சிறகடிக்க ஆசை: ஸ்ருதியின் பணத்துக்காக முத்துவை வீட்டை விட்டு விரட்டும் விஜயா..அண்ணாமலையின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி வீட்டிற்கு வரும்போது முத்து வீட்டிற்குள் இருக்கக் கூடாது என்பதற்காக விஜயா பிளான் போடுகிறார்.
ஆனால் முத்து பிடிவாதமாக வீட்டிற்குள்ளே இருக்க வீட்டிற்குள் வந்த ஸ்ருதி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ இன்னைக்கு பெரிய சாதனை பண்ணி இருக்க, இப்பதான் எனக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே இருக்க என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நாள் காலையில் விஜயா மீனாவிடம் கேசரி, வடையெல்லாம் செய்ய சொல்கிறார். அதற்கு மீனா யாரும் வராங்களா அத்தை என்று கேட்க, அதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்றதை மட்டும் செய் என்று சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை: கண் கலங்கும் மீனா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி.. ட்ரீட் வச்சி கொண்டாடும் முத்து
பிறகு முத்து இன்னும் சவாரிக்கு போகலையா என்று விஜயா அவருக்கு விழுந்து விழுந்து சாப்பாடு பரிமாறி முத்துவை வீட்டை விட்டு அனுப்பி வைக்க முயற்சி செய்கிறார். இதை பார்த்த முத்து எங்க அம்மாவா இப்படி பண்றாங்க என்று ஷாக் ஆகிறார். கூடவே மீனா கிட்ட மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன் என்று சொல்ல, எதுக்கு அலைஞ்சுகிட்டு இருக்க முத்துவுக்கு மதியத்துக்கு டிபன் கட்டி கொடுத்து விடு என்று விஜயா சொல்ல, மீனாவும் மதிய சாப்பாட்டையும் முத்துவிற்கு கொடுத்திருக்கிறார்.
பிறகு ஒரு வழியாக முத்து எல்லோருக்கும் டாட்டா சொல்லி நான் சவாரிக்கு போயிட்டு வரேன் என்று கிளம்பி கீழே போகிறார். பிறகு திடீரென்று மேலே ஓடி வந்து அப்பா வயிறு ஒரு மாதிரி இருக்குது வலிக்குது பா என்று பாத்ரூமுக்கு போகிறார். அப்போது விஜயா முத்துவை வீட்டை விட்டு விரட்டிவிட என்பதற்காக பல முயற்சிகள் செய்ய ஆனால் முத்து பாத்ரூமுக்குள் ஓடிப்போய் விடுகிறார். அப்போது விஜயா எல்லாரிடமும் ரவி, ஸ்ருதி வீட்டுக்கு வராங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை குடும்பத்தை பிரிக்க துருப்பு ஆகும் ஸ்ருதி.. மீனாவை மாட்டிவிடும் ரோகினி
அப்போது ரவி, ஸ்ருதி, ஸ்ருதியின் அம்மா சுதா மூவரும் அண்ணாமலை வீட்டிற்கு வருகின்றனர். விஜயா வாங்க சம்மந்தி என்று எல்லோரையும் கூப்பிடுகிறார். ஆனால் அண்ணாமலை பழசை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். பிறகு விஜயா முதல்முறையாக இந்த வீட்டுக்கு வரீங்க, இருங்க என்று சொல்லி மீனாவையும் ரோகிணியையும் ஆரத்தி எடுக்க சொல்கிறார். அப்போது வீட்டிற்குள் வந்த ரவி அண்ணாமலையிடம் எப்படி இருக்கீங்க? உடம்பு இப்ப எப்படி இருக்கு, மனோஜ் எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications