சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 13rd to 18th promo) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணிக்கு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும் இதுவரைக்கும் பல பிரச்சனைகளில் சிக்கி வந்த விஜயாவும் மனோஜும் மீண்டும் குடும்பத்திற்கு எதிராகவே ஒரு பெரிய சம்பவத்தை செய்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சிறியலில் (Siragadikka Aasai serial promo) ரோகிணியால் மொத்த குடும்பத்திற்கும் அடுத்தடுத்த பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், விஜயாவும் மனோஜும் ஒவ்வொரு நாளும் ஒரு புது பிரச்சனையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் செயல்களால் குடும்பத்திற்கு தான் அடுத்தடுத்த பஞ்சாயத்து வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் இவர்கள் ஏதாவது புதிய வம்பில் சிக்க அப்போது மீனாவும் முத்தும் தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விஜயாவும் மனோஜும் அதுபற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவே மாட்டார்கள். அதுபோலத்தான் இந்த வாரமும் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்க போகிறார்கள். அதாவது ரோகிணியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று மனோஜ் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் அவருக்கு இரண்டாவது கல்யாணத்தை அவசரமாக முடித்து விட வேண்டும் என்று விஜயா பிளான் செய்து கொண்டிருக்கிறார்.

மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம்
இந்த நிலையில் இப்போது மனோஜ்க்கு அமெரிக்கா சம்பந்தம் வந்து இருக்கிறது. இரண்டு குடும்பத்திற்கும் பிடித்து போய்விட்டதால் சீக்கிரமாக எங்கேஜ்மென்ட் முடித்து விடலாம் கல்யாணத்திற்கு முன்பு விவாகரத்து பண்ணிடுங்க என்று பொண்ணு வீட்டில் சொல்லி இருக்கின்றனர். இதற்கு விஜயாவும் சரி என்று சொல்லி இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மனோஜின் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ரோகிணி போடும் நாடகம்
அப்போது ரோகிணி தன்னுடைய மகன் கிரிஷுடன் கோர்ட்டுக்கு வருகிறார். இதைப் பார்த்து கடுப்பான நீதிபதி எதற்காக இந்த சின்ன பையனை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க, அதற்கு ரோகிணி நானும் என் பையனும் மனோஜ் வீட்டில் வாழனும் சார் நீங்க தான் ஏதாவது வழி பண்ணனும், நான் மனோஜால அதிகமாக கடன் பெற்று இருக்கிறேன் எனக்கு வருமானமும் இல்லை. அதனால எங்க போறதுன்னு தெரியலை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ததும் நீதிபதி இந்த வழக்கை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன் அதற்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.

விஜயா போடும் பிளான்
இதைக் கேட்டு விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர். நாளைக்கு என்கேஜ்மென்ட் நடக்க இருக்கும் நிலையில் இப்போ இந்த விஷயம் வீட்டிற்கு தெரிஞ்சா பிரச்சனை செய்வாங்க அதனால இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று விஜயா மனோஜ்க்கு ஐடியா கொடுக்கிறார். இதுபோல பல உண்மைகளை மறைத்து தான் இவர்கள் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள்.
அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
இப்போது இந்த உண்மையை மறைத்து எங்கேஜ்மென்ட் செய்தால் மொத்த குடும்பமும் ஜெயிலுக்கு போக தான் வழி இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க குடும்பம் கல்யாணத்திற்கு முன்பு விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் இப்போது விவாகரத்து வழக்கு தள்ளி வைத்திருக்கும் நிலையில் எங்கேஜ்மென்ட் நடக்கும் போது என்ன பஞ்சாயத்து வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications