ரூ.250 கோடியை கொட்டிய சிம்பு.. சந்தானமும் கிளம்பி வந்துட்டாரு.. சிம்புவுக்கு STR 49 சக்சஸ்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் சிம்புவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர காரணம், சிம்பு ஒரு பிறவிக்கலைஞன்.. சிறந்த நடிகர்.. எல்லா கேரக்டர்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர்.. டான்ஸ், ஆக்‌ஷன், சண்டை என ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான அத்தனையும் சிம்புவிடம் உள்ளது.. இனி சிம்புவுக்கு எல்லாமே சக்ஸஸ்" என்று பிரபல படத்தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Aagayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "எஸ்டிஆர் - சந்தானம் நீண்ட நாள் கழித்து இணைந்துள்ளனர்.. எஸ்டிஆர் 50 படத்துக்காக, அதுபோல சிம்பு ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார்.. இதுக்காகவே நீண்ட காலமாகவே முடி வளர்த்து வருகிறார்.. ஆனால், இந்த 50 வது படத்துக்காக பல தடங்கல்கள் வந்தன.. சரியான தயாரிப்பாளர் அமையவில்லை..

Television Simbu STR 49

அதனால்தான், அதே ஹேர்ஸ்டைலில், தக் லைஃப் படத்திலும் நடிக்க வேண்டியதாயிற்று., பார்க்கிங் படம் எடுத்த ராம்குமார் , STR 49 என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஹீரோ சந்தானம் - காமெடி

திரிஷா, நயன்தாராவை ஒதுக்கிவிட்டு கயாடு லோஹர் முன்னணி நடிகையாக வலம்வர ஆரம்பித்துவிட்டார்.. இவருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. அத்துடன் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

சந்தானமும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.. ஹீரோவாக சந்தானம் நடித்தாலும், அதில் பல படங்கள் தோல்வியையே தழுவியிருக்கின்றன.. ஆனால், சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியாகி, அதில் சந்தானத்தின் காமெடி பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து விட்டார்கள். தற்போது சினிமாவில் காமெடிக்கு பஞ்சமிருப்பதால், மறுபடியும் காமெடியனாகவே சந்தானம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் தற்போது சிம்புவும் இணைந்துள்ளார்..

சிம்புவுடன் சந்தானம்

இதற்கு இன்னொரு காரணம், சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே சிம்புதான்.. அதனால் சிம்பு மீது சந்தானத்துக்கு எப்போதுமே பெரிய மரியாதை உண்டு..

சிம்புவே, சந்தானத்தை தன்னுடன் நடிக்குமாறு கேட்கவும், நன்றிக்கடனுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். தனியாக நடித்தாலே சிம்பு கலக்குவார், இப்போது சந்தானமும் இணையும்போது, பெரிய படமாகவும், வெற்றிப்படமாகவும் இது இருக்கும்.

இந்த STR49 படத்தில் காலேஜ் புரபசராக நடிக்க போகிறார் சிம்பு.. ஆனால், இதில், சாதாரண ஹேர்ஸ்டைலுடன் நடிக்க போகிறார். இதுவரை சரியான கதைத்தேர்வு செய்யாததால், சரியான படத்தேர்வு செய்யாததால், சோர்வுடன் இருந்தார் சிம்பு.. படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராதவர் சிம்பு என்று குற்றச்சாட்டே நிறைய இவர் மீது உள்ளது..

உதறி தள்ளிய சிம்பு

ஆனால், இதையெல்லாம் தற்போது உதறி தள்ளிவிட்டார் சிம்பு.. தக் லைப் படத்தில் கமலுக்கு இணையான ரோல் சிம்புவுக்கு தரப்பட்டது. மணிரத்னம் சிம்புவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர காரணம், சிம்பு ஒரு பிறவிக்கலைஞன்.. சிறந்த நடிகர்.. எல்லா கேரக்டர்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர்.. டான்ஸ், ஆக்‌ஷன், சண்டை என ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான அத்தனையும் சிம்புவிடம் உள்ளது..

தக் லைப் சிறப்பான வெற்றியை தரும்.. அதுபோல, இனிவரும் சிம்புவின் படங்கள் எல்லாமே வெற்றிப்படமாக இருக்கும். சம்பளத்துக்காக நடிப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், 250 கோடியை தானே செலவிட்டு, சிம்பு 50 படத்தை எடுக்க போகிறார்.. இந்த ரிஸ்க்கை எந்த நடிகரும் இதுவரை எடுத்ததில்லை.. ஆடிடியூட் என்பது சிம்புவிடம் கிடையாது.. உண்மையிலேயே நல்ல மனிதர்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+