குப்புறடித்த ஷிவானி.. என்னாமா பண்றாருய்யா... வியர்த்து விறுவிறுத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: என்ன செஞ்சாலும் கொஞ்சம் சொல்லிக்கிட்டு செய்யக்கூடாதா...பார்த்ததும் மனசு பதறுகிறது...என ஷிவானியிடம் செல்லமாக ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
உடற்பயிற்சியில் வெறியாக மாறி இருக்கும் ஷிவானியை பார்த்து அவருடைய ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து வருகின்றனர்.
கையை ,காலை தூக்கி உடம்பை வில்லாக வளைத்து பார்ப்பவர்களுக்கு எனர்ஜி ஊட்டி இருக்கிறார் ஷிவானி.

விரைவில் வெள்ளித்திரை
விஜய் டிவியின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து தற்போது வெள்ளித்திரைக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார் ஷிவானி . சினிமாக்களில் நடிப்பதற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து வருகிறார் .நடித்தால் இனி சினிமா தான் என முடிவெடுத்து இருக்கும் இவர் , அதுவரைக்கும் சும்மா இருந்தா அழகு போய்விடும் என தினமும் அழகை மெருகேற்றி அதற்காக பார்த்து பார்த்து மனதையும் உடம்பையும் பக்குவப்படுத்தி வருகிறார்.

பள்ளி செல்லும் வயதில்
பள்ளி செல்லும் வயதிலேயே சீரியலில் கதாநாயகியாக மாறி இருந்தாலும் தற்போது பருவ மங்கையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நான் இனி சினிமாக்களின் தான் கதாநாயகி என விடாப்பிடியாக அதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கும் ஷிவானிக்கு அவருடைய ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருந்து வருகிறது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் இணையதளத்திலும் பெரும் ரசிகர்களை ஏற்படுத்திவிட்டார்.

வெறி ஏற்றிய நடிப்பு
சீரியலே பிடிக்காத ரசிகர்கள் கூட இவருக்காக பகல் நிலவு சீரியல் தொடர்ந்து பார்த்து வந்தனர் .அந்த அளவிற்கு சீரியலின் மூலமாக ரசிகர்களின் நாடிநரம்புகளுக்கு வெறி ஏற்றி விட்டார். பாவாடை தாவணியில் இவருடைய கலக்கலான அழகை பார்த்து விழுந்த ரசிகர்கள் இப்போ வரைக்கும் எந்திரிக்க வில்லையாம். அதனால் தான் இவருடைய போஸ்ட் ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

சீரியலுக்கு டாட்டா
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் சீரியலில் அறிமுகமாகி ,அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார் ,ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார் .ஆனால் இவரை சீரியலில் காணாமல் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்த நிலையில் தான் இவர் சீரியலை விட்டு போனாலும் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டனர்

பாலோ பண்ணும் ரசிகர்கள்
அதனால் சீரியல் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் ஆதரவினால் தற்போது வரைக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இதில் இவர் 325 போஸ்ட் போட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் போஸ்ட்க்கும் லைக்குகளும் ,கமெண்டுகளும் மலைபோல உயர்ந்து வருகிறது .

ஜம்முன்னு போட்டோஸ்
தற்போது லேட்டஸ்டாக இவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார் .போட்டோ அப்லோட் செய்து ஒரு மணிநேரத்திற்குள் ஆயிரத்தை தாண்டி கமெண்ட்டுகள் சென்றுவிட்டது. லைக்குகளை கேட்கவே வேண்டாம் அதுவும் லட்சத்தை தாண்டி சென்று விட்டது. உடற்பயிற்சிகளை செய்வதில் ஆர்வமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது புசுபுசுவென மாறிவிட்டார் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் சிக்கென மாறிவிட்டார் .

தொங்க விட்டு
இதற்கு காரணம் தன்னுடைய உடற்பயிற்சி தான் என்று கூறியிருக்கிறார் .அதுபோல தற்போதும் வேற லெவலில் துணியை கட்டி தொங்க விட்டு அதில் வளைந்து, நெளிந்து ,பறந்து பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். அதுவும் இவர் இப்போது போஸ்ட் போட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானது போதாது என்று " இன்று மற்றவர்கள் செய்யாததை நான் செய்வேன்".

செம எக்ஸர்ஸைஸ்
"அதனால் நாளை மற்றவர்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும்" என்று வெறித்தனமான கேப்ஷன் போட்டிருக்கிறார். இதை பார்த்ததும் தலைவி நீங்க வேற லெவல் நிஜத்திலும் நீங்கள் சிங்கப் பெண்தான் என இவருக்கு அவருடைய ரசிகர்கள் கமெண்ட்களால் எனர்ஜி ஊட்டி வருகின்றனர். ஆஹா இப்படி பண்ணா எப்படிப்பா என்று ரசிகர்களும் கூலாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications