Sembaruthi Serial: செம்பருத்தி வாடிப் போச்சு.. சித்தி 2 போயே போச்சு!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது கடந்த ஒரு வாரமாகவே இறங்கி இருக்கிறது. சித்தி 2 சீரியலும் வேலைக்கு ஆகலை. இப்போது 9 மணி நேர ஸ்லாட் யாருக்கும் கைக்கொடுக்கவில்லை.
சன் டிவியின் பிரைம் டைம் ஸ்லாட்டையே புரட்டி போட்ட செம்பருத்தி இப்போது ஏனோ தானோன்னு ரொம்ப பரிதாபமா ஒளிபரப்பாகி வருது. நடிகை பிரியா ராமனை கொஞ்ச நாள் பிக்னிக் அனுப்பி இருக்கிறார்கள் போலும்.
முக்கிய கதாபாத்திரமான ஆதியும் இல்லை.. மொத்த சீனையும் இப்போது பார்வதி தலையில் என்று தூக்கி வைத்து செம்பருத்தியை ஒளிபரப்பி வருகிறார்கள். ரசிகர்களுக்கு ஆர்வம் குறைஞ்சு போச்சு.
Recommended Video

செம்பருத்தி சீரியல்
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி பார்வதி காதல் கல்யாணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு கல்யாணம் செய்துக்கொண்டது யாருக்கும் தெரியாதபடி ரகசியம் காத்து வாழ்ந்து வந்தார்கள். அப்போது சீரியலை மக்கள் விரும்பி பார்த்து வந்தார்கள். ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க ஆதி பார்வதி நெருக்கம், ரொமான்ஸ் என்று எபிஸோட்ஸ் கொடிக்கட்டிப் பறந்தது.

செம்பருத்திக்குப் போட்டி
செம்பருத்தி சீரியலுக்கு போட்டியாக மற்ற சானல்கள் குறிப்பாக சன் டிவி சீரியல் கொடுத்தாக வேண்டும் என்கிற நிலை. சன் டிவியின் ராசாத்தி கைக்கொடுக்கவில்லை. அடுத்து ராதிகா சரத்குமாரின் சித்தி 2 சீரியலை ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி நேரத்துக்கு ஒளிபரப்பி வந்தார்கள். ஆரம்பித்த வேகத்தில் சித்தி 2 டாப்பில் போய்விட்டது.

சன் டிவி சித்தி 2
சித்தி 2 சன் டிவி எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் போட்டியில் நிற்கவில்லை. ஆரம்பத்தில் படுசூட்டோடு களம் கண்ட சித்தி 2 போகப் போக எதிர்பாராத சரிவை சந்தித்து வருகிறது. ரசிகர்கள் விரும்பிய டைட்டில் சாங் கூட ஒளிபரப்பப் படுவதில்லை. கதை சப்பென்று இருக்கிறது. சிறு பிள்ளைத்தனமான வில்லத்தனத்தை ராதிகாவுக்கு எதிராக காண்பித்து இருப்பதும் நிற்கவில்லை.

கார்த்திக் பிரியாராமன்
செம்பருத்திக்கு சூப்பர் பவர் சேர்த்த பிரியாராமன், கார்த்திக் ரெண்டு பேருமே சீரியலில் தொடர்ந்து வரவில்லை. அதுவும் பிரியாராமன் கடந்த சில வாரங்களாகவே சீரியலில் இல்லை. இதெல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றம். எனவே, செம்பருத்தி இப்போது டவுனில் இருக்கிறது. 9 மணிக்கு டிவி முன் உட்காருவது.. ரிமோட்டை எடுப்பது எனும்போது கை தானாக வேறு சானலை மாற்றும் அளவுக்கு சன் டிவி, ஜீ தமிழ் டிவியின் நிலை இருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications