சிறகடிக்க ஆசை: சத்யா பற்றி முத்து உடைத்த உண்மை.. மீனா அம்மா கேட்ட கேள்வி! அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து குடித்துவிட்டு வீட்டில் பிரச்சனை செய்ததை கேட்டு அண்ணாமலை கோபப்படுகிறார். அதே நேரத்தில் மீனாவின் அம்மாவிடம் முத்து, சத்யா பற்றிய உண்மைகளையும் சொல்லி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து குடித்துவிட்டு வந்து மீனாவிடம் வாக்குவாதம் செய்ய பதிலுக்கு மீனாவும் கோபப்படுகிறார். பிறகு முத்து சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். அந்த நேரத்தில் விஜயா வர மீனா இப்போ உங்களுக்கு சந்தோஷமா? என்று கேட்க அதற்கு விஜயா நான் இன்னும் எதிர்பார்த்தேன் ஆனா இவ்வளவுதான் நடந்திருக்கு ஆனாலும் இது எனக்கு சந்தோஷம்தான்.

Siragadikka aasai serial

முத்து ரொம்ப நாளா குடிச்சிட்டு வராம இருந்தா நான் இப்போ உன்னால குடிக்க தொடங்கி இருக்கிறார். இதை பார்க்கும்போது எனக்கு அல்வா சாப்பிடணும் போல இருக்கு என்று விஜயா சொல்கிறார். பையன் குடிச்சு விட்டு வந்தால் சந்தோஷப்படும் அம்மாவை முதல் முறையாக இப்பதான் பார்க்கிறேன் என்று மீனா திட்ட விஜயா கிளம்பி விடுகிறார். காலையில் முத்து எழுந்து வந்ததும் அண்ணாமலை லேட்டா வந்தியா என்று கேட்க, ஆமாம் சவாரி என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

பிறகு மீனா காபி கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு குளிக்கப் போகிறார். முத்துவின் கார் சாவியை எடுத்து மீனா மறைத்து வைத்துக் கொள்ள, முத்து கார் சாவியை அங்கே எங்கே தேடி அலைய அண்ணாமலை நீ குடிச்சிட்டு வந்தியா? என்று கேட்க, அதற்கு விஜயா ஆமாம் என்று சொல்கிறார். மீனாவிடம் இதற்கு மேல் இவன் குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ள சேர்க்காத கதவை திறக்க வேண்டாம் என்று சொல்ல அதற்கு மீனாவும் சரி என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial

பிறகு மீனா சாவியை எடுத்துக் கொடுக்க, முத்து நீ வேணுன்னு தானே எங்க அப்பாவிடம் மாட்ட வைப்பதற்காக இப்படி பண்ணுன, நான் கிச்சன் பக்கமே வரவில்லை சாவி இங்கே வந்திருக்குன்னா நீ தான் எடுத்து வச்சிருக்க என்று கோபப்பட்டு திட்டிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு தன்னுடைய நண்பர்களிடம் முத்து கோபமாக பேசிக் கொண்டிருக்க அதற்கு செல்வம் நீ சத்யா விஷயத்தை இன்னும் மறக்கலையா என்று கேட்க, அதற்கு முத்து என்னை அவன் துளி கூட மதிக்கிறது கிடையாது.

அப்படி இருக்கும்போது நான் சொல்லியும் கேட்காம மீனா போய் இருக்கா. நான் எதற்காக உழைக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும் சீதாவும் அங்கே வருகின்றனர். அவர்கள் முத்துவிடம் மன்னிப்பு கேட்கின்றனர். அதற்கு முத்து உங்க பையன் என்னை கோவிலுக்கு வரக்கூடாதுன்னு சொன்னானா? இல்லையா? என்று கேட்க, அதற்கு மீனாவின் அம்மா அவன் புத்தி கெட்ட தனமா பேசிட்டான்.

Siragadikka aasai serial

அவனுக்காக நாங்க மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்ல, இல்ல என்னை மதிக்காத இடத்துக்கு நான் போக மாட்டேன். என்னை மதிக்க அந்த இடத்துக்கு என் பொண்டாட்டியும் போகக்கூடாது என்று நினைக்கிறது தப்பா என்று கேட்கிறார். அதோடு நீங்க அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து அவன் மேலும் மேலும் தப்பு பண்ணிட்டே போறான். நான் இவ்வளவு கோபப்படுறேனே தப்பு யாரு பக்கம் இருக்கணும்னு நீங்க புரிஞ்சுக்கோங்க என்று சொல்கிறார்.

அதற்கு மீனா அம்மா நீங்க அவன் மேல கோவப்படுறீங்கனா அவன் நல்லா இருக்கணும்னு தானே கோபப்படுறீங்க. அதனால கொஞ்ச நாளில் அவன் புரிஞ்சுக்குவான். அதற்காக மீனாவை வெறுத்து ஒதுக்கிடாதீங்க என்று மீண்டும் மன்னிப்பு கேட்க அதற்கு முத்து நீங்க சும்மா இருக்க அத்தை‌. நீங்க தப்பு பண்ணாம நீங்க எதற்கு மன்னிப்பு கேட்கணும்? என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சவாரி வந்ததும் முத்து அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+