சிறகடிக்க ஆசை: பெத்த பிள்ளை பேச்சை கேட்காத விஜயாக்கு சரியான அடி.. இது பலருக்கு பாடம்! பாவம் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 23 episode) சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோடில், குடும்பத்திற்கு தெரியாமல் விஜயாவும் மனோஜும் வீட்டு பத்திரத்தை அடகு வைத்த விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. சிந்தாமணியை மலை போல நம்பிக்கொண்டிருந்த விஜயாக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், முத்து வீட்டிற்குள் வேகமாக ஓடி வருகிறார். அதை பார்த்ததும் அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க, மீனாவை கத்தியால் குத்திய நபரை நான் கண்டுபிடித்து விட்டேன். அந்த ஆளிடம் கத்தியால் குத்த சொன்னது சிந்தாமணி தான் என்று சொல்லிவிட்டார். உடனே நான் போலீசை கூட்டிட்டு போய் சிந்தாமணியை அரெஸ்ட் பண்ண வைத்து விட்டேன் என்று நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னதும் விஜயா இதை நம்ப மறுக்கிறார்.
அண்ணாமலை அட்வைஸ்
அப்போது அண்ணாமலை நீ எப்படிப்பட்டவங்க கூட எல்லாம் சேர்ந்து கொண்டு இருக்கிற என்ற பாரு என்று சொன்னாலும் விஜயா அதை நம்பவில்லை. வேற யாராவது பண்ணுன தப்புக்கு கூட அந்த ஆள் சிந்தாமணி பேரை சொல்லலாம் என்று சொல்கிறார். ஆனாலும் ஒரு வேலை சிந்தாமணி பண்ணி இருந்தா அவங்க அடிபட்ட பாம்பு மாதிரி... பழி வங்காமல் விடமாட்டாங்க என்று சொல்ல, அண்ணாமலை விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜெயிலில் சிந்தாமணி
மறுபக்கத்தில் சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது சிந்தாமணியின் கணவரும் வக்கீலும் வருகின்றனர். அவர்கள் போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணி வந்து இது எப்படி நடந்துச்சு... நான் உங்களை வெளியே கொண்டுவருவதற்கு ஏதாவது வழி பண்ணுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு சிந்தாமணி வேண்டாம் என் ஹஸ்பண்ட் வந்துட்டாரு அவரு பாத்துக்குவாரு நீ வெளியே வெயிட் பண்ணு என்று அனுப்பி வைக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே ஒரு ஆளு வந்து நான் தான் முத்துவை குத்த பணம் கொடுத்தேன் என்று சரண்டர் ஆகிறார். இதனால் சிந்தாமணியை அனுப்பி வைக்கின்றனர். பிறகு வெளியே வந்த சிந்தாமணி ரோகினியிடம் இனி நான் அந்த குடும்பத்தை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சபதம் போடுகிறார்.
சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்
அடுத்ததாக சிந்தாமணி விஜயா வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்ததும் நீ என்ன இங்க வந்து இருக்க? போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பித்து வந்துட்டியா? என்று கேட்க, நான் செய்யாத தப்புக்கு எதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும் யாரு அந்த தப்பை செஞ்சாங்களோ அதே நபர் ஜெயிலில் வந்து சரண்டர் ஆகிட்டாரு அதனால நான் உண்மையை நிரூபிச்சுட்டு வெளியே வந்துட்டேன்.
நான் எலக்ஷனில் தோற்றுப் போனதால எனக்குன்னு இருந்த மரியாதை எல்லாம் இப்ப போயிடுச்சு. அதனால நான் பைனான்ஸ் கொடுப்பதற்காக எனக்கு பணம் கொடுத்தவங்க என்கிட்ட பணத்த திருப்பி கேக்குறாங்க அதனாலதான் உங்க வீட்டுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு என்று சிந்தாமணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பைனான்சியர் அங்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மனோஜும் விஜயாவும் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிக்கிய விஜயா
அப்போது பைனான்சியர் மனோஜும் விஜயாவும் வீட்டு பத்திரத்தை தன்னிடம் கொடுத்து மேலும் பணம் வாங்கிய விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதோடு இவங்க ரெண்டு பேரும் எனக்கு 60 லட்சத்துக்கு மேல பணம் தரணும் என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
வீட்டு பத்திரத்தில் நீங்கதான் கையெழுத்து போட்டீங்கன்னு சொல்லி தான் விஜயா என்கிட்ட கொடுத்தாங்க என்று பைனான்சியர் விஜயாவை மாட்டி விட அண்ணாமலை கடும் கோபத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனோஜை போட்டு அடிக்க, மனோஜ் அம்மா சொல்லி தான் நான் கையெழுத்து போட்டேன் என்று உளறி விடுகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.














Click it and Unblock the Notifications