Siragadikka Aasai promo: ரோகிணி பற்றிய உண்மையை மறைக்கும் மீனா! கிரிஷை வைத்து முத்து கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்'சிறகடிக்க ஆசை' சீரியல்ல ரோகிணி ஆடுற ஆட்டத்துக்கு அளவே இல்லை! "இந்த வாரம் எப்படியாவது உண்மை வெளியாகும்!"னு ப்ரோமோ (promo) பார்த்து பல்லைக் கடிச்சுட்டு இருந்த ரசிகர்களுக்கு, சீரியல் டீம் மறுபடியும் ஒரு ஷாக் கொடுத்திருக்கு! இந்த கதையில எப்போ பார்த்தாலும் மீனா தான் மக்கு பெண் என நிரூபிக்கிறதுல சீரியல் இயக்குனர் ரொம்பவே குறியா இருக்காருன்னு தான் சொல்லணும்.

ரோகிணி பற்றிய உண்மை: ஒருவழியா, ரோகிணியோட உண்மையான பெயர் கல்யாணின்னும், அவள்தான் கிரிஷோட அம்மான்னும் கோவிலுக்குப் போன இடத்துல மீனாவுக்குத் தெரிஞ்சு போச்சு. உண்மை தெரிஞ்சதும், மீனா உடனே "நான் வீட்டுக்குப் போய்ச் சொல்லப் போறேன்!"னு வீராப்பாப் பேசுறா. இதைப் பார்த்த ரசிகர்கள், "இனியாவது இந்தப் பொண்ணு ஸ்மார்ட்டா இருக்கும்!"னு நம்பினாங்க.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் மிரட்டல் டிராமா

ஆனா, நம்ம ரோகிணி சும்மா இருப்பாளா? உடனே தற்கொலைச் செஞ்சுக்கப் போறேன்னு மிரட்டி இருக்கா! இதுல கொடுமை என்னன்னா, ரோகிணியோடப் பையன் கிரிஷ்ஷும், அம்மாவை காப்பாத்தணும்னுத் தெரிஞ்சுக்கிட்டு, "ப்ளீஸ் ஆன்ட்டி, எங்க அம்மாவைப் பத்தி வீட்டுல சொல்லிடாதீங்க!"ன்னு கெஞ்சி இருக்கான்! முதலில் வீர வசனம் பேசினாலும் ஒரு செகண்ட்ல மீனாவின் மனசு மாறிப் போச்சு! வழக்கம் போல, உண்மையைச் சொல்ல போறதா பேசுன மீனா, தியாகியா மாறிக் குடும்பத்துக்காக உண்மையை மறைச்சுட்டாங்க!

இந்த உண்மை டிராமா எல்லாம் நடந்து முடிஞ்ச சமயத்துல, அடுத்த நாளுக்கான ப்ரோமோ (PROMO}ல பெரிய ட்விஸ்ட் காத்திருக்கு. ரோகிணியோட அம்மா லட்சுமியும், மகனும், அவங்க கூட பையனைக் கவனிச்சுக்கிற ஒரு பெண்ணும் வீட்டுக்கு வராங்க. அப்போ ரோகிணியோட அம்மா லட்சுமி, "இன்னைக்கு மீனாவுக்குத் தெரிஞ்ச மாதிரி, இதே உண்மை அந்த வீட்ல இருக்கைக்கு தெரிஞ்சா நிலைமை என்ன ஆகும்? நாம எத்தனை நாள் தான் மறைக்கிறது?"ன்னுப் பேசிக்கிட்டே வந்திருக்காங்க. அப்போ, கரெக்டா முத்து இவர்களைப் பார்த்துட்டாரு!

முத்து, "நீங்க என்கிட்ட மறைச்சுட்டீங்களே?"ன்னு கேட்க, ரோகிணியின் அம்மா ஆகி இருக்காங்க. ஆனா, முத்து என்ன சொன்னாருன்னுப் பார்த்தா... "நீங்க தீபாவளிக்கு ஊருக்கு வந்திருக்கீங்க என்ற விஷயத்தைச் சொல்லலையே!"ன்னு ஒரு ட்விஸ்ட் கொடுத்து இருக்காரு! முத்து ரோகிணியின் அம்மாவிடம் எத்தனை முறை அசிங்கப்பட்டாலும் அதை பத்தியெல்லாம் கவலைப்படாம, சிரிச்சுக்கிட்டே எல்லாரையும் வீட்டுக்குள்ளக் கூட்டிட்டுப் போயி, "அப்பா, வீட்டுக்கு மூணுப் பேர் வந்திருக்காங்க! யாருன்னுப் பாருங்க!"ன்னு சொல்லி இருக்காரு.

இனி என்ன நடக்கும்

இப்போ ரோகிணியும், கிரிஷும், லட்சுமியும் வீட்டுக்குள்ளேயே வந்துட்டாங்க! அண்ணாமலைஸஅவங்களை வரவேற்க, ரோகிணியும் மீனாவும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுக்கிறாங்க. வழக்கம் போல மீனா தியாகியா இருந்தாலும், இப்போ முத்து "நீங்க தீபாவளிக்கு வந்த விஷயத்தைச் சொல்லலையே"ன்னு ஒருப் பிரஷரைக் கொடுத்திருக்காரு! உண்மையை அறியாத முத்து, ரோகிணிக்குத் தெரியாமலேயே பிரச்சனையை வீட்டுக்குள்ளக் கூட்டிட்டு வந்துட்டாரு! இந்த கல்யாணிக் கதை எப்போதான் புல் வால்யூமில் வெடிக்கப் போகுதுன்னுப் பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+