பாடகி சுஜாதாவின் பேத்தியை பார்த்தீங்களா..? அம்மா, பாட்டிக்கு போட்டி.. பாடகி சித்ராவுக்கு ஸ்பெஷல்
சென்னை: இன்று பாடகி சித்ராவின் பிறந்தநாள். அதற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் பாடகி சுஜாதா அவருடைய மகள் ஸ்வேதா மோகனுடன் சேர்ந்து சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.
அப்போது அம்மா மற்றும் பாட்டியை தொடர்ந்து ஸ்வேதா மோகனின் மகள் பாடகி சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று சொல்வார்கள். அது சில நேரங்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது. பல வீடுகளில் தாய் தந்தை எந்த மாதிரி இருக்கார்களோ அதுபோலவே குழந்தைகளும் வளர்ந்து வருகிறார்கள். அதற்கு சான்றாகத்தான் பாடகி சுஜாதா மோகன் வீட்டில் நடந்திருக்கிறது. பாடகி சுஜாதா மோகன் போலவே அவருடைய மகள் ஸ்வேதா மோகனும் பாடல் திறமையால் தற்போது ரெக்கை கட்டி பறந்து வருகிறார்.
ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் எனக்கு பாடல் என்றால் செட்டாகாது என்று ஒதுங்கி இருந்த ஸ்வேதா மோகன் ஒரு கட்டத்தில் ஏ ஆர் ரகுமானால் பாடி, பிரபல பாடகியாக மாறி இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு நடுவராகவும் ஸ்வேதா மோகன் மாறி இருக்கிறார்.
சோகமோ சந்தோஷமோ மனம் தேடுவது இசையை தான். அந்த இசையை இனிமையாகவும் பலரும் ரசிக்கும் வகையில் கொடுத்த பல பிரபலங்களில் பாடகி சுஜாதா மோகன் ஒருவர். அவருடைய மகள் தான் ஸ்வேதா மோகன். ஸ்வேதா மோகனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மகளை ஆரம்ப காலகட்டத்தில் சரியாக வளர்க்க முடியவில்லை என்று நினைத்திருந்த சுஜாதாவிற்கு அவருடைய பேத்தியை வளர்க்கும் பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
சுஜாதா மோகனின் குழந்தை, ஸ்வேதா மோகன் சிறு குழந்தையாக இருக்கும்போது சுஜாதா பிஸியாக பாடி கொண்டிருப்பதால் அதிகமான நேரம் தன்னுடைய குழந்தையோடு செலவிட்டதே கிடையாதாம். ஆனால் இப்போது தன்னுடைய பேத்தியை முழுமையாக கவனித்துக் கொள்வது நான் தான் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று பாடகி சித்ராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது.
பாடகி சித்ராவிற்கு சுஜாதா மோகன் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அப்போது சுஜாதா மோகனின் பேத்தி சித்ராவிற்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுஜாதா நீ என்னை விட ஒரு மாசம் இளையவள் ஆகிட்ட. உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
அதோடு சுஜாதாவின் கணவரும் பாடகி சித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். மேலும் எப்போதும் நீ சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதமும் செய்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து, "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" என்ற பாட்டுக்கு சுஜாதாவின் கணவர் மற்றும் மகள் ஸ்வேதா மோகன் உடன் சேர்ந்து சுஜாதா பாடி கொண்டிருக்க அப்போது அவருடைய பேத்தியும் சேர்ந்து பாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications