சிறகடிக்க ஆசை: முத்துக்கு வந்த சந்தேகம், உண்மையை கண்டுபிடிக்க எடுத்த முடிவு.. மனோஜ்க்கு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜியின் பிறந்த நாளை ரோகிணி சர்ப்ரைஸ் ஆக கொண்டாடுகிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு உதவி செய்வதற்காக முத்து முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜை ஏமாற்றிய கதிரை கண்டுபிடிப்பதற்காக போலி சாமியார் ஒருவரை பார்வதி கூட்டிக்கொண்டு வர அதை உண்மை என நம்பும் மனோஜ் மற்றும் ரோகிணி அவரிடம் பவ்யமாக நடந்து கொள்கிறார்கள். அந்த சாமியாரும் தன்னுடைய கையில் இருக்கும் வெற்றிலையில் கதிரை தேடுவதாக நடித்து கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

போலி சாமியார்

பிறகு அதில் ஓட்டையை போட்டு இப்போ நான் அவரை கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்ல, ஸ்ருதி ஆமா தெரியுது அவருடைய கை தெரியுது என்று சொன்னதும் சாமியார் கோபமாகி இவங்க என்னை நம்பல. அதனால என்னால கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு மனோஜ் கொடுத்த பணத்தையும் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார். இதனால் முத்து, ஸ்ருதி என எல்லோரும் மனோஜை கிண்டல் செய்ய மனோஜ் ரூமுக்கு போய்விடுகிறார்.

அடுத்ததாக முத்து தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது என்ன விஷயம் என்று மீனா விசாரிக்க, இவன் இவ்வளவு படிச்சிருக்கான் ஆனாலும் மூடநம்பிக்கையை நம்பிட்டு இருக்கான்‌. அப்போ படிப்புக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லையா? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நானும் உங்க அண்ணன் அறிவாளியா இருப்பார் என்று முதலில் நினைத்தேன். ஆனால் இப்படி இருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இவன் இந்த பணத்தை கண்டுபிடிக்கிற மாதிரி தெரியல.

முத்து எடுத்த முடிவு

இது அப்பாவுடைய பணம் அதை நான் கண்டுபிடித்து ஆகணும் என்று சொல்ல, அதற்கு மீனா மாமா தான் நீங்க இந்த விஷயத்தை தலையிட வேணாம் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்க. அதற்கு முன்பு நாம சரின்னு விட்டுவிட்டால் இவன் கீழே விழுந்து அடி வாங்கிட்டு வருவான். இல்லனா இப்படித்தான் சாமியாரை கூட்டிக்கொண்டு வருவார். உருப்படியா எந்த விஷயமும் பண்ண மாட்டான்.

இன்ப அதிர்ச்சி

நம்ம கையில அந்த கோவிலில் இருந்து எடுத்த கதிர் உடைய போட்டோ இருக்கு. அதை வச்சு எனக்கு தெரிஞ்ச நண்பர்களிடம் தேட சொல்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மனோஜ் குளித்துவிட்டு வெளியே வரும்போது அவருடைய டிரஸ் பக்கத்தில் ஒரு ரோஜா பூ இருக்கிறது. அதை பார்த்து மனோஜ் குழப்பத்தில் இருக்கும் போது ரோகிணி ஓடிவந்து கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார்.

மனோஜ்க்கு பிறந்தநாள்

இன்னைக்கு முழுக்க உனக்கு நான் சர்ப்ரைஸ் தந்து கொண்டே இருப்பேன் என்று சொல்கிறார். பிறகு மனோஜ் சந்தோஷமாக ரூமை விட்டு வெளியே வர குடும்பத்திலிருந்து எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு நபர் வந்து உங்களது பெயரில் கார் புக் பண்ணி இருக்கிறது நீங்கள் என்ன கலர் வேண்டும் என்று செலக்ட் பண்ண வேண்டும் என்று சொல்ல நான் புக் பண்ணல என்று மனோஜ் சொல்லும்போது ரோகிணி நான் தான் உனக்காக புக் பண்ணுனேன் என்று சொல்கிறார்.

மனோஜ்க்கு சர்ப்ரைஸ்

பிறகு ஒரு நபர் வந்து கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அதுவும் ரோகிணியின் ஏற்பாடு என்று தெரிகிறது. பிறகு கேக் வெட்டி எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது வழக்கம் போல முத்து மனோஜை கிண்டல் செய்ய வருகிறார். அதற்கு ரோகிணி இன்னைக்கு ஒரு நாள் அவரை எதுவும் சொல்லாதீங்க என்று சொல்லிவிடுகிறார்.

முத்துவின் தவிப்பு

ஆனாலும் முத்துவால் மனோஜை கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்ல வந்து விட்டு பிறகு வாயை மூடி கொள்கிறார். அடுத்ததாக ரோகிணியும் மனோஜ் கடைக்கு கிளம்புகிறார்கள். அப்போது முத்து பரசுவின் மகள் கல்யாணம் இருக்கு மறந்துறாதீங்க என்று சொல்ல நான் தான் அங்கு மேக்கப் பண்ண போறேன் நான் எப்படி மறப்பேன் என்று சொல்லிவிட்டு ரோகிணி போகிறார்.

மீனாவுக்கு பாராட்டு

அடுத்த கட்டத்தில் எல்லோரும் பரசுவின் மகள் கல்யாணம் நடக்கும் மண்டபத்திற்கு வருகின்றனர். பரசுராமன் எல்லாரையும் வரவேற்று உள்ளே கூட்டிக்கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் கறிக்கடைக்காரர் மண்டபத்திற்குள் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பரசு அண்ணாமலையிடம் மீனா செய்த டெக்கரேஷன் சூப்பரா இருக்கு என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

விஜயாவின் புலம்பல்

விஜயா இன்னைக்கு முழுக்க இவங்க பாராட்டை தான் கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது நம்ம தலைவிதி என்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி நான் மேக்கப் பண்ணிட்டு வரேன் என்று மணப்பெண் ரூமிற்கு போகிறார். மேக்கப் போட ஆள் வந்திருக்காங்க என்று கறிக்கடைக்காரரிடம் ஒரு ஆள் வந்து சொன்னதும், நான் அவங்களுக்கு ஜூஸ் கொடுத்துட்டு வரேன் என்று கறிக்கடைக்காரர் வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+