SaReGaMaPa: ஜீ தமிழ் சரிகமப ஃபினாலே மேடையில் உருக்கம்! 'தைய தைய' பாடிய சின்னு செந்தமிழனுக்கு கிடைத்த பரிசு
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி முடிந்துள்ள சரிகமப சீனியர் சீசன் 5 இறுதிச் சுற்றில், போட்டியாளர்களுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ் பரிசுகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போட்டியாளர் சின்னு செந்தமிழன்-க்கு கிடைத்த அன்பளிப்பு அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

உருகிய மேடையும், கிடைத்த கிஃப்ட்டும்
கிராண்ட் பினாலே போட்டியில் சின்னு செந்தமிழன் பிரபலமான 'தைய தைய' பாடலைத் தன்னுடைய அசத்தலான குரலில் பாடினார். இந்தப் பாடலுக்காக அவருக்குப் பல பாராட்டுகள் கிடைத்தது. அவர் பாடி முடிந்த பிறகு தான் மேடையில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. சின்னுவுக்கு ஒரு ரசிகர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கிப் பரிசாக அனுப்பி வைத்தார்.
கண்ணீர் விட்ட சின்னு
எதிர்பாராத இந்த பரிசை பார்த்ததும் சின்னு மேடையிலேயே கதறி அழத் தொடங்கினார். அப்போது அவர், தான் சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு ஒரு பழைய ஸ்கூட்டர் தான் வாங்க முடிந்தது என்றும், 'உன் வயதினர் எல்லோரும் புது கார் பைக் என வாங்கிவிட்டார்கள், ஆனால் நீ இப்படி இருக்கிறாய்' என வீட்டில் அப்பா கேட்டதை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டதாகவும் கூறினார்.
மெக்கானிக் கடையில் இருந்து மேடை
சின்னு செந்தமிழனின் பின்னணி அனைவரையும் உருகச் செய்தது. அவர் ஒரு மெக்கானிக் செட்டில் பாட்டுப் பாடி, அந்த வீடியோக்களை வலைதளங்களில் வெளியிட்டுப் பிரபலமானார். சரிகமப நிகழ்ச்சியில் அவர் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்தவர் பாடலாசிரியர் சினேகன் தான். செந்தமிழன் பாடலை சமூக வலைதளத்தில் கேட்டு அவரை எப்படியாவது மேலே கொண்டு வர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும், நிகழ்ச்சியின் முதல் நாள் ஆடிஷனுக்கு செந்தமிழனுக்குத் துணையாக வந்ததாகவும் சினேகன் கூறியிருந்தார்.
ஆனாலும், இந்த கிராண்ட் ஃபினாலேவுக்கு சினேகனால் வர முடியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான், சினேகனின் மனைவி அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதித்திருப்பதாக ஒரு பதிவு போட்டிருந்தார். அதனால் தான் அவரால் வர முடியாமல் போயிருக்கும் என்று நம்பப்படுகிறது.
பல நல்லவர்களின் ஆதரவால் இவ்வளவு உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கும் சின்னு செந்தமிழன், இந்த அன்பளிப்பை பெற்று பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். இன்னும் மேலும் வளர வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications