SaReGaMaPa: சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் 5 டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? இதுவரை நடக்காத அதிசயம்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் எந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத அளவில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் குறைந்தபட்சம் 50 லட்சம் வரை பரிசு வழங்கப்பட்ட வந்த நிலையில் இப்போது அதற்கு இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் தங்களுடைய திறமையை காட்டுகிறார்கள். ஒரு சிலருக்கு தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட தயக்கம் இருந்தாலும், தன்னை போல இன்னொருவரை பார்க்கும் போது அவர்களை அறியாமல் அந்த நபர் மீது அன்பு செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
ஜீ தமிழில் மீண்டும் கில்லாடி ஜோடிஸ்.. சின்ன தளபதி தான் ராக்! இதை கவனிச்சீங்களா? கலக்குறாங்களே!
அதை தொடர்ந்து ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்கள் கடந்து விட்டது. கடந்த சீசனில் திவினேஷ் வெற்றி பெற்றது பலராலும் பாராட்டப்பட்டது அவர் சின்ன வயதாக இருந்தாலும் 80ஸ் 70 ஸ் பாடல்கள் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதேபோல இந்த சீசனிலும் சில குழந்தைகள் பழைய பாடல்களை இப்போதைய இளைஞர்களும் கேட்கும் வகையில் பாடி வருகிறார்கள்.

வழக்கம்போல இந்த சீசனிலும் பாடும் போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். ஒரு சில குழந்தைகளை பார்க்கும்போது இந்த பிஞ்சு குழந்தைகளுக்குள் இவ்வளவு திறமையா? என்று வியக்க வைக்கின்றனர். சிலருடைய எளிமை மற்றும் பாடல் திறமை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சூழல் எப்படி இருக்க, இந்த பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகவும் பலர் போட்டி போடுகின்றனர்.
காரணம் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நன்கு பிரபலம் கிடைக்கிறது, அதேபோல பரிசுகள் மற்றும் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்த தொடங்குகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கியது. அந்த நிகழ்ச்சி இப்போது 11 வது சீசனுக்கு வந்திருக்கிறது. அதேபோல சரிகமப நிகழ்ச்சியின் லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி பற்றிய தகவல் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 பரிசு தொகை
அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னருக்கு டிஆர்ஏ (DRA) நிறுவனம் ஒரு கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான வீட்டை பரிசாக கொடுக்க முன் வந்து இருக்கின்றனர். இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரைக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. இன்னும் சில நிறுவனங்கள் பைனலில் கார், பைக்கு போன்றவை கூட பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இந்த சீசன் டைட்டில் வின்னருக்கு ஒரு கோடி என்பதால் இந்த சீசனில் யார் டைட்டில் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வந்திருக்கிறது. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க பாஸ்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications