சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட நாடகம்! உண்மையை உடைத்த ஸ்ருதி! மீண்டும் மக்குன்னு நிரூபித்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மீனாவால் கிடைத்த ஒரு மிகப்பெரிய ஹோம் அப்ளையன்ஸ் ஆர்டரை, ரோகிணி வாய்கூசாமல் தானே கஷ்டப்பட்டு வாங்கியது போல் அத்தையிடம் (விஜயாவிடம்) நாடகமாடியுள்ளார். இந்தக் காட்சியைக் கண்ட ஸ்ருதி அதிர்ச்சியில் உறைந்து போக,40 லட்சம் லாபம் என்றதும் விஜயா வாயடைத்துப்போனார்!

ஆர்டர் கிடைத்த ரகசியம்
மீனா, ஸ்ருதியின் ரெஸ்டாரன்ட்டுக்கு பூ கொடுக்கச் சென்றபோது, அங்கு சாப்பிட வந்திருந்த ஒரு பெண்மணி, மீனா பூ பிசினஸ் செய்வதைப் பற்றி ஸ்ருதி கூறியிருக்கிறார். மீனா பழ பொக்கே பற்றிச் சொன்னதால் இம்ப்ரஸ் ஆன அந்தப் பெண், தான் ஒரு பில்டர் என்றும், தற்போது 250க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய ஒரு அப்பார்ட்மென்டை கட்டி இருப்பதாகவும், அதற்காகப் பூ சப்ளை செய்ய ஆர்டர் வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார்.
ஹோம் அப்ளையன்ஸ் ஆர்டர்
அதேபோல், அந்த வீடுகளை ஹோம் அப்ளையன்ஸ் உடன் தாங்கள் கொடுக்க உள்ளது பற்றி அந்தப் பெண் சொல்ல, தன்னுடைய மைத்துனர் (மனோஜ்) கடை தான் வைத்திருக்கிறார், அவருக்கு அந்த ஆர்டரைக் கொடுக்குமாறு மீனா கேட்க, அந்தப் பெண் விசிட்டிங் கார்டு கொடுத்துத் தன்னை வந்து பார்க்கச் சொல்கிறார்.
ரோகிணியின் சந்தர்ப்பவாதம்
மீனா, வீட்டிற்கு வந்து முத்துவிடம் தனக்குக் கிடைத்த மிகப்பெரியப் பூ ஆர்டர் பற்றிச் சொல்கிறார். இதையடுத்து, முத்து சவாரிக்குச் சென்றப் பிறகு, அங்குத் தனியாக இருந்த மீனாவிடம் பேச வந்த ரோகிணியிடம், ஹோம் அப்ளையன்ஸ் ஆர்டர் மேட்டரையும் மீனா சொல்கிறார்.
இதைக் கேட்டு குஷியான ரோகிணி, மீனாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார். இந்த மிகப்பெரிய ஆர்டரைப் பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என ரோகிணி கேட்டுக்கொள்கிறார். அந்த ஆர்டரைத் தான் கஷ்டப்பட்டு வாங்கியதுபோல் விஜயாவிடம் சொல்லப் போவதாகச் சொல்லி, அதற்கு மீனாவின் சம்மதத்தையும் வாங்குகிறார் ரோகிணி. பின்னர் அந்தப் பில்டரைச் சந்தித்து ஆர்டரை உறுதி செய்த கையோடு மனோஜைப் பார்க்கச் செல்கிறார் ரோகிணி.
வாயடைத்த விஜயா
வீட்டிற்கு வந்ததும் மனோஜ், விஜயாவிடம் ஒரு சேலையைக் கொடுத்து, தங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்கிறார். மேலும், அந்த ஆர்டரைத் தானே கஷ்டப்பட்டு வாங்கியதாகக் கூறி ரோகிணி ஒரு கதை சொல்கிறார். இதைப் பார்த்த ஸ்ருதி, "எப்படி வாய்கூசாம பொய் சொல்றாங்க பாருங்க மீனா" எனச் சொல்ல, அதற்கு மீனா "விடுங்க" என்று கூறுகிறார். இந்த ஆர்டர் மூலம் 40 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என மனோஜ் சொல்ல, அதைக் கேட்டு விஜயா வாயடைத்துப் போகிறார்.
மறுபுறம், ரோகிணி இந்த ஆர்டரைப் பயன்படுத்தி மனோஜிடம் இருந்து தனக்குத் தேவைப்படும் 2 லட்சத்தை வாங்கி ஸ்ருதியின் அம்மாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தனைப் பித்தலாட்டங்களுக்குப் பிறகு, மீனாவின் இந்தத் தியாகத்தை விஜயா அறிவாரா என்று இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications