சிறகடிக்க ஆசை: விஜயாவை மிரட்டி கடைசியில் சிக்கிய ரோகிணி.. சீதா ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மீனா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 20205 ஜூன் 16ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவின் மனதை மாற்றுவதற்காக சாமியாரை வைத்து ரோகிணி புது நாடகம் போடுகிறார். ஆனால் கடைசியில் ரோகிணிக்கு மிரட்டல் வருகிறது. அதுபோல் சீதா அருண் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய போவதாக சொல்கின்றனர். அதற்கு மீனா என்ன பதில் சொன்னார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதாவும் மீனாவும் அருண் சொன்ன ஹோட்டலுக்கு வருகின்றனர். அங்கு அருண் தன்னுடைய அம்மா தனக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்ல சீதா ஃபீல் பண்ணி அழுகிறார். அதற்கு அருண் நாங்க ரெண்டு பேரும் சேரனும் என்றால் ரெஜிஸ்டர் மேரேஜ் தான் வழி. அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும் எங்களை புரிந்து கொள்ளும் வரைக்கும் எங்க அம்மாவுக்கும் உங்க புருஷனுக்கும் இது தெரிய வேண்டாம் என்று அருண் சொல்ல, அதற்கு மீனா யோசிக்கிறார்.

மீனா சொன்ன வார்த்தை
சீதா ஏற்கனவே ஒரு முறை மீனாவிடம் பேசும்போது அப்பா இருந்திருந்தா அருணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று பேசியதை மீனா நினைத்து பார்த்துவிட்டு, என் புருஷனை மீறி நான் எந்த விஷயத்தையும் செஞ்சது கிடையாது. அதனால் எனக்கு யோசிக்கிறதுக்கு டைம் கொடுங்க என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கத்தில் விஜயா சாமியாரை சந்திக்க போக அங்கு ரோகிணி மறைந்து இருந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஏமாற்றும் சாமியார்
அப்போது சாமியார் விஜயாவிடம் நான் உங்களுக்கு கொடுத்த தாயத்து தப்பா ஆயிடுச்சு. முதல்ல அந்த தாயத்தை கழட்டுங்க என்று சொல்லி, மனோஜ் கையில் இருக்கும் தாயத்தை கழட்டி கொடுத்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் சாமியார் விஜயா மீது விபூதியை எடுத்து அடித்து உங்க வீட்டு வாசல்ல எமதர்மராஜா பாச கயிரோட காத்துட்டு இருக்குறாரு, உங்க உயிரை காப்பாற்றுவது உங்களோட மூத்த மருமகள் தான்.
விஜயாவுக்கு வந்த சந்தேகம்
உங்க மூத்த மருமகளால் தான் நீங்க உயிரோடு இருக்கீங்க, நீங்க இரவு தூங்கும் போது இனி தினமும் சிவப்பு சேலை தான் கட்டிக்கிட்டு தூங்கணும் என்று சொல்கிறார். அதற்கு விஜயா எதுவும் சொல்லாமல் அமைதியாக வெளியே வருகிறார். வெளியே வந்து மனதிற்குள் எனக்கு இது சந்தேகமா இருக்கு, யாரோ இப்படி பேச சொல்லி காசு கொடுத்த மாதிரி இருக்கு என்று நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பார்வதி உனக்கு கெட்டது நடக்க போகுதுன்னு சாமியாரை கூப்பிட்டு சொல்லி இருக்காரு நீ நைட்டு சிவப்பு சேலை கட்டிக்கோ என்று சொல்ல, அதற்கு விஜயா இதுல ஏதோ தப்பா இருக்கு நான் பாத்துக்கிறேன் என்று கிளம்புகிறார்.

சாமியார் கொடுத்த அதிர்ச்சி
பிறகு ரோகிணி சாமியாரிடம் நன்றி சொல்ல அதற்கு அவர் நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும் ஆனா உன் குடும்பத்துகிட்ட உண்மையை சொல்லி வாழ பாரு என்று சொன்னதும் ரோகிணியின் முகம் மாறுகிறது. மறுபக்கத்தில் மீனா கோவிலில் இருக்கும்போது அங்கு அருணுடைய அம்மா வருகிறார். அவர் மீனாவிடம் வந்து அருணுக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்ல மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு இந்த தயக்கமும் அமைதியும் தான் அருணையும் சீதாவையும் சேர விடாமல் இருக்கு என்று சொல்லிவிட்டு அவர் போய் விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications