சீரியலில் மீண்டும் களமிறங்கும் “செம்பருத்தி” கார்த்திக்..!!ஆனால் கண்டிஷன் தான் பெருசாம்..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் கதாநாயகன் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

கார்த்திக் மீண்டும் சீரியலில் நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் இப்போதே எந்த சீரியல்? எந்த சேனல்? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அதுவும் அவர் ஏற்கனவே விலகிய ஜீ தமிழ் சேனலில் தான் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

 பெயர் வாங்கி கொடுத்த சீரியல்

பெயர் வாங்கி கொடுத்த சீரியல்

நடிகர் கார்த்திக் ராஜ் சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கனாக் காணும் காலங்கள் சீரியல் முதல் தொடங்கி ஆபீஸ் என பல சீரியல்களில் இவர் நடித்து உள்ளார். இவர் நடிக்க ஆரம்பமான கனா காணும் காலங்கள் சீரியலில் இவருக்கு இருந்த ரசிகர்கள் இப்போது வரைக்கும் இவரை நேசித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருக்கு பெரிய அளவில் வெற்றியையும் பெயரையும் வாங்கிக் கொடுத்தது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் தான். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து பல ரசிகைகள் இவருக்கு அதிகரித்து இருந்தனர்.

செம்பருத்தி ஆதி

செம்பருத்தி ஆதி

செம்பருத்தி சீரியலில் ஆதி கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் திடீரென்று அந்த சீரியலை விட்டு விலகி விட்டார். சீரியலில் இருந்து இவர் வெளியேறிய பிறகு சொந்தமாக ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்து வந்தார். அதற்கு ரசிகர்களிடம் உதவிகளை பெற்று தன்னுடைய படத்தை எடுத்து வந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய திரைப்படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். அது மட்டும் அல்லாமல் ரசிகர்களிடமிருந்தும் உதவிகளை கேட்டு வந்தார்.

வீரமான சபதம்

வீரமான சபதம்

ஜீ தமிழில் சீரியலிலிருந்து இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று இப்ப வரைக்கும் யாருக்கும் தெளிவாக தெரியாது. இவரும் அதை குறித்து எந்த தகவலையும் வெளிப்படையாக கூறவில்லை. அதேபோல சேனலில் இருந்தும் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை. இந்த நிலையில் தான் நடிக்க கூடாது என்று சிலர் நினைப்பதாகவும் அதனால் அவர்களின் முன்பு தான் தனது திறமையை நிலைநிறுத்தி, எனக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவினால் நான் வெற்றி பெறுவேன் என்று இவர் சபதம் எடுத்து திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த நிலையில் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கடந்த மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அப்படி இருந்தால் சந்தோஷம்தான்

அப்படி இருந்தால் சந்தோஷம்தான்

தற்போது ஒரு சில ரசிகர்கள் இவர் மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவர் எப்போது சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாகத்தான் இருந்து வருகிறதாம். ஆனாலும் ஜீ தமிழில் தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் தன்னுடைய திரைப்படத்தை ஜி ஓ டி டி யில் வெளியிட வேண்டும் என்று கண்டிஷன் வெளியிட்டு இருப்பதாக சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனாலும் அதை பற்றி இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் கார்த்திக் வெளியிடவில்லை. ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சில சீரியல்கள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு சீரியல்கள் அறிமுகமாக இருக்கிறது. அதில் இவர் நடிக்கும் சீரியலாக ஒன்று இருக்குமோ என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+