நல்லவேளை நான் இந்த ஜெனரேஷன்ல பிறக்கல.. நொந்து போய் பேசிய அனுராதா ஸ்ரீராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய கணவரோடு சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நான் ஒவ்வொரு முறையும் ரியாலிட்டி ஷோவில் வரும் பசங்களை காப்பாத்துங்க என்று கடவுளிடம் வேண்டுவேன் என்று அனுராதா கூறி இருக்கிறார்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் பல குழந்தைகள் வாய்ப்புக்காக போராடுவது பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது என்று அனுராதா பேசியிருக்கிறார்.

Singer Anuradha Sriram protested not to be born in this generation

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் பாடகி அனுராதா ஸ்ரீராம் அனைவருக்கும் பரிசையம்மானவர் தான். இவருடைய பாடல்கள் 90ஸ் ஹிட்ஸ் முதல் 2கே கிட்ஸ்கள் வரை பலரும் ரசிக்கும் பாடல்களாக இருந்து வருகிறது. மனதை மயக்கும் குரல் என்றால் அனைவரையும் வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரராக இருக்கும் அனுராதா ஸ்ரீ ராம் கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானதாக தான் இருக்கிறது.

இவர் சினிமா பாடல்கள் பாடணும் என்ற ஆசை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், வங்காளம் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 13 மொழிகளில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்கலில் இவர் கலந்து கொண்டு நடுவராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி கையில் இருக்கும் குழந்தை.. சினிமா பாடல் பாடணும்னு ஆசையே இல்லை..பாடியதோ 5000 மேற்பட்ட பாடல்கள்
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் அனுராதா நான் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவில் பசங்களை பார்க்கும்போது கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். முருகா காப்பாத்து காப்பாத்து என்று வேண்டிக் கொள்வேன். ஏன்னா, அவங்க ஃபேஷன் ஓட வருவாங்க இருக்கிற வேலை எல்லாம் விட்டுடுவாங்க.

பாடகராக வேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது இல்லையே!? எல்லோரும் நம்ம பசங்க மாதிரி தானே இருக்கும், எல்லோருக்கும் வாய்ப்பு வரணும்னு ஆசைப்படுவேன். அப்ப என் கணவர் கூட சொல்லுவார் எப்படி நீ நெனச்சி வருத்தப்பட்டா முடியாது என்று சொல்லுவாரு, நான் அதனாலே எல்லார்கிட்டயும் தனியா சொல்லுவேன். இதை கத்துக்கோ, அதை கத்துக்கோ என்று தனித்தன்மை வேண்டும் என்று சொல்லுவேன்.

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருந்தால் தான் இந்த உலகத்தில் சிறப்பாக இருக்க முடியும். ஏதாவது ஒரு விதத்தில் தனித்தன்மை வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். அப்போ நான் என்ன அறியாமலே நினைப்பேன், நல்லவேளை நம்ம அப்பவே பிறந்துட்டோம். இந்த நேரத்தில் நாம இருந்திருந்தால் ரொம்பவே சர்வே பண்ணுவதற்கு கஷ்டம் தான்.

Singer Anuradha Sriram protested not to be born in this generation

அந்த காலத்துல எங்களுக்கு ஒரு ஸ்கோப் இருந்துச்சு. ஒரு வாய்ப்பு கிடைச்சா அடுத்து அடுத்து எங்க திறமையை நிரூபிக்க வாய்ப்பு இருந்துச்சு, ஆனால் இப்போ அப்படி இல்லை. அதுக்கு ரொம்பவே கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. தேவா கூட ஒரு முறை சொல்லி இருக்கிறார். எனக்கு பட்டம் கொடுக்குறதுக்கு பதிலா வாய்ப்பு கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

அந்த மாதிரி தான் நமக்கு பட்டம் எதுவும் தேவை இல்லை. வாய்ப்பு வேணும் அது இப்ப ரொம்பவே கஷ்டம். அதை நானும் நிறைய முறை பீல் பண்ணி இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+