Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல.. சூட்டிங் ஸ்பாட்டில் எல்லார் முன்னாடி! நடிகை அனிதா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை அனிதா வெங்கட் படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் முன்பும் ரஜினிகாந்த் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பல வருடம் கழித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை அனிதா வெங்கட் முதல் முறையாக படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் மகளாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தாராம் .ஆனால் முதல் திரைப்படத்திலேயே தனக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Serial Actress Anitha Venkat Interview Actor Rajinikanth good character

அந்த வகையில் ஒரு சில நடிகைகள் எந்த சேனலில் பார்த்தாலும் பல சீரியல்களில் இடம் பிடித்து வருகிறார்கள் அதில் ஒருவர் தான் நடிகை அனிதா வெங்கட். இவர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதியின் அம்மாவாகவும், ஆஹா கல்யாணம் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். வயதில் சிறியவராக இருந்தாலும் கதாநாயகனுக்கு அம்மாவாகவும் மாமியாராகவோ இவர் நடிக்கிறாரே என்று பல ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா மற்றும் சீரியல் அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். மேடை பாடகியாக இவர் மறைந்த பாடகர் எஸ்பிபியோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருக்கு முதன் முதலில் சின்னத்திரையில் ஆகா என்ற சீரியல் மூலமாகத்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயகுமாரோடு ஒரு சீரியல் ஒன்றில் அனிதா நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜயகுமார் நான் ரஜினிகாந்தை பார்க்க போறேன் நீயும் வரியா என்று கேட்டிருக்கிறார். உடனே வரேன் அங்கிள் என்று இவரும் கிளம்பி போயிருக்கிறார். அப்போது இவருக்கு 17 வயசு தான் இருக்குமாம். சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்திடம் விஜயகுமார் இது என்னுடைய மகள்... இவர்தான் எனக்கு சீரியலில் மகளாக நடிக்கிறார் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அப்போது ரஜினிகாந்த் இவரிடம் நீ விஜயகுமாருக்கு மட்டும்தான் மகளா நடிப்பியா எனக்கு மகளா நடிக்க மாட்டியா என்று கேட்டாராம். உடனே அனிதா வெங்கட் கண்டிப்பா நடிப்பேன் அங்கிள் நீங்க சொன்னா மட்டும் போதும் என்று சொல்லி இருக்கிறார். பிறகு கொஞ்ச நேரம் நலம் விசாரித்து பேசிவிட்டு இவர் வீட்டுக்கு வந்து விட்டாராம். பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து இவருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது.

அதாவது படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இவரும் சந்தோஷமாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார். அப்போது இவரை பார்த்ததும் இவர் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காரு. இவருக்கு காதலிக்கிற மாதிரி காட்சிகள் வைத்தால் பிரச்சனை வரும் என்று சொல்ல உடனே ரஜினிகாந்த் எனக்கு இரண்டு பொண்ணு என்கிற மாதிரி கதையை வைத்துக் கொள்ளலாமே என்று சொல்லி இருக்கிறார்.

உடனே சரி என்று இவரை இரண்டாவது பெண்ணாக மாற்றிவிட்டார்களாம். பிறகு ஒருநாள் ஷூட்டிங்கில் நடித்து முடித்த பிறகு இவர் வெயிலில் இவருடைய அம்மாவோடு அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த ரஜினிகாந்த் என்ன இங்க உட்கார்ந்து இருக்கீங்க உங்களுக்கு உள்ளே சேர் தரவில்லையா என்று கேட்க, இவர் வேண்டாம் இங்கே இருந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். உடனே ரஜினிகாந்த் படடீமை கூப்பிட்டு இவர் சீரியலில் மட்டும் எனக்கு மகளாக நடிக்கவில்லை என்னுடைய மகள் தான்.

Serial Actress Anitha Venkat Interview Actor Rajinikanth good character

எனக்கு கொடுக்கிற மரியாதை இவருக்கும் கொடுக்கணும்னு சொல்லி இருக்கிறார். உடனே அங்கிருந்து அனைவரும் பயந்து போயி இவர்களுக்கு தேவையான ரெண்டு சேர்க்கு பதில் 4 சேர் கொண்டு வந்து கொடுத்து இளநீர், ஜூஸ் சாப்பாடு என்று விதவிதமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். பிறகு அந்த திரைப்படம் முழுவதும் நடித்து முடிக்கிற வரைக்கும் இவருக்கு அங்கு நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

அதோடு ஒரு நாள் ரஜினிகாந்த் இவரிடம் நீ நல்லா பாட்டு பாடுவியாமே. ஒரு பாட்டு பாடு அதுவும் நான் நடித்த படத்தில் உள்ள பாட்டு பாடு என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அனிதாவிற்கு நன்றாக பாட்டு பாட தெரிந்தாலும் அது ரஜினி படத்தில் உள்ள பாடல் தானா என்று பாடல்கள் தெரியாதாமாம். உடனே இவருடைய அம்மாவிடம் பேசி அம்மா ரஜினி சார் எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்.

அப்பதான் அனிதாவின் அம்மா நீ ஜானி படத்தில் ஒரு பாட்டு பாடுவியே அது கூட இவரு நடிச்சது தான் என்று சொல்ல இவர் ஓடிவந்து ரஜினி முன்பு அந்த பாட்டை பாடி முடித்திருக்கிறார். பாட்டு படித்து முடித்ததும் எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கும் போது பெரிய கேக் ஒன்று ரஜினிகாந்த் கொண்டுவர சொல்லி இருக்கிறார். ஆமாம் அன்றைக்கு அனிதா வெங்கட்டின் பிறந்த நாளாம்.

அது ரஜினி தெரிந்து வைத்துக் கொண்டுதான் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து அனிதா கண்கலங்கி போனாராம். இப்படி எல்லாம் ரஜினிகாந்த் பண்ணுவார் என்று நான் நினைக்கவே இல்ல என்று மனம் உருகி நெகழ்ச்சியோடு நடிகை அனிதா வெங்கட் பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+