சிறகடிக்க ஆசை: மீனாதான் பெஸ்ட், ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா! அதிரடி சம்பவம் வந்தாச்சுங்க!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இப்போ முழுக்க முழுக்க சொத்து, பணம், பந்தம்னுதான் டிராமா ஓடிட்டு இருக்கு! பிள்ளைகள் சொந்த முயற்சியில் முன்னேறுவதைப் பார்க்காமல், எப்படியாவது சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் எனத் துடிக்கும் விஜயா, இந்த முறை தன் மகன் ரவியை பிடித்துப் பெரும் பிரைன் வாஷ் செய்திருக்காங்க!

விஜயாவின் சொத்து பாடம்
ஸ்ருதியின் அப்பா - அம்மா விஜயாவைச் சந்தித்துப் பேசியதில் இருந்தே, விஜயாவுக்கு ஒரு புதிய 'ஐடியா' உதித்துவிட்டது! வீட்டுக்கு வந்த விஜயா, ரவியை மட்டும் தனியா அமர வச்சுப் பேசினார். ஸ்ருதி அவங்க அப்பாகிட்ட காசு வாங்கி ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்கா. நீ அவ கூடச் சேர்ந்து வேலை பார்க்கணும்னு விஜயா கட்டளையிட்டார்.
ஆனால், ரவி நேர்மையான பையன்! "ஸ்ருதி அவங்க அப்பாகிட்ட காசு வாங்கி ஆரம்பிச்சிருக்கா. அதனால, என்னால அதுல வேலை செய்ய முடியாது"ன்னு சொல்லி மறுத்துட்டார்.
இதைக் கேட்டு கடுப்பான விஜயா, "ஏண்டா... உங்க அப்பா மாதிரி நீயும் பிழைக்கத் தெரியாதவனா இருக்க?"ன்னு கேட்டு, ரவியைப் பிரைன் வாஷ் செய்ய ஆரம்பித்தார்!
தேடி வரும் மகாலட்சுமி
"ஸ்ருதி அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. அவங்க அப்பா சம்பாதிச்சது எல்லாம் அவளுக்குத்தான் வரும். அவளோட சொத்துல உனக்கும் உரிமை இருக்கு!" என்று விஜயா ஆசைக் காட்டினார்.அதற்கு ரவி "நான் நம்ம அப்பாகிட்ட இருந்தே காசு வாங்கக் கூடாதுனு நினைப்பவன்" என்று ரவி சொல்ல, விஜயா, "அதுதான் உன்கிட்ட இருக்கப் பிரச்சனையே!" என்று சொல்லி, "நான் சொல்றதைக் கேளு; ஸ்ருதியோட ஓட்டலுக்கே நீ போயிடு. உன்னுடைய திறமையால நீ இன்னும் நிறைய ஓட்டல் ஆரம்பிக்கலாம்" என்று ஆசை வார்த்தை அள்ளி வீசினார்.
ஆனாலும், நேர்மையான ரவி அதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. "எனக்கு அந்த ஐடியாவெல்லாம் இல்லை! அப்பா எனக்குக் கொடுத்த படிப்பு இருக்கு. அதுபோதும்; என்னுடைய சொந்த முயற்சியில் முன்னேறிக் கொள்கிறேன்" என்று கறாராகச் சொல்லிவிட்டார்!
அண்ணாமலையின் அதிரடி என்ட்ரி
இதற்குப் பிறகும் விஜயா விடவில்லை! "உங்க அப்பா மாதிரியோ, முத்து மாதிரியோ உருப்படாத விஷயமா யோசிக்காம, கொஞ்சமாவது மனோஜ் மாதிரி யோசிடா!" என்று சலித்துக் கொண்டார். "எனக்கு அந்தக் காலத்துல ரயில் இன்ஜின் டிரைவரைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. என் வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. ஆனால், உனக்கு அப்படி இல்லை. தேடி வர்ற மகாலட்சுமியை வேண்டாம்னு சொல்லாத" என்று விஜயா பேசிக்கொண்டிருக்கும்போதுதான், அண்ணாமலை அதிரடியாக என்ட்ரி கொடுத்தார்!
அண்ணாமலை மனைவி விஜயாவைப் பார்த்துக் கடுமையாகக் கடிந்துகொண்டார்:
"என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ சோத்துக்கு வழியில்லாம ரோட்டுலயா நின்னுட்டு இருந்த? பசங்க நல்லா வரணும்னு நினைக்கிறது தப்பு இல்ல. அதற்காக அவனுக்குப் பிடிக்காத விஷயத்தை பண்ணச் சொல்லாத!" என்று விஜயாவுக்குப் புத்திமதி சொன்னார்!
ரோகிணிக்கு வந்த புதிய சிக்கல்
அண்ணாமலையின் அட்வைஸ் முடிந்த பிறகு, மீனாவைப் பற்றிப் பேசிய விஜயா, அவர் ஆன்லைனில் பூ விற்கப் போவதைக் கேட்டுப் பாராட்டினார். "நம்ம அம்மாவ இப்படிப் பேசுறாங்களே"ன்னு மற்ற அனைவரும் ஷாக் ஆகப் பார்த்தனர்.
ஆனால், அதே மூடைத் தக்கவைத்துக் கொண்ட விஜயா, அங்கிருந்த ரோகிணியை தரக்குறைவாகப் பேச ஆரம்பித்தார்!. "நான் யாரெல்லாம் பெருசா வருவாங்கனு நினைச்சேனோ, அதெல்லாம் உதவாக்கறையா வந்திருக்கு!" என்று சொல்லி, ரோகிணியைக் குறிவைத்து, "மலேசியா பணக்காரி என்று பச்சையா பொய் சொன்னா. அப்புறம் நான் சொந்தமா பணக்காரி ஆவேன்னு பில்டப் பண்ணினா. ஒன்னத்தையும் காணோம்! மனோஜ்... உன் பொண்டாட்டி என்னதான் பண்ணப் போறான்னு ஒன்னுமே புரியல" என்று விஜயா அனலாய்க் கொட்டினார்!
விஜயாவின் மனோஜின் மனைவி ரோகிணி மீதான திடீர் அட்டாக், இனிவரும் எபிசோடுகளில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், ரோகிணி இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலாகக் காத்திருக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications