சிறகடிக்க ஆசை: க்ரிஷை தத்தெடுக்க போகும் மீனா.. ரோகிணி சொன்ன வார்த்தை.. இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 2 நாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மகனை மீனா தத்தெடுக்க பிளான் போடுகிறார். அதே நேரத்தில் ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் இனி முத்துவும் மீனாவும் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது என்று மிரட்டி கொண்டிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசைகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ரோகிணி வீட்டில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் மீனாவுக்கும் முத்துவுக்கும்தான் பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. மனோஜ் வீட்டில் திருடிய போது கூட முத்துவிற்க்கும் மீனாவிற்கும் தான் பிரச்சனைகள் வந்தது.

பிறகு மனோஜ் பற்றி ஒரு வழியாக உண்மையை கண்டுபிடித்து வீட்டிற்கு செல்லும் போதும் மொத்த பழியும் மீனா மீது விழுந்து விட்டது. இது வழக்கமாக ஒவ்வொரு முறையும் நடப்பது தான். அந்த வகையில் இப்போது முத்துவும் மீனாவும் புது பிரச்சனையில் சிக்குகின்றனர். ரோகிணி தன்னுடைய மகனிடம் நான் தான் உன்னுடைய அம்மா என்று உண்மையை சொல்லி இருக்கிறார். இதனால் க்ரிஷ் எப்போதும் தன்னுடைய அம்மா என் கூடவே இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பிறந்தநாளுக்கு ரோகிணி ஊருக்கு வந்திருக்கிறார். முத்து காஞ்சிபுரத்துக்கு போயிருந்த நிலையில் அங்கு க்ரிஷ்க்கு ஒரு டிரஸ் வாங்கி க்ரிஷ் வீட்டிற்கு கொண்டுட்டு வந்து இருக்கின்றனர். க்ரிஷ் பிறந்தநாள் என்பது மீனாவிற்கும் முத்துவிற்கும் தெரியாது. அதே நேரத்தில் ரோகிணி இவர்களை பார்த்ததும் வழக்கம் போல ஒளிந்து கொள்கிறார்.
ஒவ்வொரு முறையும் முத்து க்ரிஷ் அத்தை எங்கே என்று ரோகிணியின் அம்மாவிடம் கேட்டுக் கொண்டு இருப்பது போல இந்த முறையும் கேட்டு பிரச்சனை செய்ய அவர் என்னுடைய மகனோட பையன் க்ரிஷ் இல்லை. என்னுடைய மகளுடைய பையன் தான். எங்க வீட்டில் கஷ்டமாக இருந்ததால் என்னுடைய மகளுக்கு வசதியான ஒரு வீட்டில் இருந்து வரன் வந்ததால் நான் கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். ஆனால் அந்த நபர் என்னுடைய மகளை விட வயசானவர். அவர் கிரிஷ் பிறந்ததும் இறந்து போய்விட்டார்.

அதனால் என்னுடைய பேரனுக்கு அவங்க அம்மா என்னுடைய மகள் என்பது தெரியாது என்று உண்மைகளை சொல்லி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ப்ரோமோவில் மீனாவும் முத்துவும் காரில் போய்க்கொண்டிருக்கும் போது மீனா நாம க்ரிஷை தத்து எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார். ஏற்கனவே அண்ணாமலை வீட்டில் முத்துவிற்கும் மீனாவிற்கும் ரூம் கிடையாது. அவர்களே மாடியில் இருக்கின்றனர். அதுபோல மீனாவிற்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் கிடையாது.
ஒரு வேலைக்காரி போல தான் இருந்து கொண்டிருக்கிறார். விஜயா மீனாவை பாடாப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். க்ரிஷ் அந்த வீட்டிற்கு கெஸ்டாக போகும்போதே சிறுவன் என்றும் பார்க்காமல் விஜயா அந்த பாடுப்படுத்தினார். ஆனால் இப்போது அதே சிறுவனை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று மீனா போடும் பிளானால் விஜயா கொந்தளிக்க போகிறார். அதே நேரத்தில் முத்துவும் மீனாவும் இனி இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் மிரட்டி கொண்டிருக்கிறார்.
அவர்கள் இந்த வீட்டிற்கு வந்தால் நீ அவங்க கிட்ட சரியா பேசாம முகத்தை திருப்பிக்கிட்டு போனாலே அவங்க இந்த பக்கம் வரமாட்டாங்க... வரவும் கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுப்பதற்காக ரோகினியின் அம்மாவிடம் கேட்கும் போது அவர் மீனாவை அவமானப்படுத்தி அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் இந்த எபிசோடு தான் ஹை வால்டேஜாக இருக்கப் போகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications