சிறுவயதில் இதுதான் தன்னுடைய நிலைமை.. பழசை மறக்காத ராஜலட்சுமி வெளியிட்ட உருக்கமான வீடியோ
பாடகி ராஜலட்சுமி சிறுவயதில் தான் வாழ்ந்த சின்ன வீட்டை முதல் முறையாக வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாடகி ராஜலட்சுமி தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
பாடகி ராஜலட்சுமி தற்போது திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் வாழ்ந்த பழைய நினைவுகளை பற்றி மனம் திறந்து ராஜலட்சுமி பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

நாட்டுப்புற பாடல்கள்
விஜய் டிவியில் புதுப்புது நிகழ்ச்சிகள் அறிமுகமானாலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள் அந்த மாதிரிதான் பாட்டு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் .அதில் நாட்டுப்புற தம்பதிகளாக வந்து அனைத்து மக்களையும் வசியப்படுத்தி ராஜலட்சுமி செந்தில் ஜோடியை யாராலும் மறக்க முடியாது .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்று விட்டனர். இதில் கலந்து கொண்ட பிறகு ஆளே மாறி இருக்கிறார். காரணம் திரைப்படங்களிலும் கதாநாயகியாக ராஜலட்சுமி மாறியிருக்கிறார். இந்த நிலையில் கிராமத்தில் தான் குழந்தையாக இருக்கும் போது ஒரு சிறு வீட்டில் மொத்த குடும்பமும் வாழ்ந்து வந்த நிலைமையை ரசிகர்களோடு ராஜலட்சுமி பகிர்ந்து இருக்கிறார்.

பிரபலம் கொடுத்த நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போது பக்கா கிராமத்து பெண்ணாக கலக்கிக் கொண்டிருந்தார். கிராமத்து பெண்கள் கூட தற்போதெல்லாம் புடவைகட்டுவதற்கு யோசிக்கும் நிலையில் இவர் கிராமத்தில் இருந்து வந்தாலும் இவ்வளவு பெரிய மேடையிலும் கண்டாங்கி சேலை கட்டி கலர் கலராக பூக்கள் வைத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தார். பாட்டுப்பாடி மட்டுமல்லாமல் தன்னுடைய அழகாலும் செல்லமான சிரிப்பாலும் ரசிகர்களை வசப்படுத்திய ஜோடி செந்தில் ராஜலட்சுமி ஜோடி தான் என்று கூறும் அளவிற்கு இருவரும் செமயாக கலக்கி கொண்டிருந்தனர்.

புது வாய்ப்புகள்
விஜய் டிவியில் புது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிகழ்ச்யாளர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது .அந்த மாதிரிதான் இவருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது .பாடகராக அறிமுகமான இவர் தற்போது மாடலாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதுவும் புடவை விளம்பரம் முதல் நகைக்கடை விளம்பரங்கள் வரைக்கும் இவருடைய போட்டோக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு தற்போது இவர் ஒரு மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் இவர்கள் என்ட்ரி கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பெரிய மேடைகள் மட்டுமல்லாமல் சிறு சிறு கோவில் விழாக்கள் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவரது பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது .அதில் இவரே வந்தும் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி விளம்பர மாடலாக எடுக்கும் போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார் .அவரது போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

பசுமையான நினைவுகள்
இந்த நிலையில் சமீபத்தில் தான் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஜோடி சொந்தமாக வீடு ஒன்று கட்டி குடி புகுந்தனர். இந்த நிலையில் தங்களுடைய ஆரம்பகால வீட்டிற்கு சென்ற ராஜலட்சுமி அங்கே அருகில் இருக்கும் நபர்களோடு தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமையல் அறையும் பக்கத்தில் இருக்கும் ஒரே அறையில் தன்னுடைய சகோதரி மற்றும் அம்மா அப்பாவோடு வாழ்ந்த நினைவுகளை பற்றி உருக்கமாக ராஜலட்சுமி பேசியிருக்கிறார். அதுவும் குறிப்பாக எங்களுக்கு அந்த காலங்களில் பல மாதங்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஆகியிருக்கிறது. அந்த மாதிரி இப்பவும் அதே நிலைமையில் இருக்கும் கலைஞர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய பசுமையான நினைவுகளை அந்த வீடியோவில் ராஜலட்சுமி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications