சிறகடிக்க ஆசை: மனோஜால் வீட்டை விட்டு போகும் ரோகிணி.. இனி நடக்கப்போவது இதுதானா? விஜயாக்கு இடிமேல் இடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை டிசம்பர் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜிடம் கோபித்துக் கொண்டு ரோகிணி வீட்டை விட்டு போகிறார். இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து நடக்க தொடங்கி இருக்கிறது. எப்படியாவது ரோகிணி வீட்டில் மாட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய மொத்த உண்மைகளும் வீட்டிற்கு தெரியாமல், சின்ன சின்ன விஷயங்கள் தெரிய தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே ரோகிணியும் மனோஜும் தாங்கள் பெரியதாக பேலஸ் வாங்க போகிறோம் என்று 30 லட்சம் ஏமாந்து போயிருக்கிறார்கள். இதுவே பெரிய அதிர்ச்சியான சம்பவம்தான்... என்னுடைய மகன் பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். என் மகனைப் போல இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று பெருமை பேசிக்கொண்டு இருந்த விஜயாவிற்க்கு மனோஜ் ஏமாந்து போன செய்தியே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் பணத்தை வாங்கி அதைத்தான் மனோஜ் ஷோரும் திறந்திருக்கிறார் என்ற உண்மையும் இப்போது மொத்த குடும்பத்திற்கும் முத்து மூலமாக தெரிய வந்திருக்கிறது. ஜீவாவை வைத்து முத்து ஆதாரத்தோடு நிரூபித்ததால் விஜயா மனோஜை அடிக்க போகிறார். அப்போது மனோஜ் இத்தனைக்கும் காரணம் ரோகிணி தான், ரோகிணி தான் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது என்று மொத்த பழியையும் ரோகிணி மீது தூக்கி போடுகிறார்.
அதனால் விஜயா கோபமாகி என்னிடமே ஏமாற்றி என் பணத்தை வைத்து ஷோரூம் திறந்து விட்டு உங்க அப்பா தந்தது என்று என்கிட்டயே சொன்னியா என்று ரோகிணியை அடிக்கிறார். அதற்கு ரோகிணி உங்க பையனை நீங்க படிக்க வச்சிருக்கீங்களே தவிர அவருக்கு மூளை கிடையாது. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.
நான் எத்தனையோ வேலைக்கு போக சொன்னேன். அவர் வேலைக்கு போகாம இருந்ததால்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று சொன்னதால் மேலும் கோபமான விஜயா ரோகிணியை மீண்டும் அடிக்கிறார். பிறகு அண்ணாமலை தடுத்து ரோகிணியை ரூமிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் விஜயா தன்னை அடிக்கும் போது மனோஜ் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைந்தார். தனக்காக மனோஜ் சப்போர்ட் பண்ணவில்லை என்பது ரோகினியை அதிகமாக பாதித்திருக்கிறது.
அதோடு இந்த பிரச்சனைக்கே தனக்காக மனோஜ் வரவில்லை என்றால் தன்னை பற்றிய முழு உண்மைகள் தெரிய வரும்போது தன்னை வேண்டாம் என்று மனோஜ் சொல்லிவிடுவார் என்று ரோகிணி இப்போது புதிய பிளான் போடுகிறார். அதாவது மனோஜ் ரோகிணியை சமாதானம் செய்வதற்காக போனபோது நீ உங்க அம்மா என்னை அடிக்கும் இப்போது எனக்காக எதுவுமே செய்யாமல் பார்த்துட்டு இருந்த எனக்காக இந்த வீட்டில் யாருமே இல்லாத போது நான் எந்த வீட்டில் யாருக்காக இருக்க வேண்டும் என்று வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.
தன்னைப் பற்றிய உண்மை தெரிய வருவதற்குள் மனோஜை தன் வசப்படுத்த வேண்டும் என்று ரோகிணி பிளான் போடுகிறார். அதே நேரத்தில் இனி ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி முத்துவிடம் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் மூலமாகத்தான் ரோகிணி பற்றிய உண்மைகள் அடுத்ததாக தெரியவரும்.
ஏற்கனவே விஜயாவிற்கு இடியென அதிர்ச்சி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது இதில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்தால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோகிணியின் மகன் கிரிஷை பார்த்தாலே விஜயாவிற்க்கு பிடிக்காது.
ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது என்றும் அவருக்கு ஏற்கனவே திருமண முடிந்து ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறார் என்ற உண்மைகள் தெரிய வரும்போது விஜயாவின் ரியாக்ஷன் என்ன என்பது பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அது இனி சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications