வா.. சரி போ.. கூந்தல் மணம் கிறங்கடிக்குது.. கண் திறந்து ரசி.. அடடா அடடா ரொமான்ஸ்!
சென்னை: பிரக்யா-பொன்னி இரட்டை சகோதரிகள். பிரக்யாவை அபிஷேக் காதலிக்கிறான்.. பொன்னி நலனுக்காக பிரக்யா பொன்னியாக நடிக்க பிரக்யாதான் பொன்னியாக நடிக்கிறாள் என்பதை அபிஷேக் உணரும் காட்சிகள் அனைத்தும் ரோமான்ஸோ ரொமான்ஸ்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டது. பிரக்யா-அபிஷேக் நடிக்கும் காட்சிகள் அனைத்திலும் நெருக்கமோ நெருக்கம். அய்யோ குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு நெளிய வைக்கிறார்கள்.
நம்ம ஊரு சினிமாவில் கூட இப்படிப்பட்ட நெருக்கமான காதல் காட்சிகள் வருவதில்லை என்றால் பாருங்களேன்... அப்படி ஒரு கில்மா காட்சிகள் நிரம்பி வழிகின்றன.
[Read more: கோயில் குளத்து தண்ணியில் 2 மாலை இணைஞ்சுருச்சுன்னா.. அற்புதமான மணவாழ்க்கையாமே!]

இது என் ஸ்டைல்
இந்தி டப்பிங் சீரியலாச்சே.. படுக்கை அறை அவ்வளவு அலங்காரத்துடன் இருக்கிறது. எப்போதும் முதலிரவு நடப்பது போல... அப்போது ஆரம்பிக்கிறான் அபிஷேக் தனது காதல் லீலைகளை. பிரக்யா இங்கே வான்னு சொல்றான்... அவள் என்னையா என்று கேட்க, இந்த ரூம்ல வேற யாரு இருக்கா கேட்கிறான்.

தாங்க முடியலை
அவள் அருகில் வந்து என்ன என்று கேட்க, ஒண்ணுமில்லை போ என்கிறான். அதென்ன வா அப்புறம் போ? என்று பிரக்யா அலுத்துக்கொள்ள, இது என்னோட ஸ்டைல் என்கிறான். என்ன ஸ்டைலோ தாங்க முடியலைன்னு அவ சொல்றா... இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன்... போகப் போக எப்படித் தாங்குவேன்னு கேட்டு அவள் கையைப் பிடித்து இழுக்கிறான்...

இல்லேன்னா
அவளை கட்டிப் பிடிச்சு கண்ணா பின்னான்னு ரொமான்ஸ் செய்து கொண்டே... நீ என் பிரக்யா இல்லேன்னா உன் இதயம் படபடன்னு அடிச்சுக்க கூடாது அவன் சொல்ல.. இல்லை அடிச்சுக்காது... எனும் பிரக்யாவின் மனம் அப்படித்தான் படபடக்குது. நீ என் பிரக்யா இல்லேன்னா என் நெருக்கத்தை இப்படி கண் மூடி ரசிக்கக் கூடாது... இல்லை ரசிக்கலை... கூடாது கூடாது என அவன் ரொமான்ஸ் பண்ண, இங்கு அவள் இல்லை இல்லை என்று அபிஷேக்கின் ரொமான்ஸை அனுபவிக்கிறாள். அவள்தான் பிரக்யாவாச்சே!

இப்படித்தான் பிரக்யா
முதன் முதலில் அவளின் கூந்தலை இப்படி வருடி, நெருக்கமாக அனைத்து முகத்தோடு முகம் வைத்து, காதில் நான் ஐ லவ் யூ சொன்னபோது, என் பிரக்யா இப்படித்தான் நல்ல வாசனையுடன், கிறக்கமாக மயக்கத்துடன் என் அணைப்பில் இருந்தாள்னு இன்னொரு நாள் ரொமான்ஸ் செய்கிறான் அபிஷேக்.

கசப்பா இனிப்பா
பிரக்யாவும் அபிஷேக்கும் ஊடலில் இருக்க பிரக்யா அபிஷேக்குக்கு டீ தருகிறாள். அவன் தன்னுடன் இருக்கும் தம்பியை விரட்டிவிட்டு, பிரக்யாவுடன் காதலில் ஈடுபட வேண்டுமென்றே வம்பு இழுக்கிறான். தம்பி சென்றுவிட கோபத்தில் இருக்கும் பிரக்யாவைப் பேச வைக்க டீ கசக்குதுன்னு சொல்றான். நீங்கதான் டீ குடிக்கலையே.. எப்படி கசப்பா இனிப்பான்னு தெரியும். சண்டை போடத்தான் இப்படி வம்பு இழுக்கறீங்கன்னு கேட்கறா...

லிப் டு லிப்
புரிஞ்சுக்கிட்டா சரி... நீதான் கோவத்துல இருக்க.. பேசினா பேச மாட்ட, சண்டை போட்டாத்தான் பேசுவ.. அதான் ஆரம்பிச்சேன்ன்னு அவன் சொல்ல இப்போ உங்களுக்கு என்ன வேணும்னு கேட்கிறாள் பிரக்யா. ஒண்ணுமில்லை கோல்டன் ஃபிஷ் பண்ணி ரொம்ப நாளாச்சு.. வா வா என்று அவளை அனைத்து மீன் போல வாயை திறந்து திறந்து மூடுகிறான்.

திரும்பி பார்த்தால்
சீரியல் இரண்டாவது முறை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகுது.இந்த சீனைப் பார்த்துட்டு திரும்பிப் பார்த்தா வீட்டுல இருக்கற பெரிசுங்க அதே மாதிரி வாயை வச்சுக்கிட்டு, ஆ-ன்னு பார்த்துகிட்டு இருக்காங்க... சேச்சே... இந்தி டப்பிங் சீரியல் ரொம்ப மோசம்ங்க... படங்களை மிஞ்சிருவாங்க போலிருக்கே... ராத்திரி போடுங்கப்பா இதெல்லாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications