சிறகடிக்க ஆசை: நான் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தேன்! ரோகிணி சொன்ன ஷாக்.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆவதற்கு செக்கப் செய்ய வந்த விஷயம் மீனா மூலமாக மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்திருக்கும் நிலையில் அது பற்றி ரோகிணி சொன்ன வார்த்தை அண்ணாமலை குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ரோகிணி பற்றிய விஷயத்தை மீனா ஸ்ருதி இடம் சொல்ல அதை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே குழந்தை பற்றி ரோகிணி பேசியது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.. ஒரு குழந்தை பெற்றது போல தான் ரோகிணி அவ்வளவு தெளிவா பேசுனாங்க. ஆனா அப்பவும் உண்மையை மறைச்சுட்டாங்க இப்போ ரோகிணிக்கு இரண்டாவது குழந்தை என்ற உண்மை தெரியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஸ்ருதி சொல்லி இதைப் பற்றி ரோகிணி இடம் கேட்டு விடலாம் என்று சொல்ல அதற்கு மீனா வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.

அதோடு இந்த உண்மையை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல ஸ்ருதி அதைப்பற்றி அப்படியே ரவி இடம் சொல்லி விடுகிறார். இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து உண்மைகள் எல்லோருக்கும் தெரியவருவதை பார்க்கும்போது ஒருவேளை இது கனவா என்பது போலத்தான் இருந்தது. ஆனால் கடைசியில் தான் ட்விஸ்ட் இருந்தது. சரி எபிசோட்க்கு வருவோம், ரவிக்கு உண்மை தெரிந்ததும் ரவி முதலில் இதை நம்ப மறுத்தாலும் இதை சொன்னது மீனா என்றதும் நம்பி விடுகிறார்.
பிறகு முத்துவிடம் போய் இதை சொல்ல முத்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதோடு இந்த பார்லர் அம்மா கேடி என்பது எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு பெரிய கேடியா இருந்திருக்கு என்று சொல்லிக் கொண்டு அண்ணாமலையை தனியாக கூப்பிட்டு அண்ணாமலை இடமும் சொல்லிவிடுகிறார். அண்ணாமலையும் முதலில் நம்ப மறுக்கிறார் பிறகு இதை பற்றி விஜயாவிடமே கேட்டு விடலாம் என்று விஜயாவிடம் கேட்கிறார். விஜயா அதிர்ச்சியாகி நேரடியாக ரோகிணி ரூமிற்கு வந்து ரோகிணியை பிடித்து உலுக்கி நீ முதல் தடவை எப்போ உண்டான? உனக்கு எப்போ கரு உருவாச்சு? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு இருக்கிறார்.

ரோகிணி அதிர்ச்சியில் நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல என்று முதலில் நடித்து பார்க்கிறார். ஆனாலும் விடாமல் விஜயா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ ஹாஸ்பிடலுக்கு எதற்கு போன அங்கே நீ இரண்டாவது குழந்தை கர்ப்பமா ஆகணும்னு சொல்லி இருக்கியே என்று கேட்க, அதற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து சிறிது நேரம் நடித்துக் கொண்டிருந்த ரோகிணியிடம் மனோஜ் வந்து இதெல்லாம் எப்ப நடந்தது ரோகிணி? நீ ஹாஸ்பிடலுக்கு போனது எனக்கு தெரியாதே.. இதுல இரண்டாவது குழந்தை என்று சொல்லி இருக்கியே என்று கேட்கிறார்.

அதற்கு ரோகிணி ஆமா நான் ஏற்கனவே கர்ப்பமா இருந்தேன் என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியான விஜயா கல்யாணத்திற்கு முன்னாடியா? அதற்குப் பிறகா? என்று கேட்க, அதற்கு அழுது கொண்டு ரோகிணி மனோஜ் குழந்தைக்கு தான் நான் அம்மாவா ஆனேன். ஆனால் அந்த குழந்தை பூமிக்கு வராமல் கலைந்து விட்டது என்று கதை சொல்லி விடுகிறார். நான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் தான் எங்க அப்பா ஜெயலில் இருப்பதாக மாமா வந்து சொன்னாரு.
அந்த அதிர்ச்சியில் எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டது என்று சொல்ல அதற்கு விஜயா இதை ஏன் என்கிட்ட சொல்லல என்று சொல்ல நான் கன்ஃபார்ம் ஆன பிறகு எல்லாரிடமும் சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆனதும் யாரிடமும் சொல்லல மனோஜ் கிட்ட கூட நான் இதைப் பற்றி சொல்லல என்று மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக இருக்கின்றனர்.

இப்படியாக எபிசோடு முடிவடைகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் ரோகிணி மனோஜிடம் குழந்தைக்காக செக்கப்புக்கு போக கூப்பிட்டு இருந்தார். அப்ப கூட நீ இதற்கு முன்பு ஜீவாவுடன் லிவ்விங்கில் இருக்கும்போது உன்னால் ஜீவா கர்ப்பமாக ஆனாளா? இல்லையா? உனக்கு ஏதாவது குறை இருக்குமா என்கிற ரீதியில் தான் கேள்வி கேட்டிருந்தார். ஆனால் இன்று அதை பற்றி மனோஜும் எந்த கேள்வியும் கேட்கவில்லை விஜயாவும் விட்டுவிட்டார்.
பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் ரோகிணி மாட்டாமல் தப்பித்து விட்டார். கடந்த வாரத்தில் நாம் சொன்னது போல தான் இந்த வாரம் ரோகிணி பேசி இருக்கிறார். ரோகிணி ஒவ்வொரு முறையும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டில் தட்டி விடுங்க.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications