Samantha: சமந்தாவுக்கு ரகசியமாக நடந்த இரண்டாவது திருமணம்! ராஜ் நிடிமோருவின் மனைவி வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜின் முதல் மனைவி ஷாமிலி போட்டு இருக்கும் insta போஸ்ட் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு நாக சைதன்யா பற்றி எந்த இடத்திலும் சமந்தா பேசவில்லை. நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் அந்த தருணமும் வந்திருக்கிறது. இன்று காலை நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது.

சமந்தாவிற்கு பைரவி கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதற்குப் பிறகு சமந்தாவின் பேவரைட் பிளேஸ் ஆன ஈஷா மையத்தில் வைத்து திருமண விழா நடைபெற்றிருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. சமந்தாவை போலவே ராஜ்க்கு இது இரண்டாவது திருமணம் தான். ராஜ்க்கு 44 வயதாகிறது, சமந்தாவிற்கு 38 வயதாகிறது
சமந்தா நாக சைதன்யாவுடன் திருமணத்திற்கு பிறகு தி ஃபேமிலி மேன் சீரிஸில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் இதை வைத்துதான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூட கூறப்பட்டது. பிறகு சமந்தா விவாகரத்து செய்ததும் அந்த வெப்சீரிஸை இயக்கிய ராஜ்-ஐ காதலிக்க தொடங்கியதாக செய்திகள் பரவியது.
ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இன்று இவர்களுடைய திருமண செய்தி வெளியானதும் ராஜின் முன்னாள் மனைவி ஷாமிலி போட்டு இருக்கும் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் "விரக்தி ஆனவர்கள் விரக்தி ஆன செயலை செய்வார்கள்" என்ற மைக்கேல் ப்ரூக்ஸின் வார்த்தைகளை வைத்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications