அம்மா பேச்சைக் கேட்டு ஸ்ருதி சொன்ன வார்த்தை.. அண்ணாமலையின் கண்டிஷன்.. முத்து கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 22 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் முத்து கலந்து கொள்ள கூடாது என்று கண்டிஷன் போட அதற்கு அண்ணாமலை எதிர்பாராத வார்த்தையை சொல்கிறார்.
அதே நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை போன்றோர் ஸ்ருதி பங்க்ஷனில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொன்ன வார்த்தையை கேட்டு ரவி எதிர்பாராத முடிவை எடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவுக்கு பிரியாணி சாப்பிட்டது இன்னும் சரி ஆகாததால் பார்வதி அவருடைய முதுகில் போட்டு குத்துகிறார். பிறகு ரோகிணியையும் மீனாவையும் கூப்பிட அவர்கள் வரவில்லை என்று சொன்னதும் ஸ்ருதி நான் போய் குத்துகிறேன் என்று கையை முறுக்கி குத்து சண்டைக்கு போவது போல தயாராக அதை பார்த்து பதறிப்போன ரவி ஸ்ருதியை பிடித்து வைத்துக் கொள்கிறார்.
பிறகு முத்து பாட்டி சொன்ன மாதிரி உலகை எடுத்து குத்துனா சரியாகி விடும் என்று கிளம்ப அதை பார்த்து அதிர்ச்சியான விஜயாவிற்கு ஏப்பம் வந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து விஜயா வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மா வந்து தாலி பிரித்து கொடுப்பதற்கு ஹோட்டல் எல்லாம் பார்த்தாச்சு எல்லாம் புக் பண்ணியாச்சு ஆனால் முத்து அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டால் பிரச்சனை வந்துவிடும் அதனால் அவர் வராமல் இருப்பது நல்லது என்று சொல்ல அதற்கு கண்டிப்பாக அந்த பங்க்ஷனில் முத்து கலந்துக்க மாட்டான் என்று வாக்கு கொடுக்கிறார்.

பிறகு அண்ணாமலை வாக்கிங் போய்விட்டு வர அவரை விஜயா நலம் விசாரித்து உபசரிக்கிறார். விஜயாவின் நடவடிக்கையை பார்த்த அண்ணாமலை என்ன விஷயம் என்று நேரடியாக கேட்க அதற்கு ஸ்ருதி அம்மா வந்தாங்க அவங்க முத்து பங்ஷனுக்கு வந்தா அந்த பங்க்ஷன் நல்லபடியா நடக்காது என்று பயப்படுறாங்க. அதனால அவன் பங்க்ஷன்க்கு வரவேண்டாம் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை சரி அவன் பங்ஷனுக்கு வரமாட்டான் என்று சொல்ல, அப்போது மீனா என்ன மாமா நீங்களும் இப்படி சொல்றீங்க என்று கேட்க, அதற்கு விஜயா மீனாவை சத்தம் போடுகிறார்.

ஆனால் அண்ணாமலை முத்து கண்டிப்பா இந்த பங்க்ஷனில் கலந்துக்க மாட்டான். அவன் கலந்துக்காத பங்க்ஷனில் நானும் கலந்துக்க மாட்டேன் என்று சொல்ல அதை கேட்ட மீனா, மாமாவும் என் வீட்டுக்காரரும் கலந்துக்காத ஃபங்ஷனில் நானும் கலந்துக்க மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் வீட்டிற்கு வர அவர்களிடம் நடந்த விஷயத்தை அண்ணாமலை சொல்ல அதற்கு ஸ்ருதியும் ரவியும் உங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணுனதே என் மனச உறுத்திட்டு இருக்கு.

இதுல நீங்க எல்லாரும் இல்லாம இந்த தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷனும் வேண்டாம். முத்து வரலைன்னா இந்த ஃபங்ஷனை நான் பண்ண மாட்டேன் என்று ரவி சொல்ல வேறு வழியில்லாமல் விஜயா ஸ்ருதியின் அம்மாவுக்கு போன் போட்டு வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டு ஸ்ருதியின் அம்மா சந்தோஷப்படுகிறார்.
அப்போது ஸ்ருதி அப்பா நீதானே முத்து இந்த ஃபங்ஷனில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்ன இப்ப அவன் வரதை நெனச்சு சந்தோஷப்படுறியா? என்று கேட்க அதற்கு ஸ்ருதி அம்மா இந்த பங்க்ஷனில் முத்து கண்டிப்பா கலந்து கொள்ளணும் அப்போ அவனை நம்ம அசிங்கப்படுத்தணும் முத்து மேல ரவி கோவப்படணும் இதை சாதகமாக வைத்து முத்து இருக்கிற வீட்டில என் பொண்ணால இருக்க முடியாது என்று சொல்லி ரவியையும் ஸ்ருதியையும் நம்ம வீட்டிலேயே தங்க வைக்கணும் என்று தன்னுடைய பிளானை சொல்ல அதைக் கேட்டு ஸ்ருதியின் அப்பா சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications