சிறகடிக்க ஆசை: வசமாக சிக்கும் ரோகிணி.. முத்து- மீனா வாழ்க்கையில் வெடித்த பூகம்பம்
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 11ஆம் தேதிக்கான எபிசோடில் புதிய வீடு வாங்க போகும் மனோஜ் மற்றும் ரோகிணி ஏமாற போகிறார்கள். அதே நேரத்தில் முத்து, மீனா வாழ்க்கையிலும் புது பிரச்சனை வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி புதியதாக வாங்க இருக்கும் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் கடல் இருப்பதால் அங்கேயும் சென்று பார்த்துவிட்டு இங்கே வாக்கிங் போகலாம் நல்லா இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வீடு ரொம்ப பிடித்து விடுகிறது. இதனால் வீட்டை விற்பவர்கள் இந்த வீடு மொத்தமாக அஞ்சு கோடி ஆனால் மூன்று கோடிக்கு தருகிறோம். முதலில் 50 லட்சம் அட்வான்ஸ் வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் முதலில் 50 லட்சம் என்றால் கொஞ்சம் கஷ்டம். 30 லட்சம் தருகிறோம் என்று சொல்ல, சரி மீதி பணத்தை ஆறு மாத தவணையில் தருமாறு சொல்கிறார்.
இதனால் வீடு விற்பவர் ரொம்ப நல்லவராக இருக்கிறார் என்று மனோஜும் ரோகிணியும் பேசிவிட்டு சந்தோஷமாக செல்கிறார்கள். அவர்கள் சென்றதும் நாம நெனச்ச மாதிரி ஒரு முட்டாள் வந்து மாட்டிருக்கு.. காசு கொடுத்ததும் நாம துபாய்க்கு போயிருவோம். இந்த வீட்டு ஓனருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துட்டு மிச்சத்தை நாம கொண்டுட்டு போயிடலாம் என்று அந்த வீடு விற்பவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கத்தில் மீனா மண்டபத்துக்கு டெக்ரேசன் பண்ணியதற்காக அவருக்கு ஏழாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். அப்போது அந்த மண்டபத்தில் இருக்கும் நபர் இந்த மண்டபத்தில் வழக்கமாக டெக்கரேஷன் செய்கிற பொம்பள ரொம்ப மோசமானவங்க. யாருக்கும் இந்த வாய்ப்பை விட்டு தர மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மீனா நான் யாரோட வாய்ப்பையும் தட்டி பறிக்கல. உண்மையா உழைச்சிருக்கே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் ஏற்கனவே மண்டபத்தில் டெக்கரேஷன் செய்த பெண் காரில் வந்து இறங்குகிறார். தனக்கு ஆர்டர் தரவில்லை என்று மண்டபத்துக்காரரிடம் கேட்க அதற்கு அவர் நான் இந்த பொண்ணுக்கு ஆர்டர் கொடுக்கல நேரடியா ஓனரிடம் பேசிட்டு வந்திருக்காங்க என்று சொல்கிறார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா அண்ணாமலைக்கு ஸ்வீட் கொடுத்து தான் முதல் ஆர்டர் வெற்றிகரமாக செய்ததை சொல்கிறார். அப்போது விஜயா வர விஜயாவுக்கும் ஸ்வீட் கொடுக்க விஜயா வழக்கம் போல மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாத அண்ணாமலை விஜயா வாயில் ஸ்வீட்டை வைத்து விடுகிறார்.

அப்போது வந்த முத்து என்ன வாயில் ஸ்வீட்டோடு இருக்கிறீங்க என்று கேட்டதும் மீனா மண்டபத்தில் ஆர்டர் சரியாக செஞ்சு முடித்தது பற்றி சொல்கிறார். பிறகு பிறகு இரவு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா, முத்துவிடம் தான் வாங்கிய 7000 பணத்தை கொடுத்து இது எல்லாம் உங்களால தான் என்று பெருமையாக பேசுகிறார்.
ஆனாலும் இப்ப எல்லாம் உங்களைவிட நான்தான் அதிகமா சம்பாதிக்கிறேன். அதிகமா உண்டியலில் பணம் போடறேன் என்று சொன்னதும் முத்துவின் முகம் ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. பிறகு மீனா நான் காபி போட போறேன் நீங்க மாடியில் காய போட்டு இருக்கிற துணியை எடுத்துட்டு வந்துருங்க என்று சொல்லிவிட்டு போகிறார். துணி எடுக்கும் போது மீனா சொன்னதையே முத்து நினைத்து நினைத்து பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications