அடடே! மீனா சொன்ன செம வார்த்தை.. இதை எழுதி வச்சுக்கோங்க முத்து.. அப்போ இனி மத்த சீரியலுக்கு ஆப்பு தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 11ஆம் தேதி முதல் பதினாறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் சண்டை போட்டுக் கொண்டிருந்த முத்துவும் மீனாவும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பதை பார்த்து பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இனி விஜயாவால் மீனா மற்றும் முத்து குடும்பத்திற்குள் என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனாலும் இப்போது முத்து தனக்காக செய்த விசயங்களுக்கு மீனா கொடுத்த பதில் தான் பலரையும் கவர்ந்திருக்கிறது.

https tamil filmibeat com news atlee-and-priya-atlee-couple-photos-trending-on-social-media-128977 html

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் சத்யாவுக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சத்யாவை அடித்து விட்டதால் முத்து மீது மீனா கோபத்தில் இருந்தார். ஆனால் இப்போது முத்து தன்னுடைய நண்பர் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர் நடத்தி வைக்கும் திருமணத்திற்காக மாலை கட்டும் ஆர்டர் வந்திருக்கிறது. இதனால் முத்துவும் மீனாவும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றனர்.

அதோடு இரண்டு நாளில் ஐயாயிரம் பேருக்கு மாலை கட்டி கொண்டு இருக்கும் மீனாவிற்காக முத்து டீ போட்டு கொடுத்து பல பெண்களின் மனதை கவர்ந்திருக்கிறார். அதாவது இப்போது வெளியான ப்ரோமோவில் மீனா தன்னோடு தோழிகளோடு பூ கட்டி கொண்டு இருப்பதை பார்த்து மனோஜ் விஜயாவிடம் எப்படி இவங்க நைட்டுக்குள்ள பூக்கட்டி முடிச்சிடுவாங்களா? என்று கேட்க அதற்கு மீனா நாங்க கண்டிப்பா முடிச்சுருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தெருவில் மணி அடிக்கும் சத்தம் கேட்பதால், ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது என்று ஸ்ருதியும் ரவியும் வெளியே போய் பார்க்க அங்கு குல்பி ஐஸ் வருகிறது. அதை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் குல்பி ஐஸ் கொடுக்கின்றனர். அப்போது மீனா மட்டும் மாலை கட்டி கொண்டிருப்பதால் ஐஸ் சாப்பிடாமல் இருக்கிறார். அதற்கு முத்து பக்கத்தில் வந்து ஊட்டி விடுகிறார். அதை பார்த்து ஸ்ருதியும் ரவியும் சிரிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது மீனா மட்டும் பூக்கட்டி கொண்டே இருக்க அப்போது எழுந்த முத்து இன்னும் வேலை முடியலையா? என்று கேட்க அதற்கு மீனா இல்லங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்கிறார். உடனே முத்து போய் டீ போட்டுக் கொண்டு வந்து மீனாவுக்கு கொடுக்கிறார். அதை குடித்து பார்த்த மீனா அருமையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

அப்போதுதான் முத்துவுக்கு நான் டீயில் சீனி போடவில்லையே என்று ஞாபகம் வருகிறது. அதனால் முத்து நான் இதுல சர்க்கரையே போடலையே என்று சொல்ல அதற்கு இதில் சர்க்கரை இல்லனாலும் பரவால்ல நீங்க போடுற அக்கறை இருக்கு என்று பஞ்ச் வசனம் பேசும் மீனாவிற்கு இந்த ப்ரோமோ வெளியானதில் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது. அதோடு பாராட்டுகளும் குவிகிறது.

கணவன் மனைவி புரிதல் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் இந்த எபிசோடு பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முத்து சொன்ன மாதிரியே ஆர்டரை முடித்து கொடுத்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. காரணம் விஜயாவிற்கு மீனா வேலை பார்ப்பது கொஞ்சம் கூட பிடிக்காமல் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் விஜயாவால் இந்த ஆர்டர் கேன்சல் ஆவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? என்றும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் அப்படி கேன்சல் ஆன மாதிரி ஏதாவது ஆச்சுனனா மீனாவை இதை சொல்லியே விஜயா வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு முயற்சி செய்வார். அதே நேரத்தில் திருமணம் செய்வதற்கு ஒரு ஜோடி கம்மியாக இருக்கிறது என்று ஏற்கனவே முத்துவின் நண்பர் அரசியல்வாதியிடம் சொல்லி இருந்தார்.

அதனால் அங்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று யோசிக்க தோன்றுகிறது. அப்படியே விஜயாவால் எதுவும் பிரச்சனை இல்லை என்றால் இந்த ஆர்டர் முடிந்ததும் வரும் பணத்தில் முத்துகாக மீனா என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார்? என்றும் எதிர்பார்க்க வைக்கிறது. இதனால் அடுத்த வாரத்தில் வரும் எபிசோடு வேற லெவலில் மக்கள் மத்தியில் என்றும் எதிர்பார்க்க வைக்கிறது. இதனால் அடுத்த வாரத்தில் வரும் எபிசோடு வேற லெவலில் மக்கள் மத்தியில் எதிர்பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+