என் பொண்ணு பண்ணுனது தப்பு இல்ல! ஆறு மாத குழந்தைக்கு படிப்பு! வீடியோவில் வருமானம்! ரோபோ சங்கர் ஆதங்கம்
சென்னை: தனது அசாத்தியமான நகைச்சுவை உணர்வு மற்றும் தனித்துவமான உடல் மொழியால் சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த ரோபோ சங்கர், தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகள் இந்திரஜா மற்றும் பேரன் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அது இது எது' நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் பெரும் பிரபலமானார். அவரது நகைச்சுவையான பேச்சும், புதுமையான மிமிக்ரி திறனும் அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. சின்னத்திரையில் கிடைத்த வெற்றி, அவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தது. 'மாரி', 'நானும் ரௌடிதான்', 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து, தனது முத்திரையைப் பதித்தார்.
உடல்நலக் குறைவும், விமர்சனங்களும்:
ஒரு கட்டத்தில், ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவரது உடல் மெலிந்து காணப்பட்டது. அப்போது சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர் உறுதியுடன் அதையெல்லாம் கடந்து, மீண்டும் உடல்நலத்தைப் பெற்று, தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
பிகில் படத்தில் இந்திரஜா
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜா திருமணம் செய்து கொண்டு, தற்போது ஒரு குழந்தைக்குத் தாயாகி, மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பேரனை கையில் வாங்கியபோது
இந்த நிலையில் ரோபோ சங்கர் தனது நடிப்பில் வெளியாக உள்ள 'சொட்ட சொட்ட நனையுது' படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு பேசிய ரோபோ சங்கர், தனது பேரனைப் பற்றி நெகிழ்ந்து பேசினார். "நான் என் மகள் இந்திரஜா பிறந்ததிலிருந்து, வளர்ந்தது வரை அவருடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை. காலையில் ஜப்பானில் இருந்தால், மாலையில் லண்டனில் இருப்பேன். அப்படி உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். இந்திரஜாவை அவரது அம்மா தான் முழுக்க முழுக்க வளர்த்தார்" என்று வருத்தத்துடன் கூறினார்.
மறக்க முடியாத உணர்வு
"ஆனால், எனது பேரனை கையில் வாங்கியபோது அந்த உணர்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அதை அனுபவித்தால் தான் முடியும்" என்று அவர் குறிப்பிட்டார். "இப்போது எனது பேரன் 10 நிமிடங்கள் வரை கண்ணிமைக்காமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் பேச ஆரம்பிக்கும்போது, மாதவன் போலவோ, கமல்ஹாசன் போலவோ ஒரு டயலாக் சொல்லி வீடியோ எடுத்து வைப்பேன்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அதுபோல சிலர், பேரனை வைத்து வீடியோ போட்டு சம்பாதிக்கிறோம்னு சொல்லுறாங்க. அதை பத்தி எனக்கு கவலை கிடையாது. என்னுடைய சந்தோஷத்தை நான் காட்டுறேன் அவ்வளவுதான். அதை நல்ல உள்ளம் உள்ள பலர் பாராட்டுறாங்க. ஒரு சிலர் அதை ட்ரோல் செஞ்சிட்டு இருக்காங்க அவங்க ட்ரோல் செஞ்சு அதன் மூலம் வருமானம் பெறுறாங்க. அதற்காகத்தான் அவர்கள் நெகட்டிவா பேசி ட்ரோல் செஞ்சிட்டு இருக்கிறாங்க. அதற்காக நான் பீல் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்க முடியாது. சில மாதங்களுக்கும் முன்பு என்னுடைய மகள் வெளியிட்ட வீடியோ அதிகமாக பேசப்பட்டது.
அதாவது ஆறு மாத குழந்தைக்கு ஏதோ படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தாங்க அது குறித்து பல செய்தி சேனல்களில் பேசினாங்க ஆரம்பத்தில் இந்த விஷயம் எனக்கு தெரியாது எல்லா இடங்களிலும் பேசிய பிறகுதான் அது எனக்கு தெரிய வந்தது. உடனே நான் என்னுடைய மகளிடம் கேட்டேன் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எனக்கு திருப்தியாக இருந்தது. நான் உங்க பொண்ணு அப்பா எதுவும் தப்பா பண்ண மாட்டேன் விசாரிச்சு தான் ப்ரோமோஷன் வீடியோ வெளியிட்டேன், அவங்க இதற்கான சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்காங்க அதனாலதான் நம்ம தம்பியும் அங்க கொண்டு சேர்த்து விட்டோம் என்று சொன்னாங்க. என் பேரன் ஸ்கூல் டீச்சர் கூட அதற்கான சர்டிபிகேட் இருக்கு என்று ஆதாரத்தை காட்டினாங்க. அதனால் அது தப்பு என்று எனக்கு தோணல என்று ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.
மகளை நடிக்க விடாதது நான் அல்ல
திருமணத்திற்குப் பிறகு இந்திரஜாவை நடிக்க வேண்டாம் என்று கூறியது நீங்கள் தானா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரோபோ சங்கர், "நான் எனது மகளுடைய விஷயத்தில் தலையிடுவதில்லை. திருமணத்திற்குப் பிறகு அவளை நடிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. அவள் பல திறமைகளைக் கொண்டுள்ளாள். அதனால்தான், 'எல்லா மேடையும் முக்கியம், எதையும் விட்டுவிடாதே, எல்லா இடங்களிலும் உனது திறமையைக் காட்டு' என்று சொல்லிதான் அவளை வளர்த்தேன்" என்று ரோபோ சங்கர் தனது பேட்டியில் தெளிவாகப் பேசினார்.
ரோபோ சங்கரின் இந்த உருக்கமான பேட்டி, ஒரு நடிகனின் கடின உழைப்பையும், குடும்ப உறவுகளுக்காக அவன் செய்யும் தியாகங்களையும் உணர்த்துவதாக இருந்தது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications