"கண்ண தொறக்கணும் சாமி” சரிகமபவில் ஷிவானி பாடிய பாடல்! மேடையிலே கங்கை அமரன் கொடுத்த கமெண்ட்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஷிவானி பாடிய பாடல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதுவும் "கண்ண தொறக்கணும் சாமி" என்ற பாடலை ஷிவானி பாடி இருக்கிறார். அதை கேட்டதும் சிறப்பு விருந்தினராக வந்த கங்கை அமரன் கொடுத்த கமெண்ட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இப்போது சீனியர் பிரிவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சில போட்டியாளர்கள் மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் இணையத்தில் அதிகமாக ட்ரோல் ஆகி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ஷிவானி. ஷிவானி இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட போது அவரைப் பற்றிய பயோகிராபி யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவருடைய பாடல் பெரிதாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது அதுவும் "போறானே போறானே" என்ற பாடல் தான் ஆடிஷனில் இவர் பாடி இருந்தார்.
அந்த பாடலை கேட்டு மற்ற எல்லா நடுவர்களும் தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆனால் பாடகர் விஜய் பிரகாஷ் மட்டும் ஷிவானியை தேர்ந்தெடுக்கவில்லை. அவர் நீங்க இன்னொரு கம்மிங் பாடல் பாடி இருக்கீங்களே அதை பாடுங்க என்று சொல்ல, ஷிவானி கன்னடத்தில் புகழ்பெற்ற ஒரு பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் ஹை பிச்சில் பாடப்பட்ட பாடல் அதைக் கேட்டதும் அனைவரும் வியந்து இருந்தனர்.
அதற்குப் பிறகு விஜய் பிரகாஷ் ஷிவானியை தேர்ந்தெடுத்திருந்தார். அப்போது விஜய் பிரகாஷுக்கு ஷிவானி தெரியாது என்பது போல நடந்து கொண்டிருந்தார். ஆனால் ஷிவானி விஜய் பிரகாஷின் ஸ்டூடென்ட் தான் என்பது ஷிவானி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்திலேயே அப்லோட் செய்து இருக்கிறார். ஷிவானி ஏற்கனவே ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரன்னராக டைட்டில் வெற்றி பெற்று இருக்கிறார். அது வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 12 கன்னடத்தில் தான்.
கன்னட மொழியில் 12வது சீசனில் ரன்னராக தேர்வான ஷிவானிக்கு இப்போது ஜீ தமிழ் சீனியர் 6 நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வந்தது. இதனாலேயே ஷிவானியின் பாடலை சிலர் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஷிவானி ஒவ்வொரு வாரமும் தன்னுடைய பெஸ்ட் ஆன பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வாரம் கங்கை அமரன் பாடல் சுற்று நடக்கிறது. அதில் கங்கை அமரனின் ஹிட்டான பல பாடல்களை போட்டியாளர்கள் பாடுகின்றனர். அப்போது ஷிவானி "கண்ண தொறக்கணும் சாமி" பாடலை ஆண் மற்றும் பெண் இரண்டு குரலிலும் பாடி இருக்கிறார். இதை பார்த்து கங்கை அமரன் பாராட்டி இருந்தார். அதாவது "இந்த பாடலில் பெண் குரலை மட்டும் எடுத்தால் அப்படியே சுசீலா அம்மா பாடுனது போல இருக்கிறது. இப்படி ஒரு முயற்சி எடுப்பீங்க என்று நான் நினைக்கல. இந்த நிகழ்ச்சி பலருடைய திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறது" என்று பாராட்டி இருந்தார். அதுபோல சிறப்பு விருந்தினர்கள் சிலரும் ஷிவானியின் பாடலை பாராட்டி இருக்கிறார்கள். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல ஷிவானி டைட்டில் வெற்றி பெற்றவர் மட்டுமல்ல பல ஈவண்டுகளில் பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications