Sasikumar: ரஜினி சொன்ன அந்த விஷயம்! நான் கேட்காமல் போயிட்டேன், அதனால வந்த பிரச்சனை! ஓபனா பேசிய சசிகுமார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் சொன்ன அட்வைஸை தான் கேட்காமல் போய்விட்டதால் பட்ட கஷ்டங்கள் குறித்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் உருக்கமாக பேசி இருக்கிறார். தனக்கு ரஜினிகாந்த் இரண்டு அட்வைஸ் சொன்னதாகவும் அதில் தான் ஒன்றை கேட்காமல் போய்விட்டாலும் மற்றொன்றை கேட்டுக் கொண்டேன் என்றும் சொல்லி இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்ப்போம்.
இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என்று பலமுகம் கொண்ட சசிகுமார் ரசிகர்களின் ஃப்ரெண்ட்லி நடிகராகத்தான் இருக்கிறார். மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவர் தான். சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும், எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர்.

சமீபத்தில் கூட ஐயப்பன் சாமி கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கியிருந்தார். அப்போதும் பக்தி பாடகர் வீரமணியின் பேரன் பாடுவதை கைகட்டி பணிவாக கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
அதுபோல சசிகுமார் பெயரை கேட்டதும் பலருக்கும் அவர் நட்புக்காகவும், காதலுக்காகவும் கை கொடுப்பவர் என்ற நினைவு வரும். ஆனால் அவர் அவருடைய நிஜ வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறாராம். பணத்தை மதிக்காமல் தான் ஆரம்பத்தில் இருந்தேன் என்று சசிக்குமார் பேசியிருக்கிறார்.
அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தில் ஒரு காட்சியில் ரத்தம் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கும் போது அவர்கள் நன்றி சொல்வார்கள் ஆனால் ரஜினி வெறும் பணம் தானே.. என்று சொல்லுவார் அதுபோல பலர் பணத்தைப் பற்றி சொல்வதை கேட்டு நானும் பணத்தை மதிக்காமல் தான் இருந்தேன். அதனால் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பணம் என்னை மதிக்காமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த பணத்தை பற்றி புரிந்து கொண்டேன், அதை மதிக்கவும் தெரிந்து கொண்டேன்.
நான் பணத்தை மதிக்க தொடங்கிய பிறகு தான் பணமும் என்னை மதிக்க தொடங்கி இருக்கிறது என்று ஒரு பேட்டியில் சசிகுமார் பேசி இருந்தார். அதேபோல இன்னொரு பேட்டியில் சசிகுமார் பேசும்போது ரஜினிகாந்துடன் இவர் நடிக்கும் போது ரஜினிகாந்த் இவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தாராம். அதாவது நீ ஒவ்வொரு படத்திற்காக வாங்கும் அட்வான்ஸ் பணத்தை முதலில் ஏதாவது ஒரு இடத்தை வாங்கி போடு, அது எந்த ஊரில் இருந்தாலும் பரவாயில்லை. இடத்தை வாங்கி போட்டுட்டு அதை மறந்துடு, ஆனால் ஒரு நாள் உனக்கு ஒரு பிரச்சனை வரும்போது அந்த இடம் உனக்கு கை கொடுக்கும் என்று ரஜினிகாந்த் சொன்னாராம்.
ஆனால் நான் அப்போது அதை கேட்கவே இல்லை, அதற்கு பிறகு சில வருஷங்களிலேயே நான் தப்பு பண்ணிட்டேன் என்று எனக்கு புரிஞ்சது என்று சசிகுமார் சொல்லி இருக்கிறார். அப்புறம் ஒரு தடவை ரஜினியை பார்க்கும்போது, எனக்கு உன்னிடம் இன்னொரு விஷயம் சொல்லணும்னு தோணுது.. நீ தயாரிப்பு பண்ணுறத விட்டுவிடு என்று சொன்னாராம்.
ஏற்கனவே ஒரு விஷயத்தை சொன்னாரு அதைக் கேட்காமல் போய்விட்டதால் பல கஷ்டப்பட்டுட்டேன், இந்த வாழ்க்கை ஒரு விஷயத்தை நம்மிடம் உணர்த்துகிறது என்றால் அதை நேரடியாக சொல்லாது இன்னொருத்தர் மூலமாக சொல்லும். அதேபோல எனக்கு ரஜினி சார் மூலமாக வந்து சொன்னது.. ஆனால் நான்தான் கேட்காமல் விட்டுவிட்டேன். அதனால் இவர் இரண்டாவது சொல்வதை நாம் கேட்காமல் இருக்க கூடாது என்று அதற்கு பிறகு நான் தயாரிப்பதையே விட்டுவிட்டேன் என்று சசிகுமார் பேசி இருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications