மனசுக்கு வருத்தமா இருக்கு! முடிவு வரும்னு தெரியும்.. ஆனால்! நடிகை மகாலட்சுமி திடீர் வீடியோ
சென்னை: சீரியல் நடிகையான மகாலட்சுமி கடந்த வருடத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சோகமாக பேசியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளராகவும் பரீட்சயமான மகாலட்சுமி பல சீரியல்களில் முக்கிய கேரக்டரிலும் சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடத்தில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருந்தது இணையத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருந்தது. இணையத்தில் ட்ரெண்டிங் கப்பில் ஆக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி வலம் வந்தனர்.

இவர்கள் இவருடைய திருமணத்தை பார்த்து 90ஸ் கிட்ஸ் பலரும் வயிறு எரிந்து புலம்பி வந்தனர். ஒரு சிலர் ரவீந்தருக்கு இப்படி ஒரு மனைவி கிடைத்திருக்கும் நிலையில் நமக்கும் கண்டிப்பாக பொறுத்திருந்தால் திருமணம் நடக்கும் என்றெல்லாம் மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தனர். திருமணத்திற்கு பிறகும் வார இறுதி நாட்களில் தன்னுடைய கணவரோடு புகைப்படங்களை எடுத்து மகாலட்சுமி பதிவிட்டு வருகிறார்.
ஆனால் சில தினங்களாகவே ரவீந்தர் சோகமான போஸ்ட்களை போட்டுக் கொண்டிருக்கிறார். அது குறித்து ரவீந்திரடம் உங்களுக்கு விவாகரத்து ஆகப் போகிறதா? என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதில் அளித்த ரவீந்தர், "எனக்கு இந்த ஜென்மத்தில் மகாலட்சுமி மட்டும்தான் என்னுடைய துணை. அவளைத் தவிர என்னை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதனால் எங்களுக்கு விவாகரத்து என்ற பேச்சுக்கே வாய்ப்பு இல்லை" என்று கூறியிருந்தார்.
மகாலட்சுமி தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இதற்கான இறுதி நாள் சூட்டிங் முடிவடைந்த நிலையில் இது குறித்து மகாலட்சுமி உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் இந்த சீரியல் முடிவடைகிறது என்று தகவல் எங்களுக்கு மிகவும் சோகமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் ஒரு நாள் சீரியல் முடிவு வரும் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் வருத்தத்தோடு என்னுடைய மனதை தேற்றி கொண்டிருக்கிறேன். நான் இந்த சீரியலுக்கு இடையில் தான் வந்தேன். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நான் இன்று சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வாசுகி என்ற கேரக்டர் என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு கேரக்டராக இருக்கிறது.
என்னுடைய கேரக்டருக்கு மக்கள் கொடுத்த ஆதரவு என்பது மிகப்பெரிய விஷயம். இதேபோல இன்னொரு கேரக்டர் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அடுத்த சீரியலில் உங்களை நான் சந்திக்கிறேன் என்று மகாலட்சுமி அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications