சிறகடிக்க ஆசையில் நாளை.. விஜயா பற்றிய உண்மைகளை போட்டு கொடுத்த ரோகிணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை! உடையும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடியே விஜயாக்கு பெரிய ஆப்பு வந்திருக்கிறது. அதாவது விஜயா பற்றிய ரகசியங்களை ரோகிணி போட்டு கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது. ஒரு பக்கம் சத்யாவின் காதல் விஷயம் சிந்தாமணிக்கு தெரிய வந்திருக்கிறது. தன்னோட மகளை தன் எதிரியான மீனாவின் தம்பி காதலிக்கும் விஷயத்தை கேட்டு சிந்தாமணி அதிர்ச்சியில் இருக்கிறார். அது போதாது என்று தன்னுடைய கணவரிடமும் இந்த காதல் ரகசியங்களை போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அதோடு சத்யாவின் கடந்த கால வாழ்க்கை, அவர் ஆரம்பத்தில் திருடியது போன்ற விஷயங்கள் எல்லாவற்றையுமே சிந்தாமணி தன்னுடைய புருஷனிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால் இதை வைத்து அடுத்த பஞ்சாயத்து வரப்போகிறது. அதிலும் சிந்தாமணி மகளைத்தான் சத்யா காதலிக்கிறார் என்ற விஷயம் முத்து மீனாவிற்கும் தெரிய வந்திருக்கிறது. அதில் முத்து சத்யாவின் காதலுக்கு சப்போர்ட் பண்ணுவதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்தில் மனோஜிக்கு அமெரிக்க பொண்ணுடன் எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. இந்த ரகசியமும் ரோகிணிக்கு தெரிந்து விட்டது. இதனால் ரோகிணி என்ன நாடகம் போட போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் செய்த ஹரிணியிடம் தனக்கும் மனோஜ்க்கும் ஏற்கனவே கல்யாணம் நடந்தது என்ற உண்மையை சொல்கிறார்.

ரோகிணி சொன்ன விஷயம்
மேலும் தனக்கும் மனோஜ்க்கும் இன்னும் விவாகரத்து ஆகல, ஆறு மாதத்திற்கு இந்த வழக்கை தள்ளி வச்சிருக்காங்க என்ற உண்மையையும் ரோகிணி சொல்லிவிடுகிறார். இதனால் ஹரிணி தன்னுடைய குடும்பத்தோடு வந்து, அண்ணாமலையிடம் நீங்க இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே என்று வாக்குவாதம் செய்கிறார்.

அப்போது அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க ஹரிணி நான் மனோஜின் மனைவி ரோகிணியை பார்த்தேன். அவங்க இந்த விவாகரத்து கிடைக்க வாய்ப்பே இல்லைன்னு சொன்னாங்க. அதோடு இந்த வழக்கை தள்ளி வைத்து இருக்கிறது பற்றியும் சொன்னாங்க என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சியில் இருக்கிறார். மேலும் இந்த கல்யாணத்தில் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர்.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் விஜயா மனோஜின் நாடகமும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதனால் அண்ணாமலை இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications