அண்ணாமலையிடம் முத்து சொன்ன வார்த்தை! ஆனால் மீனா இப்படி பேசலாமா? விஜயா வாயால் வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து சத்யா பற்றிய உண்மையை சொல்லுவார் என்று பார்த்தால் அண்ணாமலை இடம் உண்மையை சொல்லாமல் மன்னிப்பு கேட்க அதனால் மீனா மீண்டும் கோபப்படுகிறார்.
மறுபக்கத்தில் மனோஜ் பார்த்திருந்த ஹோட்டல் வேலையும் இப்போது பறிபோயிருக்கிறது. ஆனால் இது தெரியாத விஜயா மீனாவின் குடும்பத்தை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடில் நிறைய நடந்தது அது பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யாவை எதுக்காக அடிச்சே என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்க அதற்கு ரூமுக்கு வெளியே மீனா நின்றபடி முத்து என்ன சொல்ல போகிறார் என்று ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை முத்து பார்த்து விடுகிறார் அதனால் உண்மையை சொல்ல வந்த முத்து கடைசியில் அதை மறைத்துவிட்டு தான் செய்தது தப்புதான் என்று மன்னிப்பு மட்டும் கேட்கிறார். இதனால் மேலும் மீனா கோபமாக இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மீனாவிடம் அண்ணாமலை முத்து மனதில் ஏதோ இருக்கிறது அதை சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்று சொல்ல, அதற்கு மீனா இல்ல மாமா அவர் கோபத்தில் தான் அடிச்சி இருக்காரு. வேற எந்த விஷயமும் இருக்காது என்று தன்னுடைய தம்பிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

மறுபக்கத்தில் வீட்டுக்கு லேட்டா வந்த மனோஜிடம் ரோகிணி என்ன ஆச்சு ஏன் இவ்வளவு லேட் என்று கேட்க அதற்கு மனோஜ் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சா தானே வர முடியும் என்று சொல்லி மாட்டிக்க பார்க்கிறார். பிறகு வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் வர முடியும் என்று சொன்னேன் என்று சமாளித்து விடுகிறார். அதோடு ரோகிணி மனோஜ் மீது சாம்பார் வாசனையா இருக்கு என்று கேட்க அதற்கு மனோஜ் அது ஒரு புதுவித பர்பியூம் என்று சொல்ல அதையும் ரோகிணி நம்பி விடுகிறார்.

அடுத்த நாள் காலையில் கார் செட்டில் எல்லோரும் முத்து கார் விற்றதை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது முத்து கார் இல்லாததால் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார். அதனால் அவருடைய நண்பர்கள் எல்லோரும் கவலைப்படுகின்றனர் அதற்கு முத்து எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் கார் ஓட்டுவதை விட ஆட்டோ ஓட்டுவது ரொம்ப ஈசியா தான் இருக்கு. நான் இப்போதும் சந்தோஷமா தான் இருக்கேன் என்கிட்ட நேர்மையும் தன்னம்பிக்கையும் இருக்கு என்று தன்னுடைய நண்பர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
மறுபக்கத்தில் மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலில் ஒருவருக்கு சாம்பார் கொண்டு வரும்போது சாப்பிட வந்தவர்கள் மீது கொட்டி விடுகிறார். இதனால் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமான ஓனர் மனோஜை வேலையில் இருந்து வெளியே துரத்துகிறார். ஆனால் வெளியே வரும்போதும் மனோஜ் திருந்தாமல் அந்த ஓனரை திட்டி விட்டு வருகிறார்.

அடுத்ததாக மீனாவின் அம்மாவும் சீதாவும் வீட்டுக்கு வந்து அண்ணாமலை இடம் தன்னுடைய கணவரின் நினைவு நாள் வருது என்று சொல்ல சொல்லி எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிட அண்ணாமலை பீல் பண்ணுகிறார். அதற்கு விஜயா அதெல்லாம் எதுக்கு இங்க வந்து சொல்லிட்டு இருக்கீங்க உன் புருஷன் அல்ப ஆயுசுல போய்ட்டான் அதனால நீங்களே அதை பார்த்துக்கோங்க என்று அவமானப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications