிகர் மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு காலமானார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு அவர் செய்த செயல் குறித்து ஆர்.ஜே விக்னேஷ் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் தான் தற்போது உடல் நிலையை கவனிப்பதில் அதிகமாக ஆர்வம் எடுத்துக் கொள்கிறேன். அதுக்கு காரணம் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் தான் என்று ஆர் ஜே விக்னேஷ் கூறி இருக்கிறார்.

அத்தோடு நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போது அவர் சுடுகாட்டில் செய்த செயல் குறித்தும் தன்னோடு கடைசியாக பேசியது குறித்து அந்த பேட்டியில் ஆர்.ஜே விக்னேஷ் கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்தது யாரும் எதிர்பார்க்காத விதமாகத்தான் இருந்தது. காலை வரைக்கும் நன்றாக பேசி சிரித்திருந்த மாரிமுத்து சூட்டிங் ஸ்பாட்டில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உடல் அசவுகரியம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.

இந்த வருத்தமான சம்பவம் நடந்து ஒரு சில வாரங்கள் ஆனாலும் இது ரசிகர்களாலும் அவரோடு நெருங்கி பழகியவர்களாலும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவரைப் பற்றிய நினைவுகளை ஆர்.ஜே விக்னேஷ் பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் மாரிமுத்து இறக்கும்போது அவர் அவருக்கு வைத்த கண்ணீர் அஞ்சலி கட்டவுட் முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆச்சி. அது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அவர் நடித்த அந்த கடைசி திரைப்படத்தில் தான் நானும் அவரோடு நடித்திருந்தேன்.
அப்போ அவர் சுடுகாட்டில் நடிப்பதை பார்த்து நான் மிரண்டு போய் விட்டேன். ஒவ்வொரு முறை ஷார்ட் வைக்கும்போதெல்லாம் அவர் அந்த சுடுகாட்டில் படுத்து எழுந்து வந்து கொண்டே இருந்தார். ஆனால் என்னை அந்த இடத்தில் படுக்க சொன்னால் கூட படுக்க மாட்டேன். ஏனென்றால் சாயங்காலம் நேரம் ஆகிவிட்டது.

நிஜ சுடுகாடு வேற, மழை வேற பெய்து கொண்டிருந்தது. எனக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் அதைப் பற்றி கொஞ்சம் கூட பயப்படாமல் ஒவ்வொரு முறையும் அதில் படுத்து எழுந்து வந்து கொண்டிருந்தார். அது பற்றி நான் கேட்கும் போது அது எல்லாம் நான் நம்புவதே கிடையாது.நமக்கு காட்சிகள் என்று வந்துவிட்டால் அதில் சிறப்பாக நடிக்க வேண்டும் அவ்வளவுதான் என்று எளிமையாக சொல்லிவிட்டார்.
எனக்கு அவரை பார்க்கும்போது அப்போது வியப்பாகத்தான் இருந்தது. அது மட்டும் இல்லாமல் என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது நான் இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். சன் டிவி தினமும் 9:30 மணிக்கு என்னை உலகம் முழுக்க மழை பெய்தால் எப்படி இருக்குமோ அதுபோல என்னை எல்லாருடைய வீட்டுக்கும் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்ப எல்லாம் நான் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்குறாங்க. நான் இவங்க தர மாட்டாங்கனு நினைச்சு தான் அதிகமா கேட்கிறேன். அதை கூட எனக்கு உடனே தரேன்னு சொல்றாங்க. இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சந்தோசமா இருக்குன்னு என்கிட்ட பேசிகிட்டு இருந்தார். திடீரென மாரிமுத்து சார் இல்லை என்பதை என்னால் ஏத்துக்க முடியல.
அதற்கு பிறகு என்னுடைய உடல் நலத்தை நான் கவனிக்க தொடங்கிவிட்டேன். நான் குண்டாக இருக்கிறேன் என்று என்னை எவ்வளவு பேர் மீம்ஸ் போட்டு கலாய்த்து கொண்டிருந்தார்கள். இப்போது முதலில் ஆரோக்கியம் தேவை என்பதை புரிந்து கொண்டு உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன் என்று அந்த வீடியோவில் ஆர் ஜே விக்னேஷ் பேசி இருக்கிறார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications