ஆட்டோ டிரைவரால் கண்ணீர் மயமான சரிகமப அரங்கம்.. இறங்கி வந்து சர்ப்ரைஸ் கொடுத்த நடுவர்கள்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் இன்ட்ரோ ரவுண்ட் ஒளிபரப்பாகியது. 12 போட்டியாளர்கள் கடந்த வாரம் பாடி முடித்த நிலையில் இந்த வாரம் 12 போட்டியாளர்களின் போட்டிக்கான முதல் பெர்பாமன்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் சரிகமப மேடையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வீரபாண்டி பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற "அறியாத வயசு... புரியாத மனசு" என்ற பாடலை பாடி நடுவர்களை மிரள வைத்துள்ளார். வீரபாண்டி பாடலை கேட்ட ஸ்ரீனிவாஸ் எப்படி நீ இப்படி பாடுன, அப்படியே நெஞ்சுல அடிக்குது என பாராட்டியுள்ளார்.
அதன் பிறகு வீரபாண்டியின் ஆட்டோ ஸ்டாண்டில் வேலை பார்க்கும் அத்தனை டிரைவர்களும் மேடைக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்க அவர்களின் நட்பை பார்த்து மொத்த அரங்கமும் கண் கலங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ டிரைவர் வீரபாண்டி ஆரம்பத்தில் பேசுகையில், தான் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்.
அதனாலையே என்னுடைய ஆட்டோவில் இளையராஜாவின் பாடல்கள் தான் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நான் பாட்டு கிளாசுக்கு சென்று பாட்டு கற்றுக் கொண்டது கிடையாது. இளையராஜாவின் பாடல்களை என்னுடைய ஆட்டோவில் ஒலிக்கவிட்டு அதைக் கேட்டு தான் நான் பாட்டு கற்றுக் கொண்டேன். எனக்கு எப்போதுமே இளையராஜா தான் உயிர் நாடி. அவர்தான் என்னுடைய சுக, துக்கங்களில் கலந்து இருக்கிறார் என்று பேசி இருக்கிறார்.
"சரிகமப" மேடையை சோகத்தில் ஆழ்த்திய இலங்கை இளைஞன்.. சொன்ன வார்த்தையை கேட்டு அழுத நடுவர்கள்
அடுத்து முகேஷ், "சந்தன தென்றலே" பாடலை பாடி அசர வைக்க கார்த்திக், விபி ஆகியோர் முகேஷ் உடன் சேர்ந்து பாடி சரிகமப மேடையை மேலும் அழகாக்கியுள்ளனர். இன்னொரு போட்டியாளரான ஜெயபார்கவி பாடிய பாடலை கேட்டு இதுவரைக்கும் ரியாலிட்டி ஷோல இந்த பாடலை இப்படி யாரும் பாடினதே இல்லை என்று பாராட்டி தள்ளியுள்ளனர்.
நான்கு நடுவர்களும் தனித்தனியாக ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக எப்படி பின்னணி பாடகர்கள் ஆனார்கள் என்பது பற்றி பேசி நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படி இன்னும் பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் இந்த வார சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications