திருமணம் முடிச்சு 15 நாளில் சம்யுக்தா பிரிய காரணம் 'அந்த' நபர் தான்.. விஷ்ணுகாந்த் கொடுத்த விளக்கம்
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் முடிந்தது.
காதல் திருமணம் செய்த இந்த ஜோடி தற்போது கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தங்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை பற்றி முதல் முறையாக விஷ்ணுகாந்த் தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்று புதிதல்ல. அந்த மாதிரி தான் கடந்த எட்டு மாதங்களாக காதலித்து மார்ச் மாதம் பிரம்மாண்டமாக சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த இரண்டு ஜோடிகளும் தங்களுடைய காதல் விஷயத்தை சமூக வலைத்தளத்தில் தான் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு அதே சமூக வலைத்தளத்தில் தான் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு வருகின்றனர்.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருமே திருமணம் முடிந்து 15 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் தங்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து டெலிட் செய்திருக்கின்றனர். அதேபோல இருவரும் அன்பாலோ செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் சமூக வலைத்தளத்தில் போஸ்ட்களும் கேப்ஷன் கொடுத்து வரும் நிலையில் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியாமல் ரசிகர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் முதன்முறையாக விஷ்ணுகாந்த் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் எங்களுடைய பிரச்சனைக்கு காரணமே சம்யுக்தாவின் அப்பாதான்.. அவர் எங்களுடைய திருமணத்திற்கு முன்பு குடும்பத்தோடு சேராமல் இருந்தார். சம்யுக்தாவை நான் காதலித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் எங்களுடைய திருமணத்தின் போது தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து சேர தொடங்கினார்.
பிறகு எங்களுடைய திருமணத்திற்கு பிறகு எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். காலையில் சாப்பாடு கொண்டு வருவதற்காக ஒரு முறையும் மாலையில் அந்த சாப்பாடு பாத்திரத்தை எடுப்பதற்காக ஒரு முறையும் வருகிறார். எங்களுடைய பிரச்சனைகளுக்குள் அவர் தலையிடுவதால் எங்களுடைய பிரச்சனையும் பெரியதாகிறது. ப்ரைவேசியும் போய்விடுகிறது. அதனால் நான் அவர் எதற்காக வருகிறார் இப்படி வருவதால் நமக்கு பிரைவேசி இல்லையே என்று சொன்னேன் அதிலும் பிரச்சனை தொடங்கியது.
அதுபோல சம்யுக்தா அவருடைய பெண் தோழி ஒருவரோடு அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கனவே பல விஷயங்களை சம்யுக்தா என்னிடம் கூறியிருக்கிறார். நாங்கள் காதலிக்கும் காலத்தில் எங்களைப் பற்றி அந்த தோழி தவறாக பேசியவர். அதனால் அவரோடு எதற்காக ரொம்ப பேசுற என்று கேட்டேன். அவர் நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். அவர் முக்கியமா நான் முக்கியமா என்று கேட்டதற்கு என்னுடைய தோழி தான் முக்கியம் என்று கூறிவிட்டார். அப்படித்தான் எங்களுடைய பிரச்சனை ஏற்பட்டது அதனால் தான் கடைசியாக அவர் பிரிந்து சென்றார்.
திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் எங்களுக்கு பல பிரச்சனைகளும் வந்தது. திருமணத்திற்கு முன்பு 8 மாதங்கள் காதலித்தோம் அப்ப எல்லாம் இல்லாத பிரச்சனைகளும் இந்த 15 நாட்களுக்குள் ஏற்பட்டதனால் தனித்தனியாக இருக்கிறோம். ஆனால் நான் பலமுறை சம்யுக்தாவோடு பேசுவதற்கு முயற்சி செய்தேன். அதற்கு அவர்தான் இடம் கொடுக்கவில்லை. மாறாக என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் கேப்ஷன் கொடுப்பதால் பலர் தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சம்யுக்தாவை அடித்து துன்புறுத்தவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தவும் இல்லை. ஆனால் என்னை பற்றி பல youtube சேனல்களிலும், செய்திகளிலும் தவறாக சித்தரிக்கிறார்கள். அதற்காகத்தான் விளக்கம் கொடுப்பதற்காக நான் இப்போது பேசி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து சம்யுக்தா எந்த பதிலும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதற்காக விரைவில் அவரும் பதில் கொடுத்தால் தான் என்ன உண்மையான பிரச்சனை என்பது தெரியவரும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications