அஸ்திவாரம் ஸ்ட்ராங்க்.. டேபிள்ல இப்பவே ரூ.370 கோடி.. விஜயின் ரகசிய ஆர்டர்? ஜன நாயகன் சக்ஸஸ்: பிரபலம்
சென்னை: விஜய்யின் சினிமா கெரியரில் ஜனநாயகன் கடைசி படமாக அமைய உள்ளது. இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமைக்கான தொகையை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, ஜனநாயகன் படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தாலும், எட்டு வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து செய்யாறு பாலு சில தகவல்களை கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "அரசியலில் தீவிரமாகிவிட்டார் விஜய்.. வரும் 2026-ல் முதல்வர் முக ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவுக்கே ஜெர்க் ஆகிவிட்டது..

சினிமாவிலிருந்து விலகி, கடைசி படம் என்றும் ஜனநாயகன் அறிவித்துவிட்டார் விஜய்.. தற்போது ஒரு படத்துக்கு 250 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.. இதுவே வேறு யாராக இருந்தாலும் பேராசை காரணமாக, 250 கோடிக்காக வருடத்துக்கு 4 படம் செய்வார்கள். ஆனால், 250 படம் சம்பளத்தையும் தூக்கி போட்டுட்டு அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.. இதுக்கே ஒரு பெரிய தில்லு வேணும்..
டேபிள் பிராஃபிட்
அந்தவகையில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் டேபிள் பிசினஸ் ஆரம்பித்துவிட்டார்கள்.. ஓவர்சீஸ் இதுவரைக்கும் 70 கோடிக்கு விற்பனைக்கும், அமேசான் 121 கோடிக்கும், சன்டிவி 68 கோடிக்கும், மாஸ்டர் படம் எடுத்த 7ஸ்கிரீன் பிக்சர்ஸ் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே, மொத்தத்தில் 370 கோடி ரூபாய், டேபிள் மீது வந்து உட்கார்ந்துவிட்டது.. டேபிள் பிராஃபிட்டே 370 கோடி என்றால் மற்ற மாநிலங்களில்?
ஜனநாயகன் படத்தில் விஜய் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.. அந்த படத்தில் வாக்குஅரசியல் பேசப்போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், சர்க்கார் படத்தில் வந்ததுக்கும், இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. ஜனவரி 9ம் தேதி இந்த படம் ரிலீஸாக போகிறது.. விஜய்யின் அரசியலுக்கு பிரச்சார படமாக இருக்க போகிறதா? என்று தெரியவில்லை..
தமிழ்ப் புத்தாண்டு பிளான்
அரசியல் வேறு, பிசினஸ் வேறு என்பதுதான் கலாநிதி மாறனின் கொள்கை. வழக்கமாக சன் டிவியை பொறுத்தவரை, பொங்கலுக்கு வெளியாகும் படத்தை வாங்கினால், அதை டிவியில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்புவார்கள்..
அந்தவகையில், ஜனநாயகன் படத்தையும் சன் டிவி வாங்கியிருப்பதால், தமிழ் புத்தாண்டில் டிவியில் ரிலீஸ் செய்யப்படுமா? அப்படி ரிலீஸ் செய்யப்பட்டால், அது வரப்போகும் தேர்தல் சமயத்தில விஜய்க்கும், தவெகவுக்கும் மிகப்பெரிய மைலேஜாக மாறும் என்கிறார்கள்..
தலைவன் இருக்கிறான்
இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பஞ்ச் டயலாக் பேச போகிறாராம்.. அதற்காக உதவி இயக்குனர்களுக்கு வாய்மொழி உத்தரவும் பிறப்பித்துள்ளாராம்.. கிட்டத்தட்ட 40 பஞ்ச் டயலாக்குகள் ரெடியாக இருக்கிறதாம்.. வரப்போகும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பஞ்ச் டயலாக்குகள் இறக்கிவிடப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தலைவன் இருக்கிறான் என்று கமலுக்கு எழுதிய கதையாகத்தான், இந்த ஜனநாயகன் படம் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, திமுக கூட்டணிணியில் கமல் இருந்தாலும், விஜய் மீது கமலுக்கு மறைமுகமான கவனம் செலுத்துவார் என்றும், கண்டிப்பாக விஜய்க்கு எதிராக செயல்பட மாட்டார் என்றும் சொல்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications