தென்காசியில் இருந்து திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நடந்த அசம்பாவிதம்.. சீரியல் நடிகை கண்ணீர் வீடியோ
சென்னை: சீரியல் நடிகை வைஷாலி தான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நல்ல வேளையாக தான் சீட் பெல்ட் போட்டு இருந்ததால் உயிர் பிழைத்ததாக கூறியிருக்கிறார்.

அத்துடன் அப்போது என்ன நடந்தது என்பது குறித்தும் பலர் தனக்காக செய்த செயல் குறித்தும் அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்
இசையமைப்பாளர் தமனின் மனைவி பிரபல பாடகியா..? சூப்பர் சிங்கரில் அறிமுகம்.. கடைசியில் இப்படியா ஆகணும்?
விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த வைஷாலி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் ஒன்றில் சஞ்சய்வின் தங்கையாக இவர் நடித்திருந்தார். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக இவர் தான் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
அதிகமான சீரியல்களில் இவர் நடித்து ஒரு சில எபிசோடுகளிலே வெளியேறி இருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி சீசன் 1,பாண்டியன் ஸ்டோர் போன்ற பல சீரியல்கள் அதில் அடங்கும் அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இவர் தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வைஷாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் வைத்த ஸ்டோரியை பார்த்து பலரும் எனக்காக போன் செய்து விசாரித்து இருக்கிறார்கள். அதற்கு எல்லாருக்கும் நன்றி. எனக்கு என்ன நடந்ததுன்னா நான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
அப்போது அங்கிருந்த வளைவுகளில் கவனிக்காமல் ஓட்டுநர் காரை செலுத்தி விட்டதால் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. அப்போது நான் சீட்டு பெல்ட் போட்டு இருந்தேன். அதனால் உயிர் பிழைத்தேன். நான் சீட்டு பெல்ட் மட்டும் போடலைன்னா இது மேஜர் ஆக்ஸிடென்ட்டா ஆகியிருக்கும். அதோடு ஏர்பேக் இந்த இரண்டும் தான் என்னுடைய உயிரை காப்பாற்றியது. முன்னாடி எல்லாம் சீட் பெல்ட் போடுங்க என்று பலர் சொல்லும்போது எனக்கு பெருசா அதில் உடன்பாடு இல்ல.
ஆனா இப்போ தான் அதோட அருமை எனக்கே புரியுது. அதுபோல நீங்களும் பைபாஸில் டிராவல் பண்ணும் போது ஸ்லோவா போங்க. டேனிங் எல்லாம் வரும்போது பார்த்து கொண்டு போங்க. கண்டிப்பா சீட் பெல்ட் போடுங்க நான் இப்ப பத்திரமா நல்லா இருக்கேன் கொஞ்சம் கழுத்தில் வலி இருக்குது அவ்வளவு தான் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
அத்தோடு சில நாட்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடிகையும் பிறந்தநாள் அன்று கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றபோது பைக் சக்கரத்தில் தன்னுடைய ஷால் மாட்டி தன்னுடைய கழுத்திலும் அடிபட்டுவிட்டது என்று விழிப்புணர்வு கொடுக்கும் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவனமாக சாலைகளில் வண்டி ஓட்ட வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் நமக்கு எதிரே வருபவர்களுக்கும் பாதுகாப்பு. நம்முடைய சிறு கவன குறைவும் பலருடைய வாழ்க்கையை நொடி பொழுதில் மாற்றிவிடும். அதனால் கவனமாக சாலைகளில் வண்டி ஓட்டுவோம்.












Click it and Unblock the Notifications