சிறகடிக்க ஆசை: மீனாவிடம் வசமாக சிக்கும் மலேசியா மாமா.. ரோகிணி நிலைமை இனி அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரரின் கறிக்கடையில் மீனா கறி வாங்க வந்திருக்கிறார். இதனால் மலேசியா மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் நபர் மாட்ட இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம் இரண்டு நாட்களாக இந்த சீரியலில் பெரிய திருப்பம் எதுவும் இல்லை என்றாலும் கலகலப்பான காட்சிகள் இருந்தது. நேற்று கூட மனோஜ் கடையில் முட்டை இருந்ததை வைத்து மனோஜ் பயந்து போயிருக்கிறார்.

அதோடு வழக்கம் போல அதற்கு ஜோதிடரிடம் பரிகாரம் கேட்க போக அவர் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் ஒரு நாள் முழுக்க விரதம் இருக்க வேண்டும். குடும்ப கோவிலில் தீச்சட்டி எடுக்க வேண்டும், விரதம் முடியும் போது மனோஜ் வேப்பிலை உடைதான் அணிந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் கண்டிஷன் போட்டு இருக்கிறார். இதை மனோஜ் மற்றும் விஜயா செய்யும் போது பெரிய காமெடி நடக்கும்.
இன்றைய எபிசோடில் மனோஜ் சொன்னதை நம்பாமல் நான் பரிகாரம் எல்லாம் செய்ய மாட்டேன் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று விஜயா சொல்லி இருந்தார் அந்த நேரத்தில் அவருடைய தலையில் பேன் விழபோனது, அப்போது தப்பிவிட்டார். அதற்குப் பிறகு மனோஜ் செய்த தவறால் விஜயாவிற்கு கரண்ட் பிடித்து விட விஜயாவை காப்பாற்றுவதற்காக பார்வதி வந்து அதில் சிக்கிக் கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து ரோகிணி, மனோஜ், ரவி என்று எல்லோரும் கரண்ட் பிடித்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மீனா பார்த்திருக்கும் நிலையில் இனிமேல் மீனா தான் இவர்களை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனாவும் அவருடைய தோழியும் ஒரு கறிக்கடைக்கு கறி வாங்குவதற்கு போகிறார்கள்.
அங்கு ரோகிணியின் மலேசியா மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா போன் பேசிக்கொண்டு அந்த கடையில் இருப்பதை மலேசியா மாமா பார்த்து விடுகிறார். அய்யோ இது முத்து பொண்டாட்டியாச்சே இப்போ மாட்டுனா அவ்வளவுதான் என்று தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் நாளைக்கே அவர் மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை மலேசியா மாமா மாட்டினால் ரோகிணி பற்றிய உண்மை தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரோகிணி வழக்கம் போல இதை சமாளிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே நேற்று முன்தினம் எபிசோட்டில் முத்துவின் போனை வித்தியா மீனாவின் பக்கத்தில் வைத்த போது கூட மீனா அதை கண்டுகொள்ளவில்லை. அதுபோல மலேசியா மாமாவை பார்த்தாலும் வீட்டில் சென்று ரோகிணியின் மாமாவை போல ஒரு ஆளை பார்த்தேன் என்று சொதப்ப போகிறாரா? என்று தெரியவில்லை.. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications