சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய இரண்டு உண்மையை உடைத்த முத்து! விஜயா கேட்ட கேள்வி! மீனா பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், மனோஜ் செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தும் இன்று முத்துவால் குடும்பத்தின் முன் அம்பலமானது. ஒரு பக்கம், ராணி - ராஜாவை நியாயம் கேட்க வரவழைத்த முத்து, அவர்களைக் கொண்டு மனோஜின் சதியை உடைக்கிறார். மறுபக்கம், பணத் திருட்டில் ரோகிணிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகம் கிளம்பி உள்ளது.

Siragadikka aasai serial vijay tv

முத்துவின் அட்வைஸ்

இன்றைய எபிசோடில், வீட்டில் அனைவரும் இருக்கும்போது, முத்து, ராணியைப் பார்த்து "இதுதான் உன்னோட மாமியார். போய் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ" என்று அதிரடியாகச் சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ரோகிணி கோபமாக, "என்ன முத்து உளறிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்க, முத்து, "உன் புருஷன் பண்ண தப்புதான் திருத்திக்கிட்டு இருக்கேன்" என்று பதிலளிக்கிறார்.

முத்துவின் பேச்சைக் கேட்டு அனைவரும் குழம்ப, முத்து, மீனாவிடம் "நீ போயிட்டு பூஜை ரூமில் இருந்து மஞ்சள் கிழங்கு வெச்சு தாலி ரெடி பண்ணி எடுத்துட்டு வா" என்று சொல்ல, "என்னங்க நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று மீனா கேட்கிறார். "சொல்றத செய்யணும்" என்று முத்து கறாராகச் சொல்கிறார்.

பிறகு முத்து ராணியிடம், "முதல்ல அந்தத் தாலியைக் கழட்டி அவங்க கிட்ட கொடுமா! இவன் தானே உங்க கற்ப சூறையாடி இருக்கான்! உனக்காக நியாயம் கிடைக்கணும்னு தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன்" என்று கோபமாகப் பேசுகிறார்.

உடனே, ராணியின் கணவர் ராஜா கோபப்படுகிறார். "நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? அவ என்னோட பொண்டாட்டி!" என்று ராஜா சத்தம் போட, முத்து, ராஜாவின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். "இப்பதான் உனக்கு பொண்டாட்டின்னு தெரியுதா? எந்த விஷயத்துல பொய் சொல்லணும்னு தெரியாதா?" என்று முத்து ஆக்ரோஷமாகக் கேட்கிறார்.

உண்மையை உளறிய ராஜா

முத்துவின் தொடர் மிரட்டலுக்குப் பயந்த ராஜா மற்றும் ராணி, இறுதியாக உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். "மனோஜ் சாருக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் வேலைக்குச் சேர்ந்தோம். ஆனா, எங்க மேல 3 லட்சம் திருடினதா திருட்டுப்பழி போட்டாங்க. அந்தக் கோபத்துல தான் நாங்க இப்படிப் பண்ணோம்" என்று நடந்த உண்மையைச் சொல்கிறார்கள்.

இதைக் கேட்டதும், முத்து அவர்களிடம் பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு, மனோஜைக் குறித்துப் பேசிய வீடியோவையும் டெலிட் செய்கிறார்.

அண்ணாமலை, ராஜா - ராணியைப் பார்த்து, "உங்க மேல தப்பு இல்லைன்னு நீங்க நிரூபிக்கணும். அதுக்காக இன்னொரு தப்பைப் பண்ணக் கூடாது" என்று அறிவுரை வழங்க, அவர்களும் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர். முத்துவின் இந்தச் சமயோசிதச் செயலை குடும்பத்தில் இருப்பவர்கள் பாராட்டுகின்றனர்.

புதிதாய் எழுந்த சந்தேகம்

ராஜா - ராணியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு, முத்து மீண்டும் ஒரு பெரிய உண்மையைச் சுட்டிக் காட்டுகிறார். "இது மட்டும் இல்லாம, அவங்க திருட்டுப்பழி போட்டதால தான் இது மாதிரி பண்ணி இருக்காங்க. இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க, அந்தப் பணத்தை அவங்க எடுக்கல" என்று முத்து உறுதியாகச் சொல்கிறார்.

அப்படியானால் பணம் எங்கே போயிருக்கும் என்று அனைவரும் கேட்க, முத்து, "அந்த லாக்கர் நம்பர் இவங்க ரெண்டு பேருக்குத்தான் (மனோஜ் & ரோகிணி) தெரியும். ஒன்னு இவ எடுத்திருக்கணும்; இல்லன்னா பார்லர் அம்மா எடுத்திருக்கணும்" என்று சந்தேகத்தை எழுப்புகிறார். விஜயா, "இவன் எடுத்திருக்க மாட்டாள்; அவ எடுத்திருப்பா" என்று ரோகினி மீது கோபப்படுகிறார். "கூடிய சீக்கிரம் அந்த உண்மையும் தெரியவரும்" என்று முத்து சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்.

