ரூ.25 கோடி சூரியின் மாமன்.. தூக்கி சாப்பிட்ட மொட்டை ராஜேந்திரன்.. சந்தானம் சறுக்கிய ஸ்பாட்: பிரபலம்
சென்னை: நடிகர் சூரி ஒரு ஹீரோவாக நின்றுவிட்டார்.. கருடனைவிட, மாமன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நிறையவே கிடைத்துள்ளது.. சூரியும் நன்றாகவே மாமன் படத்தில் நடித்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.. அத்துடன் சந்தானம் நடித்து வெளியாகியிருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் பற்றியும் தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளார் சேகுவேரா.
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாமன்... கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள சூரியின் மாமன் படம் நல்ல வசூலை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது, 9 நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
பின்னுக்கு சென்ற சந்தானம் படம்
கடந்த வாரம் அதே 16-ந் தேதி பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படமும் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சந்தானம் படத்தைவிட, குடும்பக் கதைக்களத்தில் உருவான மாமன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும், சந்தானத்தின் பட வசூலையும் சூரி படம் பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டி அளித்துள்ள சேகுவேரா, "யாரும் யாரையும் முன்னுக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாக சொல்ல முடியாது.. மாமன் படம் வசூல் பற்றி தெரியாது.. உண்மைத்தன்மை தெரியாமல் வசூல் பற்றி பேசக்கூடாது. ஆனால், ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.. ஹீரோவாக சந்தானமும், சூரியும் நின்றுவிட்டார்கள்.. ஆனால், சந்தானம் படங்கள் தோல்வியடைகின்றன.. அதேபோல சூரியின் கொட்டுக்களி நல்லா ஓடுச்சா என்ன? இப்போது மாமன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி
அதேபோல விடுதலை 1 நன்றாக ஓடியது.. விடுதலை 2 சரியாக போகல.. அதுக்காக விஜய் சேதுபதியை சூரி பின்னுக்கு தள்ளிவிட்டார் என்று சொல்ல முடியுமா? எனவே, மாமன் படம் நன்றாக இருக்கிறது, அதனால் மக்கள் ரசிக்கிறார்கள். சூரி ஒரு ஹீரோவாக நின்றுவிட்டார்.. கருடனைவிட, மாமன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நிறையவே கிடைத்துள்ளது.. சூரியும் நன்றாகவே நடித்துள்ளார்
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் நல்ல கான்செப்ட்.. கஷ்டப்பட்டு படம் எடுத்தால், நாலு ரூமில் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் என்ற பெயரில் வெறும் குறைகளை சொல்வோர்களுக்கு அறிவுறுத்துவது போன்ற படம் இது.. நல்ல கதைதான்.. படத்தையும் நன்றாகவே கொண்டு போகிறார்கள்..
தூக்கி நிறுத்திவிட்டார்
ஆனால், சந்தானம் ஒரு இடத்தில் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். கப்பலில் இருந்தவரை படம் நன்றாக இருந்தது.. கப்பலில் இருந்து, காட்டேஜுக்குள் போனதுமே படம் தொய்வாகிவிட்டது. வழக்கம்போல கதையாகவே நகர்ந்தது.. படத்தை கப்பலிலேயே வைத்து முடித்திருக்கலாம். மற்றபடி படம் நன்றாகவே இருந்தது.
சந்தானம் நன்றாகவே நடித்துள்ளார்.. சிரிப்பதற்கான காட்சிகளும் நிறைய உள்ளன.. அதனால் படத்துக்கு போய் சிரிச்சிட்டு வரலாம்.. மொட்டை ராஜேந்திரன் சூப்பராக நடித்திருக்கிறார்.. இந்த படத்தை தூக்கி நிறுத்தியதே மொட்டை ராஜேந்திரன்தான்.. வசூலில் முன்னே பின்னே இருக்கத்தான் செய்யும்.. தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கு மட்டுமே வசூல் பற்றி தெரியும். படத்துக்கு செலவு செய்த ஆர்யாவுக்கு மட்டுமே வசூல் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications