சிறகடிக்க ஆசை: முத்து சொன்ன சந்தோஷ செய்தி.. அதிர்ச்சியில் மீனா.. விஜயாவுக்கு விழுந்த சரியான அடி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial April 20 episode) சிறகடிக்க ஆசை சீரியலில், 2026 ஏப்ரல் இருபதாம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் மற்றும் விஜயா செய்த தில்லாலங்கடி வேலை எல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் முத்து தன்னுடைய மனைவிக்காக செய்த செயலை பார்த்து மொத்த குடும்பமும் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடு ( Siragadikka Aasai Serial today episode) ஆரம்பத்தில், ரோகிணி பாசமாக பேசியதை நம்பி அவருடைய பார்லருக்கு போன ஹரிணிக்கு மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்கிற உண்மையை ரோகிணி போட்டுடைக்கிறார். அதுமட்டுமின்றி ஹரிணியிடம் அழுது புலம்பி நாடகம் போட்டு, தங்களுக்கு இன்னும் டைவர்ஸ் கூட கிடைக்கவில்லை என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். அவர் கூட தான் சேர்ந்து வாழணும்னு போராடிகிட்டு இருக்கிறேன் என்று சொன்னதும் இதைக் கேட்டு ஹரிணி அதிர்ச்சியில் நிற்கிறார்.

ரோகிணியின் நாடகம்
மேலும் கோர்ட்டில் மனோஜ் தனக்கு மாதம் 25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதையும் போட்டுக் கொடுக்கிறார். அதோடு மனோஜ் மீதுதான் தப்பு அவர்தான் பணக்கார வீட்டு பொண்ணு வேண்டும் என்று தன்னை நம்ப வைத்து ஏமாற்றி கல்யாணம் பண்ணியதாகவும், அதற்கு பிறகு அவருடைய அம்மா செய்த கொடுமைகள் என்று ரோகிணி சொல்லிக் கொண்டே இருக்க இதையெல்லாம் கேட்டு ஷாக் ஆன ஹரிணி, தன்னுடைய பெற்றோரிடம் இந்த மேட்டரை சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி நிம்மதி அடைந்துள்ளார்.
மறுபக்கத்தில் மீனாவின் அம்மா கார் செட்டுக்கு வந்து முத்துவிடம் பேசுகிறார். அப்போது அந்த சிந்தாமணியின் மகளை தான் சத்யா காதலிக்கிறானா? இந்த காதலுக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க... அவங்க சகவாசமே நமக்கு வேண்டாம் அந்த சிந்தாமணி ரொம்ப மோசமான பொம்பள. என் பையனுக்கு வேற ஏதாவது ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வைங்க என்று சொல்ல அதைக் கேட்டு முத்து கோபப்படுகிறார்.
கோபத்தில் முத்து
மீனாவிடம் சத்யாவின் காதலைப் பற்றி அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன பிறகும் சொல்லி இருக்காளா என்று திட்டி விட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த முத்து மீனாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா அவரை சாந்தப்படுத்துவது போலவே அமைதியாக பேசுகிறார். இதனால் ஒரு வழியாக அமைதியான முத்து தான் வாங்கி வந்த தாலி செயினை மீனாவிடம் கொடுக்கிறார்.
விஜயாவின் திமிர் பேச்சு
நான் உனக்காக தாலி செயின் வாங்கி தரேன்னு சொன்னேன் அதை செஞ்சிட்டேன் என்று முத்து சொன்னதும் மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பிறகு அந்த தாலி செயினை அண்ணாமலையிடன் காட்டி பேசிக்கொண்டிருக்கும் போது விஜயா இந்த ஒரு செயின் வாங்குவதற்கு ஒரு வருஷம் ஆகியிருக்கு ஆனா மனோஜ் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்படியும் குறைஞ்சபட்சம் 500 பவுன் கொண்டுட்டு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதிர்ச்சியில் அண்ணாமலை
அந்த நேரத்தில் ஹரிணியின் குடும்பத்தினர் ஸ்வேதாவுடன் அங்கே வருகின்றனர். அதை பார்த்ததும் அண்ணாமலை என்னவென்று கேட்க, அவர்கள் வீட்டிற்கு வந்ததுமே அண்ணாமலையே திட்ட தொடங்கி விடுகிறார்கள். நீங்க எங்களை ஏமாற்றி இருக்கீங்க, உங்களை நாங்க ரொம்ப நம்பினோம் ஆனால் உங்க பையனுக்கு விவாகரத்து கிடைக்காமலேயே நீங்க எங்க பொண்ணு கூட கல்யாணத்துக்கு எங்கேஜ்மென்ட் பண்ணி இருக்கீங்க.
சிறகடிக்க ஆசையில் நாளை.. விஜயா பற்றிய உண்மைகளை போட்டு கொடுத்த ரோகிணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை! உடையும் குடும்பம்
இப்படி எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க.. இனி இந்த கல்யாணம் நடக்காது என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே விஜயா மற்றும் மனோஜ் குடும்பத்தினரிடம் மறைத்த உண்மைகள் எல்லாமே இப்போ குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications