நீங்களா இப்படி நடிக்கிறீங்க? விஜய் கேட்ட ஒரே ஒரு கேள்வி! சினிமாவை விட்டு விலக காரணம்! ரோஜா ஓபன்
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா செல்வமணி, தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தான் திரையுலகில் இருந்து விலகியதற்குக் காரணம் நடிகர் விஜய் கேட்ட ஒரே ஒரு கேள்விதான் என்று சமீபத்தில் மனம் திறந்து பேசியிருப்பது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளித்திரையிலிருந்து அரசியல் களத்திற்கு
ஆந்திராவின் திருப்பதியில் பிறந்த ரோஜா,1991ஆம் ஆண்டு முதல் சினிமா துறையில் கோலோச்சினார். இவரது முதல் தமிழ்ப்படமான 'செம்பருத்தி' இவருக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஒரு சில கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ள ரோஜா, 2002ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டார்.
ரோஜா வெள்ளித்திரையில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதிலும் நீங்களும் ஆகலாம் மகாலட்சுமி, லக்காக கிக்கா போன்ற நிகழ்ச்சி எல்லாம் பெரிய அளவில் பெயர் வாங்கியது. இந்த நிகழ்ச்சியில் ரோஜா என்ன சேலை கட்டி கண்டு வருகிறார் என்று பார்ப்பதற்காகவே பல பெண்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள்
அரசியல் பிரவேசம்
2014ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக (MLA) தொடர்ந்து வெற்றி பெற்ற ரோஜா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பங்காற்றி வந்தார். 2022 முதல் 2024 வரை அவர் ஆந்திரப் பிரதேச அமைச்சராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ரோஜா - விஜய் இணைந்து நடித்த படங்கள்
நடிகர் விஜய் மற்றும் ரோஜா இருவரும் சேர்ந்து திரைப்படத்தில் ஒன்றாக ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் விஜயின் "தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதிக் கொடுக்கவா" என்ற பாடலுக்கு ரோஜா தான் டான்ஸ் ஆடிட்டு இருந்தார். அந்த பாட்டு இப்போது பலருடைய ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.
விஜய் கேள்வியால் சினிமாவை விட்ட ரோஜா
சினிமாவில் உச்சத்தில் இருந்த ரோஜா, திடீரென நடிப்பைக் குறைத்துக்கொண்டு அரசியலுக்குச் சென்றதன் பின்னணியில், நடிகர் விஜய் இருக்கிறாராம். ஒருமுறை, நடிகர் விஜய் தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது, என்ன மேடம் நீங்க அம்மாவா நடிக்கிறீங்களா என்று கேட்டாராம். அதற்கு ரோஜா ஆமாம் என்று சொல்ல, உங்களை நான் இப்போதும் ஹீரோயினியாக தான் பார்க்கிறேன் எனக்கு மாமியார் ரோலில் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று சொன்னாராம். இந்த வார்த்தையை கேட்டதும் ரோஜா இந்த படத்தை விட்டு மட்டுமல்ல இனி இப்படி நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம். அதற்கு பிறகு தான் அவர் அரசியலில் முழு நேரமாக ஈடுபட்டாராம்.
சர்ச்சைகளை கடந்து வரும் விஜய்
நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவின் 'தளபதி' என்ற மாபெரும் அந்தஸ்துடன், அரசியலிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். தனது படங்களின் மூலம் அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து பேசி வந்த விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார். சினிமா உலகில் இருக்கும்போதே அரசியல் கட்சியைத் தொடங்கிய அவரது இந்த முடிவு, திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பல விமர்சனங்களைத் தூண்டியது.
நடிகை ரோஜாவின் நடிப்பில் இருந்து விலகியதற்குக் காரணமாக விஜய் கேட்ட கேள்வி இருந்தபோதும், இன்றுவரை இருவரும் அவரவர் துறைகளில் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications