“அந்த” இசையமைப்பாளர் பாலியல் தொல்லை செய்து வீடியோ எடுத்து மிரட்டினார்.. பிக் பாஸ் மாயாவின் அக்கா, பாடகி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா மற்றும் இசைத்துறையை உலுக்கும் வகையில், பாடகியும் தொழிலதிபருமான ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக, ஒரு பிரபல இசையமைப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் வெளிப்படையாக பகிர்ந்திருப்பது, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swagatha Krishnan bigg boss

பாடகி ஸ்வாகதாவின் வேதனை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா கிருஷ்ணனின் அக்காவான ஸ்வாகதா, தனது வாழ்க்கையில் நடந்த மிகக் கடுமையான அனுபவத்தை சமீபத்தில் சிவசங்கரி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் ஒரு பிரபல இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்த காலத்தில் தான் அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை சம்பவம் நடந்ததாம். அந்த அனுபவத்துக்குப் பிறகு தான் விரும்பிய இசைத்துறையை முழுமையாக விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

"ஒரு கொடூரமான பாலியல் தொல்லை கொடுப்பவர்களால் பாதிக்கப்பட்டவள் நான். அந்த மோசமான அனுபவம் என்னை அந்த இடத்திலிருந்து ஓடவைத்தது. இன்று ரிஷிகேஷில் அமைதியாக வாழ்கிறேன் என்றாலும், அந்த நினைவுகள் இன்னும் மறையவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசும்போது ஒரு விதமான பதட்டத்தோடு தான் பேச தொடங்குகிறார். அதில், சென்னையில் வசித்து வரும் ஒரு பிரபல இசை அமைப்பாளரின் ஸ்டுடியோவில் தான் நான் வேலை செய்தேன். அவர்தான் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அந்த இசையமைப்பாளர் ஒரு பெண்ணை மட்டும் அல்ல பல பெண்களை நாசமாக்கி இருக்கிறார். ஆனால் அந்த இசையமைப்பாளரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவரின் பெயரை சொல்ல வேண்டிய நேரம் வரும்போது நான் சட்டப்படி சொல்லுவேன்.

Swagatha Krishnan bigg boss

எனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது என நினைப்பேன். அந்த அளவிற்கு நான் மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டேன். அந்த ஆணிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் பலர் எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் பெண்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. நான் ஒன்பது வருஷமாக ஒருத்தரை காதலித்து பிரேக் அப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.

எனக்கு காலேஜ் படிக்கும் போது இருந்த காதல் முறிந்து போனதால் அதை ஏற்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். வீட்டில் இருந்தால் கஷ்டமாக இருக்கும் என்றுதான் நான் வேலைக்கு போனேன். அந்த சமயத்தை தனக்கு சாதகமாக அந்த இசை அமைப்பாளர் பயன்படுத்திக் கொண்டார். என்னை அவரின் குடும்பத்தார் நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதை பார்த்து எனக்கு நம்பிக்கை வந்தது.

அதற்கு பிறகு எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் அந்த இசையமைப்பாளர் ஐபோன், கார் வாங்க என்கிட்ட கடன் வாங்கினாரு. நான் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனால் திடீர்னு ஒரு நாள் அந்த கொடூரம் நடந்தது... அவர் வலுக்கட்டாயப்படுத்தி என்னிடம் தவறாக நடந்தார். அதை எல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து வைத்து என்னையும் மிரட்டினார். இதை யாரிடமாவது சொன்னால் கேமராவில் பதிவு ஆகி இருப்பதை எல்லோருக்கும் காட்டி விடுவேன் என்று மிரட்டினார்.

நான் சின்ன பொண்ணு அவர் ரொம்ப ஸ்ட்ராங்கானவர், அது சவுண்டு ப்ரூப் ரூம் எவ்வளவு கத்தினாலும் யாருக்கும் கேட்காது. அங்கு சிசிடிவி கேமரா ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வேலை பார்ப்பவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக தான் ரகசியமான கேமராக்கள் இருந்தது. இந்த வீடியோவை வைத்து மிரட்டினால் நீங்கள் தான் ஜெயிலுக்கு போவீங்க என்று நான் அவரை மிரட்டினேன்.

Swagatha Krishnan bigg boss

உடனே அவர் ஸ்வாகதாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது, அவர் என்னுடைய ஆஃபீஸில் திருடினார் என்று பழி போட்டாங்க. அது மட்டுமல்லாமல் அந்த விஷயம் அவருடைய மனைவிக்கு தெரிந்ததும் அந்த இசையமைப்பாளரார் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவருடைய மனைவியிடம் அழுது நடித்து அவருடைய மனதையும் மாற்றிவிட்டார். என்னை மாதிரி பல பெண்களை சிசிடிவியில் பதிவு செய்து பார்த்திருக்கிறார்.

எப்ஸ்டீனுக்கு எல்லாம் ராஜா தான் சென்னையில் இருக்கும் அந்த இசையமைப்பாளர். ஸ்டுடியோக்கு பாட வரும் குழந்தைகளை கூட வீடியோ எடுத்து இருக்கிறார். ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், இமான், அனிருத் எல்லாம் உண்மையான ப்ரொபஷனல் ஆனால் அவர் ரொம்ப மோசமானவர். என் தங்கை மாயா தான் என்னை காப்பாற்றினாள் என்று பாடகி ஸ்வாகதா பேசி இருக்கிறார்.

இந்த மோசமான சம்பவம் நடந்ததால் தான் ஆசைப்பட்ட இசைத் துறையை விட்டு வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் இப்போ கடந்த ஆறு வருடங்களாக ரிஷிகேசன் தொழிலதிபராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பாடகி ஸ்வேதா 250க்கு மேற்பட்ட ஹிட்டு பாடல்களை பாடி இருக்கிறாரா மண். இப்போது இவர் பிரபல இசையமைப்பாளர் பற்றி பேசியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது யார் அந்த இசையமைப்பாளர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு, சாதாரண சர்ச்சையை தாண்டி, ஒரு பெரிய சமூக விவாதமாக மாறியுள்ளது. உண்மை முழுமையாக வெளிவர வேண்டியது அவசியம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+