ரோகிணிக்குத் தலைவலி

பிறகு ரூமுக்கு வந்த மனோஜ், "இன்னைக்கு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன். மைண்ட் ஃப்ரீயா இருக்கு. எங்கேயாவது வெளியே சாப்பிடப் போகலாம்" என்று கூப்பிட, ரோகிணி அதற்கு மறுக்கிறார். "நல்ல வேளை முத்து காப்பாத்திட்டான்" என்று மனோஜ் சொல்ல, "அசிங்கப்படுத்தி தான் காப்பாற்றி இருக்கான்" என்று ரோகிணி கோபமாகச் சொல்கிறார்.

மனோஜ் உடனே பண விஷயத்திற்குத் திரும்புகிறார். "அப்ப அவங்க (ராஜா-ராணி) பணத்தை எடுக்கலைன்னா, பணம் எங்க போயிருக்கும்?" என்று மனோஜ் யோசிக்க, ரோகிணி ஒன்றும் தெரியாதது போல், "நீ எடுத்தியா மனோஜ்?" என்று கேட்கிறார். "உன் மேல சத்தியமா நான் எடுக்கல ரோகிணி" என்று மனோஜ் சொல்கிறார். "அந்த ராஜா - ராணி ஒன்னும் நல்லவங்க கிடையாது. அவங்க எடுக்கலைன்னு சொன்னா, அதை நம்ம நம்பிடனுமா?" என்று மீண்டும் அவர்கள் மேலேயே பழி போடுவது போலப் பேசுகிறார் ரோகிணி.

"விடு மனோஜ். அந்தப் பணம் போனதை விட, உன் மேல பழியில்லாமல் இருக்கிறதா எனக்கு நிம்மதியா இருக்கு" என்று ரோகிணி சொன்னவுடன், மனோஜ் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். "என்ன யோசிக்கிற?" என்று ரோகிணி கேட்க, "நீ ஏதாவது தெரியாம எடுத்துச் செலவு பண்ணிட்டியா ரோகிணி? மறந்துட்டியா?" என்று மனோஜ் சந்தேகமாகக் கேட்கிறார். "என் மேல சந்தேகப்படுறியா?" என்று ரோகிணி கேட்க, "அப்படியெல்லாம் இல்லை ரோகிணி. சரி, நீ எடுத்திருக்க மாட்டாய். அதான் முத்து அதுவே ஒரு நாள் யாரு எடுத்தாங்கன்னு தெரிய வரும்னு சொன்னானே. அவனே கண்டுபிடிப்பான்" என்று சொல்லிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார். ரோகிணி, "நம்மதான் எடுத்தோம். முத்து கண்டுபிடிச்சிடுவானா?" என்று யோசனையில் அமர்ந்திருக்கிறார்.

மீனாவுக்கு தேவை நம்பர்

மறுபக்கம், மீனா முத்துவிடம், "நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கீங்க. உங்க அண்ணன் ஒரு வார்த்தை கூட தேங்க்ஸ் சொல்லல" என்று வருத்தப்படுகிறார். அதற்கு முத்து, "அவன் தேங்க்ஸ் சொல்லுவான்னு எல்லாம் இதைச் சொல்லல. இந்த வீட்ல அசிங்கப்பட வேணாம். அப்பாவுக்கு எந்தக் கெட்ட பேரும் வந்துரக்கூடாதுன்றதுனாலதான் இப்படிப் பண்ணேன்" என்று சொல்கிறார்.

"அவர் சொல்லலைன்னாலும், இந்த ரோகிணியாவது சொல்லி இருக்கலாம். அவங்களும் இப்படியே பண்றாங்க" என்று மீனா சொல்ல, "என்கூட பிறந்தவனே சொல்ல விருப்பம் இல்லாதப்போ, பார்லர் அம்மா மட்டும் எப்படிச் சொல்லும்?" என்று முத்து கேட்கிறார்.

உடனே மீனா, "இது மட்டும் இல்லாம, கிரிஷோட அம்மா எப்படி உங்களை ரவுடி என்று சொல்லலாம்? எனக்கு அது இன்னும் கோபம் அதிகமாக்கிக்கிட்டே இருக்கு. கண்டிப்பா நான் அவங்க அம்மாகிட்ட பேசியே தீருவேன். போன் நம்பர் வாங்கிப் பேசுவேன்" என்று சொல்ல, "எதுக்கு மீனா தேவையில்லாததெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க?" என்று முத்து வேண்டுகிறார்.

அப்போது, முருகன் போன் போட்டு, "பத்திரிக்கை ரெடி ஆயிடுச்சுங்க. சாமிகிட்ட வெச்சுட்டு முதல் பத்திரிக்கை உங்களுக்குத் தான் கொடுக்க முடிவு பண்ணி இருக்கனுங்க. கோவிலுக்கு வந்துட்டீங்களா?" என்று கூப்பிடுகிறார்.

"சரி முருகா, வந்துவிடுகிறோம்" என முத்துவும் மீனாவும் கிளம்பி வர, மறுப்பக்கம் முருகன் வித்யா இருவரும் கோவிலுக்கு வந்து பத்திரிக்கை வைத்து அர்ச்சனை செய்யக் கொடுக்கின்றனர். முத்துவும் மீனாவும் வந்தவுடன், அவர்கள் கையாலேயே வாங்கச் சொல்ல, முத்துவும் மீனாவும் வாங்கி கொடுக்கின்றனர். இதன்போது, கிரிஷ் அம்மாவின் போன் நம்பரை வாங்கித் தருமாறு வித்யாவிடம் மீனா கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+